மனிதர்கள் அனைவரும் ஒன்றுபோலத்தானா?

Yawning Infant, August 2018.jpg

 வலிமையான பாதுகாப்பு

உடலுக்கு ஒரு வடிவத்தை கொடுப்பது எலும்புகள். இவை முடி, நகம் போல உயிரற்றவை அல்ல.எலும்புகள் உடைந்தாலும், அவற்றை சரியாக பொருத்தி வைத்தால் வளரும். எலும்புகள் உயிர்திசுக்களைக் கொண்டவை. எனவே, அவை உடைந்தால் மருத்துவர் எக்ஸ்ரே பார்த்து கமிஷன் வாங்கிக்கொண்டாலும் எந்த நிலைமையில் உள்ளது என்று கூறுவார். அதைப் பார்த்து நீங்கள் சிகிச்சையை தீர்மானித்துக்கொள்ளலாம். 

Bones of skeletal system.jpg

குழந்தையின் உடலிலுள்ள எலும்புகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக இருந்து பிறகே வலிமையாகின்றன. 


வயது வந்தோரின் இருகை மணிக்கட்டில் தலா இருபத்தேழு எலும்புகள் உண்டு.அதேபோல முழு வளர்ச்சி அடைந்த வயது வந்தோரின் உடலில் 206 எலும்புகள் இருக்கும். 


நுரையீரலை மார்பெலும்புகள் பாதுகாக்கின்றன.கால் எலும்புகளை உள்ளே ஆராய்ந்தால் தேன்கூடு போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பு தோற்றத்தில் இப்படி இருந்தாலும் வலிமையானது,எடை குறைவானது. 


இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் மூட்டு இணைப்பு. கை, இடுப்பு ஆகிய பகுதிகளில் அதிக அசைவுகளுக்கு ஏற்றபடி எலும்புகளின் வடிவம் கோளம், செவ்வக வடிவில் அமைந்துள்ளது. 


குழந்தையின் வளர்ச்சி


தாயின் கருவறையில் குழந்தை நாற்பது வாரங்களை செலவிட்டு ஓரளவுக்கு உறுப்புகள் வளர்ச்சி பெற்றபிறகே பிறக்கிறது. 


தந்தையின் விந்தணு,தாயின் கருமுட்டைக்குள் சென்று பிளவுபட்டு செல்கள் அதிகரிக்கின்றன. இந்த செல்களில் குழந்தை எப்படி இருக்கும் என்பதற்கான விதிகள் உள்ளது. அதன்படியே செல்கள் கட்டமைக்கப்படுகின்றன. 


குழந்தை தன் முழு வளர்ச்சியை அடைந்த பிறகு, கருப்பையில் இருந்தாலும் வெளியே உள்ள குரல்களைக் கேட்க முடியும். கேட்டு பழகிய குரலை அடையாளம் காண இயலும்.


குழந்தையின் பாதுகாப்பிற்கு கருப்பையில் உள்ள நீர்மமே உதவுகிறது. குழந்தை வளர்ந்து பிறக்கும் நிலை வரும்வரை சாப்பிடுவது, மூச்சுவிடுவது ஆகியவை நடைபெறாது. பதிலாக தாயின் உடலில் இருந்து நீளும் தொப்புள்கொடி குழந்தையைக் காக்கிறது. குழந்தை பிறந்தபிறகு இதை வெட்டிவிடுகிறார்கள். இந்த கொடி இருந்த அடையாளம்தான்,தொப்புள்.


குழந்தை உருவாகி வளர்ந்தாலும் பிறப்பதற்கு முன்னர் அதன் நிலை தலைகீழாக மாறுகிறது. இதில் ஜோதிட மாயை ஏதுமில்லை. இயல்பாக அப்படி நடைபெறுகிறது. குழந்தை கருவில் உள்ள ஐந்தாவது, பத்தாவது வாரத்தில் கை, கால்கள் சிறு ஆப்பிள் அல்லது ஆலி்வ் விதைபோல முளைவிட்டு வளரத்தொடங்குகின்றன.


குழந்தை பிறக்கும்போது அதன் உடலில் 3 ட்ரில்லியன் செல்கள் இருக்கும். 


கருப்பையில் 26ஆவது வாரத்தில் குழந்தை கண்திறந்து பார்க்கத் தொடங்குகிறது. 


மனிதர்கள் அனைவரும் ஒன்றுபோலத்தானா?


மனிதர்கள் குண இயல்புகளில் வேறுபடலாம். அப்படி வேறுபடுவது இயற்கையும் கூட. ஆனால், அவர்களின் ரத்தம், எலும்புகள், உறுப்புகள் அடிப்படையில் ஒன்றுதான். உயரம், குள்ளம், சுருட்டைமுடி, கோரைமுடி என இருந்தாலும் மனிதர்களின் பெரும்பாலான ஒற்றுமை செயலில் மனிதநேயத்தில் ஒன்றாக இருக்கலாம். வேறுபட்ட அடையாளங்களை வைத்து மனிதர்களை எளிதாக அடையாளம் காண முடிவது கூட நல்லதுதானே? ஒன்றும் மோசமில்லை.


ஒரு கருமுட்டை இரண்டாக பிரிவதால்தான் இரட்டையர்கள் உருவாகிறார்கள். இதனால்தான் அவர்களின் தோற்றம் ஒன்றுபோலவே உள்ளது. 


ஒருவரின் தலைமுடி வளருவதற்கு கெராட்டின் என்ற வேதிப்பொருள் காரணமாக உள்ளது. ஆனால், அதன் தலைமுடி நிறம் எப்படி இருக்கவேண்டுமென மெலனின் நிறமி தீர்மானிக்கிறது.


 images

https://commons.wikimedia.org/w/index.php?search=human+skeleton&title=Special%3AMediaSearch&type=image

 


 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!