இடுகைகள்

தோழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பால்ய கால தோழியால் எதிர்மறை குணங்களைக் கொண்டவன் மனந்திருந்த வாய்ப்பு கிடைத்தால் - கதலோ ராஜகுமாரி

படம்
  கதலோ ராஜகுமாரி நரரோகித், நமீதா பிரமோத் இசை – இளையராஜா, விஷால் சந்திரசேகர்   சினிமாவில் வில்லனாக நடிக்கும் அர்ஜூன் சக்ரவர்த்தி, நிஜத்திலும் ஆணவம் பிடித்தவராக யாரையும் மதிக்காத இயல்புள்ளவராக இருக்கிறார். அவரை டேட்டிங்கிற்கு அழைத்த இளம்பெண், அவரது ஈகோ பற்றி விமர்சித்துவிட்டு உன்னோடு காதல் மட்டுமல்ல வாழ்வதும் கடினம் என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறாள். இதனால் அர்ஜூன் மனதளவில் தான் ஏன் இப்படி ஆனோம் என யோசிக்கிறார். அதற்கு விடையாக பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதில் பாதிக்கப்பட்டவர், தன்னை அப்படி மாற்றிய சிறுவயது தோழியைத் தேடி கிராமத்திற்கு செல்கிறார். அவர் தனது தோழியைச் சந்தித்தாரா, தனது பிரச்னைக்கு தீர்வு கண்டாரா என்பதே கதை. நர ரோகித் நடித்துள்ள கதை என்பதற்காகவே பார்த்த படம். அவரும் ஏமாற்றவில்லை. ஆனால் கதை சொன்ன இயக்குநர் அவரை ஏமாற்றிவிட்டார். அர்ஜூன் சக்ரவர்த்தியாக, தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற வில்லன். ஆனால் அவர் சொல்லியதை அனைத்தும் இயக்குநர் கேட்பது என்பது நம்புகிறது போல இல்லை. தெலுங்கு சினிமா உலகமே ஹீரோக்களை நம்பித்தானே இருக்கிறது. இந்த நிலைய...

லவ் இன்ஃபினிட்டி: கவி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!

படம்
imgur.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: விதேஷ் தேஷ்முக், ஷிரவந்தி ஸ்கூல் லவ் எல்லாம் பார்த்தோம். அதை பின்னாடி நான் எழுதுவேன். முதலில் என் தோழி கவியைப் பற்றி சொல்லிவிடுகிறேன். கவி சொந்தக்காரின்னாலும் டவுனில் வளர்ந்தவள். காசு வித்தியாசம் எப்பவும் சொந்தங்களுக்கிடேயே கத்தி மாதிரி இருக்கும. சாதின்னாலும் கல்யாணம்னு வரும்போது அந்தஸ்து பார்த்து தூரத்து சொந்தங்களுக்கு பொண்ண குடுக்கிறாங்களே அது எதுக்கு? சொந்தம்கிறதை விட காசுங்கிறது எப்பவும் அல்டிமேட். கவியோட வசதியும் அப்படித்தான். காசு வெச்சிருக்கிறவங்க கொஞ்சம் அதுக்கேத்தா மாதிரி அலட்டலா இருப்பாங்க. ஆனா கவிகிட்ட அதுமாதிரி பந்தா ஏதும் கிடையாது. பிரியமா எல்லார்த்துக்கிட்டேயும் பேசுவா. எப்பவும் உற்சாகமா இருக்கிற அவளோ முகத்தை நான் போன் வாங்குனா ஸ்கீரின் சேவரா வால்பேப்பராக வைக்கணும்கூட நினைச்சிருந்தேன். எனக்கு கிடைச்ச 1100 வில, வால்பேப்பர் செட்டிங்கே கிடையாது என்ன செய்வேன்? பள்ளிக்கூட பாடங்களைப் பொறுத்தவரை கவி சுமார்தான். ஆனா மத்த விஷயங்களில் செம கெட்டி. அதுவும் ஃஅவளோடு ஃபிரெண்ட்ஸா உயிரையே விடுவா. பணக்காரங்ககிட்...

லவ் இன்ஃபினிட்டி: என் ஆயுசுக்குமான தோழியடி நீ!

படம்
pinterest/behance லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: சரஸ், வித்யா பாலன் எனக்கு கவி எழுதிய கடிதங்கள் அனைத்தும் விசேஷமானவை. அவளின் அன்பு முழுக்க முழுக்க எனக்கே கிடைத்த காலம் அது. பயன் எதிர்பார்க்காத பாசம் சாதாரணமா என்ன? கவி எப்போதும் எனக்கு ஸ்பெஷல்தான். மணிரத்னம் எப்படி ஏ.ஆர். ரஹ்மானுக்கு முக்கியமோ அதேபோல்தான் என வைத்துக்கொள்ளுங்கள். அன்புத் தோழனுக்கு, ப்ரியமுடன் தோழி எழுதிக்கொள்வது, நீ நலமாக உள்ளாயா? வீட்டில் எல்லோரும் நலமா? அப்பாவுக்கு இப்போது எப்படி உள்ளது? நீ திடீர்னு உன்னைப் பத்தி கேட்டதும் எனக்கு செம Shock. எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியல. உன் பிரார்த்தனையில் கொஞ்சம் நிறைவேறியிருக்கு. குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டது. ஆனால் மனசுதான் என்னவோ பாரமா இருக்கு.. எனக்கே தெரியுது. எல்லார்கிட்டேயும் பேசறேன். சிரிக்கிறேன். ஆனா எதிலேயும் ஒட்டாம உள்ளுக்குள்ள நான் நார்மலா இல்ல. சந்தோஷப்படறதுக்கு நிறைய விஷயங்கள் நடந்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயங்கள். ஆனா... அதையெல்லாம் என்னால சந்தோஷமாக அனுபவிக்க முடியல. யோசிச்சுப் பார்த்தேண்டா.. இதைப்பத்தியெல்லாம் நான் உன்கிட்ட இதுவர...

லவ் இன்ஃபினிட்டி: நிஜம் சொல்லடி தோழி!

படம்
pinterest லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அரசு கார்த்திக் நான் என்னைப் பற்றி நிறைய உனக்கு சொல்லிவிடணும்னு நினைக்கிறேன். ஆனால் என் மனசும் எழுத்தும் அதற்கு உதவுமான்னு எனக்கு தெரியல. நான் நிறைய உங்கிட்ட பேசணும்னு நினைச்சு College வந்தால் உன் முகத்தைப் பார்த்ததும்  I'm Gone. பொய்யில்லை. என்ன பேசணும்னு அத்தனையையும் மறந்து போயிடுறேன். ஆணும் பொண்ணும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிட்டு வெச்சிருக்கிற நட்பு காதலை விட புனிதமானதுன்னு நான் நம்புறேன். பிரிய தோழி! உன் கண்களில் கண்ணீர் வர நானும் ஒரு காரணம் என்பது வலிக்க வைக்கிறது. யாரோ சிலரால் நாம் பாதிக்கப்பட்டுவிட்டோம். ஆனாலும் இதற்கு நான் காரணம்னு நினைக்கும்போது குற்றவுணர்ச்சி கண்ணில் விழுந்த தூசியாக உறுத்துகிறது. இது உன் மனசுக்கும் தெரியும். அதனால்தான் என்கூட பேசுவதற்கு நீ மறுக்கிறாய். இல்லையா? அப்படியில்லையென்று சொல்லேன். Please. நீ அப்படி சொல்வாய் என்றுதான் வகுப்பில் உன் முகம் பார்த்தே உட்கார்ந்திருக்கிறேன். பாராமுகமாய் அமர்ந்து மனம் உடைக்கிறாயே! என்னைப் பற்றி எழுதியவைகளில் நிறைய விஷயங்கள் விடுபட்டு இருக்கிறது...

லவ் இன்ஃபினிட்டி: நீ என்னிடம் மட்டும் பேசேன் தோழி

படம்
pinterest லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: கா.சி.வின்சென்ட் அணைதாண்டி வெள்ளமாய் விரைந்தோடி வரும் ஆற்றிடம் விலாசம் கேட்க முடியுமா? அதுபோலத்தான் இத்தனை குறைகளிலிருந்தும் என்னிடம் சில குறைகள் இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன். மனதில் உள்ளதை மறைக்காமல் வெளியில் சொல்வதால் நிறைய விளைவுகள் விளைந்திருக்கின்றன. வெளுத்ததெல்லாம் சோறு என்று நம்பும் வெகுளி நான். எல்லா பசங்களும் விவரமா இருக்காங்க நீயும் இருக்கிறயே என்றாள் அம்மா. தொண்டு சுத்துறத நிறுத்திட்டு உருப்படற வழியப்பாரு என்றார் அப்பா. வசவுகளை வாங்கிக்கொண்டு யோசித்தேன். எப்படி இந்த உலகில் வாழப்போகிறேன்? என்னால் சராசரியாக வாழ முடியாது. வாழத் தெரியாது. வாழவும் மாட்டேன். சாதனையாளன் சராசரி வாழ்க்கை நடத்தலாமா? நிரந்தரமானவன் சரித்திரம் படைப்பவன் சாவைக் கண்டு பயப்படலாமா? இந்த உலகம் மட்டம் தட்டும் முட்டாள்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. பணம்தான் வாழ்க்கை என்று வரைமுறை தந்தவர்கள் ஏராளம். பணத்தால் பதவியைப் பிடித்தவர்களும் ஏராளம். வறுமை எனக்கு இல்லை. ஆனால் அதன் சுகம் அறியமுடியாததே என் வருத்தம். எதை சொல...