இடுகைகள்

கார்பன் டை ஆக்சைடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூமிக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கியமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கேள்வியும் பதிலும்! சூழலில் கார்பன் முக்கியமா? கார்பன் டையாக்சைடு பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று. இதில், கார்பன் முக்கிய பகுதிப்பொருள். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைட் வாயு, சூரிய வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. பூமியிலிருந்து, சூரிய வெப்பம்  முழுவதும் வெளியேறிவிடாமல் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.  வளிமண்டலத்தில்  கார்பன் டையாக்சைட் வாயு இல்லையெனில், பூமியில் உள்ள கடல் விரைவில் உறைந்துபோய்விடும். அதேசமயம், மனிதர்களின் செயல்பாட்டால் காற்றில் கார்பன்டையாக்சைட் வாயு அதிகரிக்கும்போது, வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரிக்கும். உலகில் வாழும் அனைத்து பொருட்களிலும் கார்பன் உண்டு. மனிதர்களின் உடலிலும் கூட உண்டு. ஒருவர் தோராயமாக 45 கிலோ என கணக்கிட்டால் அவரது உடலில் 8 கிலோ கார்பன் இருக்கும். தாவரங்களிலும் பகுதியளவு கார்பன் உண்டு.  படிம எரிபொருட்கள் எவை? பூமியில் மட்கிப்போன தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றுக்கு,  படிம எரிபொருட்கள்  என்று பெயர்.  https://climatekids.nasa.gov/carbon/

கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் பனிக்காடு

படம்
  பனிக்காடு! உலகில் பனி கொட்டும் சூழலைக் கொண்ட காடுகள் (Snow forest), பூமியின் நிலப்பரப்பில் 17 சதவீதம் உள்ளன. பனிக்காடுகள் சூழுலுக்கு முக்கியமானவை. இங்கு, ஆண்டில் பாதி நாட்களின் வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸ்தான்.  பூமியின் வடக்குப்பகுதியில் பனிக்காடுகளைப் பார்க்கலாம். இங்கு, பனிப்பொழிவு இருப்பதால், குளிரும் அதிகமாக இருக்கும். அமெரிக்கா, ஸ்வீடன், ரஷ்யா, நார்வே, ஜப்பான், ஃபின்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் பனிக்காடுகள் உள்ளன. நரி, எலி, ஓநாய், கலைமான் ஆகிய விலங்கினங்கள் இங்கு வாழ்கின்றன. இனப்பெருக்க காலத்தில் 300க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் வந்து செல்கின்றன.  கார்பனை உறிஞ்சி வெப்பமயமாதலைக் குறைப்பதில் பனிக்காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இக்காடுகளிலுள்ள மரங்களை கட்டடம் கட்ட பயன்படுத்துகின்றனர். சாலை மற்றும் சுரங்கங்கள் அமைக்கவும்  தேவையான இடத்திற்காக காடுகளை அழிக்கின்றனர். பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக மரங்களை வெட்டினால், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மரக்கன்றுகளை நடுவது அவசியம். இதன்மூலம் பனிக்காடுகள் முற்றாக அழிவதைக் கட்டுப்படுத்த முடியும். ஃபின்லாந்தின் வடக்குப்