இடுகைகள்

மதுவிலக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதுத்தடை வளர்ச்சியை குலைக்கும் - சேட்டன் பகத்!

படம்
giphy.com நான் மதுத்தடை தவறு என்று சொல்வதற்காக வருத்தப்படவில்லை. முக்கியமான குறிப்பு, நான் மது அருந்துபவனல்ல. குஜராத்தில் இன்றும் மதுவுக்கு தடை உள்ளது. காந்தி போர்பந்தரில் பிறந்ததால் அரசு அவருக்கு மரியாதை செய்வதற்காக இத்தடையை நீக்காமல் அப்படியே பெயரளவுக்கு காப்பாற்றி வருகிறது. மணிப்பூர், மிசோரம், ஏன் கேரளத்தில் கூட மது தடை அமலாகி பின் கைவிடப்பட்டது. இந்தியர்கள் பொதுவாக சிக்கலான பிரச்னைகளைப் பற்றி பேச மறுக்கின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் வராத சினிமாவை கையில் எடுத்துக்கொண்டு நட்பை வளர்க்கிறார்கள். நான் அதைக் குறையாக கூறவில்லை. முக்கிய விவகாரங்களில்  அவர்கள் சரியான அதிரடி முடிவுகளை எடுத்தே ஆகவேண்டும். மது தடை என்ற முடிவை நான் எதிர்க்கிறேன். அது இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானது என்று உறுதியாக நம்புகிறேன். உண்பது, உடுப்பது, வணங்குவது போன்ற விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்பது என் கருத்து. மது தடையால் குஜராத் அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை இழக்கிறது. இதற்காக மக்களின் தினசரி பயன்பாட்டுப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இது தவறான முறைதானே? மது விற்பது என்பதும், அதன

அகில உலக குடிமகன் சங்கம்!

படம்
ஆல்கஹால் குடிகாரர்கள் உலகமெங்கும் ஆல்கஹால் பருகும் அளவு அதிகரித்து வருகிறது. இதிலும் சீனர்கள் இந்தியர்களை மிஞ்சி விட்டார்கள். அண்மையில் இதுகுறித்து லான்செட் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தொண்ணூறுகளை விட 2017 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வயது வந்தோர் பருகும் ஆல்கஹாலின் அளவு பத்து சதவீதம் கூடியுள்ளது.  மால்டோவா அனைத்து நாடுகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கடுத்து ரஷ்யா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வருகின்றன. மால்டோவா நாடு தனிநபராக குடிக்கும் ஆல்கஹால் அளவு பதினைந்து லிட்டர்.  தொண்ணூறுகளில் உலகில் குடிக்கும் மதுபானங்களின் சராசரி அளவு 5.9 லிட்டராக இருந்தது. தற்போது இந்த அளவு 6.5 லிட்டராக மாறியுள்ளது. இந்தியாவில் 40 சதவீத ஆண்களும் 22 சதவீத பெண்களும் மது அருந்துகின்றனர். இது தொண்ணூறுகளைவிட இருமடங்கு அதிகம். இந்த எண்ணிக்கை இப்படியே வளர்ந்தால் உலகமெங்கும் 2030 ஆம் ஆண்டு அரைவாசி வயது வந்தோர் மதுவருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து பிரசாரத்தை செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 10 சதவீத மக்களை இப்பழ