இடுகைகள்

இந்தி சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரையுலகில் இருந்த அதிகார விளையாட்டை எதிர்கொள்ள கல்வி உதவியது! - ஸ்வரா பாஸ்கர், இந்தி நடிகை

படம்
                ஸ்வரா பாஸ்கர் நடிகை தானு வெட்ஸ் மானு படத்தில் பாயல் என்ற பாத்திரத்தில் நடித்து மக்களின் அபிமானம் பெற்றவர் . அனார்கலி ஆப் ஆரா என்ற படத்திலும் தனது நடிப்பை கவனிக்க வைத்தார் . ராஸ்பரி படத்தில் பாலியல் ஆர்வம் கொண்டவராக நடிப்பது , வீர் டி வெட்டிங் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண் என ஸ்வரா பாஸ்கர் நடித்த பல்வேறு பாத்திரங்கள் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம் தந்தவை . பல்வேறு பாத்திரங்களின் வழியாக நடந்த உங்கள் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? ஒருவர் நடிக்கும் பாத்திரத்தின் வழியாக பெண்களை வலிமையாக காட்டும் படங்கள் உருவாகிறது என்பதை நான் நம்பவில்லை . ஒருவர் தனது துறையில் வலிமையாக வெற்றியைக் கொடுக்கும்போது அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது . சிறந்த நடிகர் ஒருவர் நடிக்கும்போது அதன் நீளம் அதனை பாதிப்பதில்லை . நாட்டில் உள்ள சிறந்த நடிகர்களான ஜானி வாக்கர் , பிரான் , அம்ரிஷ் ஆகியோர் முக்கியமான சிறிய பாத்திரங்களில்தான் நடித்து புகழ்பெற்றார்கள் . ஒவ்வொரு நடிகரும் அவரது பாத்திரத்தை நாயகராகவே நினைக்கிறார் . இந்த வகையில் நான் நடிக்கும் துணைநடிகை பாத்திர

கதாபாத்திரத்தை எந்தளவு உள்வாங்கி நடிக்கமுடியுமோ அந்தளவு நடித்திருக்கிறேன்! - பூமி பட்னாகர்

படம்
            பூமி பட்னாகர்       பூமி பட்னாகர் ஒவ்வொரு நடிகையும் முழுப்படத்தையும் தன் தோளில் தாங்க ஆசைப்படுவார்கள் . உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது . எப்படி உணர்கிறீர்கள் . அதுவும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகிற படமாக உள்ளதே ? சில மாதங்களுக்கு முன்னர் எதற்கென்றே தெரியாமல் மனச்சோர்வு அடைந்திருந்தேன் . ஆனால் இனிமேல் அப்படி சூழல் இருக்காது . துர்காமதி படத்தை 190 நாடுகளில் சப்டைட்டிலோடு பார்க்க முடியும் . இப்போதுள்ள நிலையில் படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியும் . இது சரியான முடிவுதான் என்று நினைக்கிறேன் .    இதன் மூலப்படத்தில் நடித்த அனுஷ்காவோடு் உங்களை ஒப்பிடுவார்கள் . இது உங்களுக்கு பதற்றமாக உள்ளதா ? அப்படியெல்லாம் இல்லை . நான் பாத்திரத்தை எந்தளவு முடியுமோ அந்தளவு உள்வாங்கி நடித்திருக்கிறேன் . இயக்குநர் எதிர்பார்த்த அளவுக்கு முயன்று இருக்கிறேன் . கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுத்துள்ளேன் என்று கூறுவேன் . பெரும்பாலான திகில் படங்களில் பாதிக்கப்பட்டவராக பெண்களே இருக்கிறார்கள் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? அனைத்து கதைகளிலும் பெண்கள் ம

நாடக மேடையிலிருந்து உருவாகி வந்தவன் நான். அதுதான் என்னை திரைப்படத்திற்காக உந்தியது! - அனுராக் பாசு

படம்
        anurag basu         அனுராக் பாசு இந்தி திரைப்பட இயக்குநர் உங்கள் திரைப்படம் பொதுவாகவே பெரிய கேன்வாஸ் கொண்டதாகவே இருக்கிறதே? லூடோ அந்த வகையைச் சேர்ந்ததுதானா? பெரிய படங்களாக எடுக்கவேண்டும் என்று நினைத்து எடுப்பதில்லை. நான் கதையை எழுதும்போது அதனை காட்சிரீதியாக யோசித்து பார்ப்பேன். அப்படி பார்த்து பிட்டு கதாபாத்திரத்திற்கு அபிஷேக் பச்சனையும், சட்டு பாத்திரத்திற்கு பங்கஜ் திரிபாதியையும் நடிக்க கேட்டு அணுகினேன். அவர்களும் அதிர்ஷ்டவசமாக அதற்கு ஒகே சொல்லிவிட்டனர். சான்யா மல்கோத்ராவும், அபிஷேக் பச்சனும் நீங்கள் படத்தை இயக்கு வதால்தான் உள்ளே வந்தார்கள் என்று கூறப்படுகிறதே? நான் இதற்கு ஏதும் சொல்லமுடியாது. அப்படியும் இருக்கலாம். செட்டில் நான் உருவாக்கும் சூழல் அப்படி அவர்களை யோசிக்க வைத்திருக்கலாம். நீங்கள் தொடக்கத்தில் டிவி தொடர்களை இயக்கியது திரைப்படங்களை இயக்குவதற்கு உதவி செய்கிறது என்று கூறலாமா? டிவி என்று இல்லை. நான் நாடகத்திலிருந்து காட்சியை எப்படி ஒருங்கிணைக்கிறேன் என்று கற்று வந்திருப்பதாக நினைக்கிறேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியதில்லை. நாடகமேடைதான் எனது ஒரே பள்ளி.

கதை சொல்லியாகும் பொறியியல் மாணவனின் போராட்டம்! தமாஷா 2015 - இம்தியாஸ் அலி

படம்
         Directed by Imtiaz Ali Music by A. R. Rahman Cinematography Ravi Varman   நம் மனம் சொல்லும் விஷயத்தை செய்வதா, குடும்பம் சொல்லும் சமூக அழுத்தத்திற்கு இடம் கொடுத்து ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதா என்று சொல்லும் படம்.   பிரான்சில் கார்சிகா என்ற நகரில் டான், மோனா டார்லிங் என்ற இருவரும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பில் மோனா டார்லிங் தனது பாஸ்போர்டை, பேக்கை பறிகொடுத்துவிடுகிறாள். அவளுக்கு டான் உதவுகிறான். அறை, உணவு கொடுத்து அவளை தங்க வைக்கிறான். அவன் அங்கு ஜாலியாக நாடோடி போல தங்கி இருக்கிறான். இருவரும் ஒருவரைப் பற்றி பொய்யை மட்டும் சொல்வது என முடிவு செய்துகொண்டு ஜாலியாக ஒன்று சேர்ந்து திரிகிறார்கள்.  மோனாவுக்கு டான் மீது காதல் ததும்பி வழியும் தருணம் வரும்போது, அவர்கள் பிரிய வேண்டி வருகிறது. பிரான்சிலிருந்து கிளம்பி இந்தியாவின் கொல்கத்தாவிற்கு வருகிறாள் மோனா. ஆனால் டானை அவளால் மறக்கவே முடியவில்லை. கிளம்பும்போது கொடுத்த முத்தம் வரை அனைத்தும் அவளுக்கு பரவசத்தை அளிக்கிறது.  இந்த நிலையில் டெல்லிக்கு அலுவலக விஷயமாக வருபவள் டானை சந்திக்கிறாள். டான் இப்போது முன்னர் சந்தித்தது போல தனது பெயரை

சமூக வலைதளங்களில் எதிர்மறையான விஷயங்கள் அதிகம் வருகின்றன! - பங்கஜ் திரிபாதி, இந்தி நடிகர்

படம்
        பங்கஜ் திரிபாதி இந்தி நடிகர் ஒரு படம் ஓடிடியில் வெளியாவதற்கும், அதன் பட்ஜெட்டிற்கும் தொடர்பு உள்ளதா? ஒரு படத்தை அதன் வருமானம், பட்ஜெட் வைத்து திட்டமிடக்கூடாது என்று நினைக்கிறேன். ஓடிடியைப் பொறுத்தவரை வார இறுதியில் வருமானம் கிடைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்கள் படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள். இல்லையெனில் அதனை புறக்கணித்து விடுவார்கள். நாம் கதை சொல்லுவதில் இன்னும் கவனமாக இருப்பதுதான் முக்கியம். நீங்கள் உங்கள் டிவிட்டர் கணக்கை முடக்கி விட்டீர்களே ஏன்? அதில் நிறைய எதிர்மறை விஷயங்கள், அரசியல் வருகின்றன. நான் இரு நாட்களுக்கு ஒருமுறை எனது சமூக வலைத்தள கணக்குகளை சோதிப்பேன். மொபைல் போன்களையும் சமூக வலைத்தளங்களையும் குறைவாக பயன்படுத்துவது நமக்கு நல்லது. அவை நம்மை பயன்படுத்திக்கொள்வதை நாம் எப்போதுமே அனுமதிக்க கூடாது. மிர்ஷாபூர் வெப் தொடரில் வன்முறை அதிகமாக உள்ளதே? இதன் இரண்டாவது பகுதியும் அப்படித்தானா? நான் வன்முறையின் ரசிகன் அல்ல. கடந்த ஏப்ரல் பொதுமுடக்க காலத்தில்தான் நான் முழு தொடரையும் பார்த்தேன். இரண்டாவது பகுதியில் வன்முறை குறைவாகவே இருக்கும். புதிய கதாபாத்திரங்கள

எதுவும் செய்யாமல் இருக்க ஆசைப்பட்டேன். பெருந்தொற்று காலம் தற்செயலாக கிடைத்தது! நவாசுதீன் சித்திக்

படம்
      நவாசுதீன் சித்திக்   நேர்காணல் நவாசுதீன் சித்திக் படப்பிடிப்பு இல்லாத காலம் எப்படி இருந்தது ? எனக்கு படப்பிடிப்பு இல்லாத காலம் தேவைப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும் . பெருந்தொற்று காலகட்டம் நான் எதிர்பாராமல் எனக்கு கிடைத்தது . உத்தரப்பிரதேசத்தில் உள்ள எனது புதானா கிராமத்தில் விவசாய வேலைகள் செய்தேன் . இக்காலகட்டத்தில் 250 படங்களை பார்த்தேன் . டென்ஷில் வாஷிங்டன் , டேனியல் டே லூயிஸ் , ஆன்டனி ஹாப்கின்ஸ் ஆகிய எனக்குப் பிடித்த நடிகர்களின் படங்களைப் பார்த்தேன் . இது எனது சினிமாக்களை மேம்படுத்த உதவும் என நம்புகிறேன் . சினிமாவில் இருபது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறீர்கள் . உங்கள் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள் . நான் இப்போதும் வேலை செய்துகொண்டிருக்கிறேன் . இனியும் பணியாற்றுவேன் என்று நினைக்கிறேன் . சிலசமயங்களில் நான் நடிக்கும் படம் வெற்றிபெறும் . அல்லது தோல்வியுறும் . இது எனது கையில் கிடையாது . கதாப்பாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் நடிக்கிறேன் . அதில் உள்ள சவால்கள் என்னை மெருகேற்றுகின்றன . நாயகனாக நடிக்கும் படங்களில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் .

பெண்கள் கல்வி பற்றி முடிவெடுக்கும் முடிவு எப்படியிருந்தாலும் சரிதான்! - வித்யா பாலன்

படம்
          வித்யாபாலன்     வித்யாபாலன், இந்தி திரைப்பட நடிகை நீங்கள் அடுத்தடுத்து நடித்த மூன்று படங்களுமே வெற்றி பெற்ற பெண்கள் சார்ந்த கதைகள்தான். இக்கதைகளை நீங்களாகவே இப்படி வேண்டும் என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களா? அப்படிக்கூறமுடியாது. ஆழ்மனதில் இதுபோன்ற படங்களில் நடிக்கும் ஆசை இந்த முறையில் வெளிப்பட்டிருக்கலாம். முன்னர் ஆண்கள் வென்றதை படமாக எடுத்தார்கள். இப்போது பெண்கள் முறை என்று கூட வைத்துக்கொள்ளலாம்.  வெற்றி பெற்ற பெண்கள் என்று நீங்கள் சொன்னாலும் கூட அவர்களுக்கு இடையே ஒற்றுமைகள் அதிகம் கிடையாது. சுலு என்ற பெண்ணுக்கு விண்வெளிக்கு ராக்கெட்டுகள் அனுப்புவதை பற்றி ஏதும் தெரியாது. அவள் சகுந்தலா தேவி அளவுக்கு புத்திசாலியும் கிடையாது. சினிமா என்பதை சூழல்களை பிரதிபலிக்கும் கண்ணாடி என்று பார்க்கலாம். சுலு வெறும் வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி என்பதைத் தாண்டி வெளியே செல்லவேண்டும் என்பதை விருப்பமாக கொண்டவள். அவள் தனது குடும்பத்தையும், கனவையும் ஒன்றுபோலவே நினைக்கிறாள். அதனை சமநிலையாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள். நமது நாட்டில் தாரா ஷிண்டே, சகுந்தலாதேவி, சுலோச்சனா ஆகியோர் எங்கும் நிறைந

நீங்கள் வாளை விரும்பினால் அதனால் தாக்கப்பட்டு இறக்கவும் தயாராக இருக்கவேண்டும்! - இந்தி நடிகர் சங்கி பாண்டே

படம்
      சங்கி பாண்டே       சங்கி பாண்டே , இந்தி நடிகர் காமெடி நடிகராக இருந்தீர்கள் . திடீரென வில்லன் பாத்திரங்களை எடுத்து நடிக்க ஆரம்பித்து வீட்டீர்களே ? நான் பிரேம் சோப்ரா , அம்ஜத் கான் , அம்ரிஷ் பூரி ஆகியோரின் ரசிகன் . இவர்களைப் பின்பற்றி வில்லனாக முயன்றேன் . ஆனால் எனக்கு இந்த பாத்திரங்கள் எளிதாக கிடைக்கவில்லை . பேகம் கான் , சாஹோ ஆகிய படங்களில் வில்லன் பாத்திரம் கிடைத்தது . இப்போது ஜீ 5 தொடரில் நடித்து வருகிறேன் . இது மாணவர்களால் கிண்டல் செய்யப்படும் . தெருவில் நாய்களால் விரட்டப்படும் ஆசிரியராக நடிக்கிறேன் . ஓடிடி தளத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? இந்தவகை திரையிடலுக்கு இதுவரை சென்சார் முறை கிடையாது . எனவே கிரியேட்டிவிட்டிக்கு எல்லையே இல்லை . இதன் காரணமாக பலரின் வீட்டுக்கு , ஹாலுக்கு ஏன் பாத்ரூம் கூட சென்றுவர முடிகிறது . சமூக வலைத்தளங்கள் எங்கும் சுஷாந்தின் மரணம் ஒட்டிய ஏராளமான எதிர்மறை கருத்துகள் நிறைந்துள்ளன . நீங்கள் உங்கள் மகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ? நீங்கள் வாளை விரும்பினால் , அதனால் தாக்கப்பட்டு இறக்கவும் தயாராக இருக்கவேண்டும் .

சினிமாவில் நடக்கும் மாற்றங்களை நான் ஏற்றுகொள்கிறேன்! - அமிதாப் பச்சன்

படம்
விகடன் அமிதாப் பச்சன், இந்தி திரைப்பட நடிகர் குலாப் சித்தாபோ படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்? இயக்குநர் சூஜித் சிர்கார். அவர்தான் படத்தின் கதை மற்றும் கதாபாத்திரமாக என்னை ஈர்த்தார். அவருடன் முன்பே நீங்கள் வேலை செய்து இருக்கிறீர்கள் அல்லவா? சூஜித் தன்னுடைய கதாபாத்திரம், அதன் முடிவுகள் பற்றிய தீவிரமான தன்மையைக் கொண்டிருப்பார். நீங்கள் அவரிடம் உங்கள் பார்வை, கருத்துகள் ஆகியவற்றை கூறினாலும் கூட அவர் கொண்டிருக்கும் கருத்து அடிப்படையில் அதுவே முதன்மை பெறும். கதாபாத்திரங்கள் மீது அவருக்கு உள்ள காதல்தான் அவரது படத்தை பேசவைக்கிறது. ஆயுஷ்மான் குரானாவோடு பணியாற்றிய அனுபவத்தை சொல்லுங்கள். அவர் திறமையான நடிகர். நீங்கள் பல்லாண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்கள். டிஜிட்டல் கேமரா, நேரடியான ஒலிப்பதிவு என பல்வேறு மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்? நான் திரைத்துறையில் 51 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த மாற்றங்களை ஏற்காவிட்டால் நான் இத்துறையில் இத்தனை ஆண்டுகாலம் பணியாற்றியிருக்க முடியாது. இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

என்னுடைய தனிப்பட்ட அரசியலை படத்தில் புகுத்துவது நியாயமல்ல! -இயக்குநர் அனுராக் காஷ்யப்

படம்
மாலைமலர்  பணமதிப்பு நீக்கம் பற்றிய படத்தை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்? 2015ஆம் ஆண்டு எஃப்ஐசிசிஐ ஸ்கிரிப்ட் பஜாரில் இந்த இந்தக்கதை கிடைத்தது. திருமணமான தம்பதிகள் இருவரின் கதை இது. இதில் ஏதோ ஒன்று இல்லாதது போல தோன்றியது. அதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கையை இணைத்தோம். கதாபாத்திரம், கதை என எதிலும் நான் என்னுடைய அரசியல் பார்வை கருத்துகளை திணிக்க முற்படவில்லை. ஏன் அப்படி கூறுகிறீர்கள்? திரைப்பட இயக்குநர் என்பவர் காலத்தை பதிவு செய்பவர்தான். நான் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் எதிலும் அரசியலைக் கலக்கவில்லை. படத்தின் திரைக்கதை எழுத்தாளர் நிகித் பவேயிடம் இதுபற்றி முன்னமே கூறிவிட்டேன். படத்தின் முக்கிய கதாபாத்திரமான சரிதாவுக்கு மோடியையும் அரசியலையும் தெரியாது. அவளுக்கு வங்கியில் வெகுநேரம் காத்திருந்து பணம் மாற்றுவது விரக்தியைத் தருகிறது. மன்மரிஸியான், முக்காபாஷ் ஆகிய படங்களைத் தொடர்ந்து சோக்டு என்ற படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். இதிலும் திரைக்கதை எழுத்தாளர்களை பயன்படுத்தியிருக்கிறீர்கள். மூன்றுபடங்களிலும் இப்படி அமைந்தது தற்செயலானதா? நான் முதலில் மாய வலையில் இருந்தேன். அதாவது இந்த அளவு வ

இர்பான்கானுக்கு மாற்றாக வேறு நடிகர் யாரும் இல்லை! - இயக்குநர் சுதீர் மிஸ்ரா

படம்
ity   சுதீர் மிஸ்ரா இந்தி சினிமா இயக்குநர் நன்றி: இந்தியா டுடே ஆங்கிலத்தில்: ஸ்ரீவஸ்தவா நெவாடியா பொதுமுடக்க காலத்தில் நீங்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக சீரியஸ் மேன் என்ற படத்தையும். ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக ஹோஸ்டேஜ் இரண்டாவது பகுதியையும் எடுத்து முடித்திருக்கிறீர்கள். இதற்காக வேலை செய்வது எப்படியிருக்கிறது? நாங்கள் வேறு காலத்தில் பணிபுரிய நேரிட்டால் சிரமமாகவே இருக்கும். இப்போது எதற்கும் கவலைப்படவேண்டியதில்லை. என்னுடைய உதவியாளர்கள் தொழில்நுட்பம் சார்ந்த நுட்பங்களை அறிந்தவர்கள். எனவே அனைத்து வேலைகளையும் எளிதாக முடித்துவிட முடிகிறது. விரைவில் ஹோஸ்டேஜஸ் தொடரை நீங்கள் இணையம் வழியாக பார்ப்பீர்கள். கோவிட் -19 காலம் சினிமாவை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா? நாம் உயிர்வாழ்வதற்கே ஆபத்துள்ள சூழ்நிலையாக வெளியுலகம் மாறியிருக்கிறது. இந்த நிலை தொடரக்கூடாது என்றே நினைக்கிறேன். நெருக்கடியான காலம் நம்மை நமக்கே அடையாளம் காட்டியிருக்கிறது. பொறுமையாக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. நீங்கள் நடிகர் இர்பான்கானுக்கு நெருக்கமாக இருந்தவர். இப்போது நவாசுதீன் சித்திக்கை வைத்து சீரியஸ் மேன்

தற்போது யூடியூப் போன்ற காட்சி ஊடகங்கள்தான் வலிமையாக உள்ளன! - பாடகி ஆஷா போஸ்லே

படம்
webneel ஆஷா போஸ்லே, இந்தி பாடகி உங்களுக்கு 86 வயதாகிறது. இந்த வயதில் திடீரென யூடியூபில் கணக்கு தொடங்கவேண்டுமென்று எப்படி தோன்றியது? பொதுமுடக்க காலத்தில் எனது பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவிட நேர்ந்தது. எனது பேத்தி யூடியூபில் தனக்கென தனி சேனல் தொடங்கி அதில் பாடல்களைப் பாடி எடிட் செய்து பதிவிட்டு வந்தாள். அதைப்பார்த்துத்தான் எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. உங்களது வாழ்க்கை அனுபவங்களை நீங்கள் நூலாக எழுதாமல் யூடியூபில் சொல்லிவருகிறீர்கள். இதற்கென ஏதாவது காரணம் உண்டா? யூடியூப் போன்ற காட்சி ஊடகத்தை எளிதாக பயன்படுத்த முடிகிறது. அனைவரும் இதனை எளிதாக பார்க்க முடியும். காட்சி ஊடகம்தான் இன்று வலிமையானதாகவும் உள்ளது. அனைவரிடமும் சென்று சேர்வதாக உள்ளது என்பதால் இதனை நான் தேர்ந்தெடுத்தேன். புதிய இசை, புதிய பாடல் வரிகள் மற்றும் ரீமிக்ஸ் பற்றி கருத்து என்ன? நாம் ஒரு பாடலை கிளாசிக் என்று சொல்ல காரணம், அதன் பாடல் வரிகள் மற்றும் இசைதான். இப்போது அதனை மாற்றி, பாடல்வரிகளை போட்டு மறு உருவாக்கம் செய்வதால் அதன் இயல்பு கெடுகிறது. கிளாசிக் என்று பாடல்களை சொல்லும் பொருளே இதன் காரணமாக மாறிவிடுகிறது. பொதுமு

உலகை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன் - ஜான்வி கபூர்

படம்
toi ஜான்வி கபூர், இந்தி திரைப்பட நடிகை பெருந்தொற்று பாதிப்பு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இச்சூழ்நிலை உங்களை எப்படி பாதித்துள்ளது? ஊரடங்கு சூழலுக்கு முன்னர் வரை நான் படப்பிடிப்புகளுக்கு செல்வது, வீடு திரும்புவது என்ற பரபரப்பாக இயங்கி வந்தேன். அதனால் திடீரென ஊரடங்கு அமலானபோது, என்னால் அச்சூழலுக்கு உடனே பொருந்திவர முடியவில்லை. சில நாட்கள் உண்மையில் கடுமையானதாக உணர்ந்தேன். பின்னர் மனமும், உடலும் அதற்கு பழகின. எனக்கு படத்தில் நடிப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. எங்களின் எதிர்காலம் பற்றி மனத்திற்குள் ஒரு பதற்றம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் என்ன செய்வது? தற்போதைய சூழ்நிலையை யாராலும் எதிர்பார்த்திருக்க முடியாது. நடக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள பழகி இருக்கிறேன். ஊரடங்கு காலம் முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு நம்மால் திரும்ப முடியும் என நம்புகிறீர்களா? நான் ஊரடங்கு கால சூழ்நிலையை என்னை புதுப்பித்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளுகிறேன். இதன்மூலம் அடுத்துவரும் சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதனை நம்மால் எதிர்கொள்ள முடியும். இக்காலங்களில் நமக்கு கிடைத்துள்ள விஷயங்களை வைத்து உயிர்பிழைத்திருக்க ம