உலகை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கியிருக்கிறேன் - ஜான்வி கபூர்


Janhvi Kapoor: Lesser known facts about Jhanvi Kapoor
toi



ஜான்வி கபூர், இந்தி திரைப்பட நடிகை

பெருந்தொற்று பாதிப்பு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இச்சூழ்நிலை உங்களை எப்படி பாதித்துள்ளது?

ஊரடங்கு சூழலுக்கு முன்னர் வரை நான் படப்பிடிப்புகளுக்கு செல்வது, வீடு திரும்புவது என்ற பரபரப்பாக இயங்கி வந்தேன். அதனால் திடீரென ஊரடங்கு அமலானபோது, என்னால் அச்சூழலுக்கு உடனே பொருந்திவர முடியவில்லை. சில நாட்கள் உண்மையில் கடுமையானதாக உணர்ந்தேன். பின்னர் மனமும், உடலும் அதற்கு பழகின. எனக்கு படத்தில் நடிப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. எங்களின் எதிர்காலம் பற்றி மனத்திற்குள் ஒரு பதற்றம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் என்ன செய்வது? தற்போதைய சூழ்நிலையை யாராலும் எதிர்பார்த்திருக்க முடியாது. நடக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள பழகி இருக்கிறேன்.

ஊரடங்கு காலம் முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு நம்மால் திரும்ப முடியும் என நம்புகிறீர்களா?

நான் ஊரடங்கு கால சூழ்நிலையை என்னை புதுப்பித்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளுகிறேன். இதன்மூலம் அடுத்துவரும் சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதனை நம்மால் எதிர்கொள்ள முடியும். இக்காலங்களில் நமக்கு கிடைத்துள்ள விஷயங்களை வைத்து உயிர்பிழைத்திருக்க முடியும் என்பதே பெரிய விஷயம்தானே! இனி ஒவ்வொருவரும் உலகைப் பார்க்கும் விதமே மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது.

உங்களது சமூகவலைத்தள கணக்கில் மினிமலிசம் பற்றி எழுதியிருந்தீர்கள். நமக்கு கிடைத்துள்ள விஷயங்கள் மகத்தானவை என்று எழுதியிருந்தவை பலரையும கவர்ந்துள்ளது. இப்படி எழுத என்ன காரணம்?

எனக்கு எழுதுவது பிடிக்கும் என்றாலும் வெகு காலமாக எதுவும் எழுதாமல் இருந்தேன். நீங்கள் கூறிய பதிவு என் தோழிக்கு நான் எழுதி அனுப்பியது. அவள் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிடச்சொன்னாள், நான் அப்பதிவில் கூறியுள்ள விஷயம் தாண்டி வேறு எதையும் கூற விரும்பவில்லை. ஊரடங்கு காலம் எழுதுவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது.

பாதுகாப்பின்மை பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் இப்போதைக்கு கவலைப்படுவது நான் படப்பிடிப்புக்கு செல்லமுடியவில்லை என்பதும், நான் திறமையாக செயல்படுகிறேனா என்பது மட்டுமே. பிறர் மீது நான் செலுத்தும் அன்பை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன். நான் அன்பு செலுத்தியவர்கள் இறக்கும்போது அச்சூழல் என்னை பாதுகாப்பின்மையில் தள்ளுகிறது. நான் பயப்படுவது இவை பற்றித்தான்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, மே 3.5.2020

ஆங்கிலத்தில்: ரேணுகா வியாவாஹரே

கருத்துகள்