அப்பாவை பழிவாங்கும் மகளின் கொலைவெறி தாண்டவம்- டாக்சிவாலா
டாக்சிவாலா தெலுங்கு 2018
இயக்கம் - ராகுல் சாங்கிருத்தியன்
திரைக்கதை - சாய்குமார் ரெட்டி
இசை - ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு - முட்டாலா மானசா
விஜய் தேவரகொண்ட நடித்துள்ள திகில் திரைப்படம். வேலை அமையாமல்
ஸ்விக்கி, உன்சோ என பல்வேறு வேலைகளைச் செய்துவருகிறார் விஜய். அப்போது தன் அக்காவிடம்
தாலிக்கொடியை விற்று காசு பெற்று டாக்சி ஒன்றை செகண்ட்ஹேண்டாக வாங்குகிறார். உடனே ஓலாவில்
இணைந்து வண்டி ஓட்டத் தொடங்குகிறார். அவருக்கு இருக்கும் லட்சியம், காருக்கு வாங்கிய
கடன்தொகையை அடைத்து அக்காவின் தாலியை மீட்கவேண்டும் என்பதுதான். அவர் வாங்கும் வண்டி
வின்டேஜ் லுக்கில் வினோதமாக இருக்கிறது. ஆனால் அந்த லுக் அவருக்கு பிடித்திருக்கிறது.
இந்த கார் மூலமாக டாக்டர் காதலி வேறு விஜய்க்கு கிடைக்கிறார்.
சந்தோஷத்திற்கு கேட்கவா வேண்டும்? ஆனால் டாக்சி தன்னிச்சையாக சிலசமயங்களில் இயங்குகிறது.
குறிப்பிட்ட பொம்மை மட்டுமே டாஷ்போர்டில் இருக்கிறது. அதனை விஜய் என்ன முயன்றும் மாற்ற
முடியவில்லை. ஒருநாள் இரவில் டாக்டர் ஒருவரை ஏற்றிக்கொண்டு வரும்போது, அவர் காரில்
வினோதமாக இறக்கிறார். அவரது உடலை கார் தானாகவே கொண்டுபோய் ரயில்வே பாதையில் போடுகிறது.
இதனால் குழம்பி பேய் இருக்கிறது. என் காரில் என விஜய் தன் மெக்கானிக் நண்பனிடம் புலம்புகிறார்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து கார் விற்கப்பட்ட ஓனரின் வீட்டுக்குச் செல்கிறார்கள். அந்த
காரின் பின்னணியில் உள்ள திடுக்கிடும் உண்மையைக் கண்டுபிடித்தனரா என்பதுதான் கதை.
ஆஹா
விஜய் தேவரகொண்டாதான் இந்த படத்திலும் ஸ்பெஷல். அலட்சியமாக
கார் ஓட்டுவதும், காரில் பேய், பிசாசு இருக்கிறதென நடுங்குவதும், உண்மையைக் கண்டுபிடிப்பதும்
என சுறுசுறுப்பாக நடித்திருக்கிறார். இவரது மெக்கானிக் ஷெட் நண்பர்,, அவரது உதவியாளர்
ஹாலிவுட் என இரண்டு பேரும் கதாபாத்திரத்திற்கு சால பொருத்தம். மாட்டே வினவுகா பாடல்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஐயையோ
மகளைக் கொல்ல நினைக்கும் தந்தை, அவளுக்கு உண்மையை தெரிய வைத்த
மனநல பேராசிரியரை அடைத்து வைத்திருப்பது நம்ப முடியவில்லை. பேய்ப்படம் என்பதால் பல
விஷயங்களை இப்படித்தான் என புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
திரில் பயணம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக