தீப்பந்தம் - மொழிபெயர்ப்பு நேர்காணல் மின்னூலின் தரவிறக்க முகவரி இதோ!









நேர்காணல்களின் சிறப்பு, குறிப்பிட்ட ஒருவரிடம் பேசும்போது அவர் அந்தந்த சூழல்களின் என்ன நினைக்கிறாரோ அதை பேசவைத்து பதில்களை வாங்க வேண்டும் என்ற சவால் உள்ளது. இதன் காரணமாக கேள்விகளை சுருக்கி பதில்களை நிறைய பெறவேண்டும் என்பதே நேர்காணல்களின் அடிப்படை. இந்த நூல்களில் உள்ள 32 நேர்காணல்கள் இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள், மாத, வார இதழ்களில் வெளியானவை. 

இந்த நேர்காணல்கள் அனைத்தும் கோமாளிமேடை வலைத்தளத்தில் வெளியானவை. வெளியானவற்றில் குறிப்பிட்ட நேர்காணல்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை செம்மை  செய்து மொழிபெயர்ப்பு நேர்காணல் நூலாக தொகுத்திருக்கிறோம். இந்த நூல் கொரோனா காலத்தில் இந்தியாவில் , உலகில் பல்வேறு துறைகளில் நடைபெற்ற மாற்றங்களை பதிவு செய்கின்றன. புனைவுகள் மட்டுமே காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று என்னிடம் பேசிய சிறுகதை எழுத்தாளர் ஒருவர் ஏளனமாக சொன்னார். எது நிலைத்து நிற்கப் போகிறது என்பதை காலம் முடிவு செய்யும். நாம் செய்யவேண்டிய எழுத்துக்கு உண்மையாக அதனை எழுதுவதும், அதனை முறையான வழியில் பிறருக்கு பகிர்வதுமே ஆகும். இந்த நூலில் முக்கியமான நேர்காணல்களாக கருதுவது அண்மையில் புற்றுநோய்  பாதிப்பால் மறைந்த இந்தி நடிகர் இர்பான் கான், மிஸ்டர் பொதுஜனம் கார்ட்டூனால் புகழ்பெற்ற ஆர்.கே. லக்ஷ்மணன்  என இருவருடையதும்தான். 

ஐம்பதாண்டுகளுக்கு மேற்பட்ட பல்துறை பிரபலங்களின் அனுபவங்கள், அரசியல் தலைவர்களின் நட்பு அவரை எப்படி மாற்றியிருக்கிறது என்பதை அந்த நேர்காணல் உங்களுக்கு விளக்கும். 

இந்த நூல் கிரியேட்டிவ் காமன் உரிமையின் கீழ் வெளியிடப்படுகிறது. இதனால் நூலைத் தரவிறக்கி யாவரும் வாசிக்கலாம். பகிரலாம். 


நூல் வாசிப்பு வலைத்தளங்களில் நூல்கள் பதிப்பித்தால், அது தொடர்பான தகவலை arapress@protonmail.com மின்னஞ்சல் வழியாக தெரிவிக்க வேண்டுகிறோம். நன்றி. 

பீடிஎஃப் 


இபப்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்