இருபது லட்சம் கோடி ரூபாய் இந்திய தொழில்துறையைக் காப்பாற்றும் - நிதின் கட்கரி








chidambaram filed false cases against me pm modi shah when he was ...
தினதந்தி










நிதின் கட்கரி போக்குவரத்துதுறை மற்றும் சிறு, குறு தொழில்துறை அமைச்சகம்


மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவிகள் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுமா?


4.5 மில்லியன் (ஒரு மில்லியன் - பத்து லட்சம்) சிறு, குறு தொழிலகங்களுக்கு மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள நிதித்தொகை உதவி செய்யும். மத்திய பொது நிறுவனங்கள், சிறு, குறு தொழிலகங்கள் பொது முடக்க காலத்தால் நிதிவசதி இன்றி தவித்து வருகின்றன. இதன் காரணமாக வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணையையும், ஊழியர்களுக்கான சம்பளத்தையும் கொடுக்க முடியாமல் உள்ளன. அடுத்த 45 நாட்களில் இந்த நிறுவனங்களுக்கு வழங்கும் 5 லட்சம் கோடி ரூபாய் மூலம் நிறுவனங்கள் தம்மை சிக்கல்களிலிருந்து மீட்டெடுத்துக்கொள்ளும் என நம்புகிறோம்.

கடினமான சூழலில் உள்ள சிறுகுறு தொழிலகங்களுக்கு வங்கிகள் எப்படி கடன்களை வழங்க முடியும்?


மத்திய அரசு, வங்கிகள் சிறுகுறு தொழிலகங்களுக்கு வழங்கும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்களுக்கு, 1500 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையாக செலுத்தவிருக்கிறது. கடன்தொகையில் வங்கிகள் 25 சதவீதம் தந்தால் போதும். மீதி 75 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும். பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது தனியார் நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளும் கடன்களை சிறுகுறு தொழிலகங்களுக்கு வழங்க முடியும். இதன்வழியாகத்தான் இந்திய தொழில்துறை வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.


சிறுகுறு தொழிலகங்களில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பு பற்றிய தகவல்களை வைத்திருக்கிறீர்களா?


எங்களிடம் வேலையிழந்த தொழிலாளர்கள் பற்றிய எந்த தகவல்களும் கிடையாது. நாங்கள் தொழிலாளர்களைக் காப்பாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியும். அவர்களின் பிஎஃப் பணத்திலிருந்து 12 சதவீதம் வரை எடுத்து அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்க உள்ளோம். மேலும் பணியாளர்கள் அவர்களின் பிஎஃப் கணக்கிலிருந்து 24 சதவீத பணத்தை அவசர தேவைக்கு எடுத்துக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. நூறு தொழிலாளர்களுக்கும் குறைவாக உள்ள நிறுவனங்களில் மாதம் 15 ஆயிரம் ரூபாயை ஊழியர்களுக்கு வழங்குவதற்கு அரசு உதவியுள்ளது. இதன்மூலம் 43 மில்லியன் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.


பெரிய தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம். சிறு நிறுவனங்களில் இந்த விதி எப்படி சாத்தியமாகும்?


அனைத்து நிறுவனங்களிலும் சந்திப்புகள் கலந்துரையாடல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். சிறிய, பெரிய நிறுவனங்கள் என அனைத்திலும் சமூக இடைவெளியை கடைபிடித்தே ஆகவேண்டும்.


இருநூறு கோடி ரூபாய்களுக்கு மேற்பட்ட ஏலத்தொகை கொண்ட பணிகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை அழைப்பதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சிறுகுறு தொழிலகங்களுக்கு எப்படி உதவும்?


அரசின் இந்த முடிவு பதினான்கு ஆண்டுகளாக தள்ளிப்போடப்பட்டு வந்த ஒன்று. சிறுகுறு தொழிலகங்கள் இனி சுதந்திரமாக சேவைகள் அளிக்கமுடியும். பொருட்களை தயாரிக்க முடியும். இது சந்தையில் குறிப்பிட்டத்தக்க மாற்றங்களை நிகழ்த்தும் என நம்புகிறேன். பிரதமர் அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகை இந்திய தொழில்துறையை மீட்டெடுக்கும் என நம்புகிறேன்.


நன்றி: இந்தியா டுடே 25.5..2020

ஆங்கிலத்தில்: ராஜ் செங்கப்பா




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்