அனுபவங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது எப்போதும் சரியானது அல்ல! - உளவியலாளர் பிரக்யா அகர்வால்






Viber tamil sri lanka viber GIF



உளவியலாளர் பிரக்யா அகர்வால்

நாம் குறிப்பிட்ட விஷயங்களில் முடிவெடுப்பதில் ஏன் தவறுசெய்கிறோம்?

நாம் குறிப்பிட்ட விஷயத்தில் முடிவெடுக்க நிறைய தகவல்களை மூளையில் சோதித்தே செய்கிறோம். ஆனால் வேகமாக முடிவெடுக்கும் சூழலில் நாம் நமக்கு கிடைத்துள்ள தகவல்களை பகுத்தறியாமல் உடனே முடிவெடுத்து விடுகிறோம். இதனால் நிறைய பின்விளைவுகள் ஏற்படுகின்றன. இதில் முந்தைய நமது அனுபவங்களை கருத்தில் கொள்கிறோம். அவற்றை நமது பார்வைக் கோணத்தில் அணுகுவதால் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

இதில் நமக்கு எந்த லாபங்களும் கிடையாதா?

ஏன் இல்லாமல். நீங்கள் சிறப்பங்காடிகளுக்கு செல்கிறீர்கள். ஊட்டச்சத்து பானங்களை பார்க்கிறீர்கள். நெஸ்லே, அமுல் என்றால் எது சிறப்பானது என உடனே முடிவு செய்து அமுலை தேர்ந்தெடுப்பீர்கள். இதில் நாம் கலோரியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் தேவையில்லாமல் நேரம் வீணாகும் அல்லவா? உணவுப்பொருட்கள் என்பதை தாண்டி இந்த சிந்தனை மக்களின் வாழ்க்கையை மாற்றவும் வாய்ப்பிருக்கிறது.

சமூக வலைத்தளங்கள் இந்த விவகாரங்களில் என்ன பங்கை வகிக்கின்றன?

அவை மனிதர்களின் ஆழமான ஈகோக்களை மோதி வெடிக்க வைக்கின்றன. சில கருத்துகளை நீங்கள் பதிவிட்டால், அதற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவரின் பதிவில் அதனைக் காட்டினால் என்னாகும்? அவர் இப்படி கருத்தைப் போட்டிருக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன என்று சமூக வலைத்தளங்கள் தூண்டுகின்றன. இதன்விளைவாக இணையத்தில் கடும் சண்டைகள், வசைபாடல்கள் உருவாகின்றன. குறிப்பிட்ட இனக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் நாங்கள் இப்படிப்பட்ட செயல்களை ஆதரிக்கிறோம். மற்ற செயல்களை எதிர்க்கிறோம் என்றால் அத்தகைய செயல்களை செய்பவர்கள் சும்மாயிருப்பார்களா?

இந்த பாகுபாடுகளில் எத்தனை வகை உள்ளது?

இரண்டு. ஒன்று எக்ஸ்பிளிசிட், மற்றொன்று இம்ப்ளிசிட். முதல்வகையை எளிதாக இனம் காணலாம். நிறம், சாதி, இனம் சார்ந்த ஒருவரை பாகுபாடு படுத்துவது. இரண்டாவது வகையை இப்பிரச்னை இருப்பவரே அடையாளம் காண முடியாது. எளிமையாக பேசும்போது இந்த யுனிவர்சிட்டியிலா படிச்சான், அப்போ இந்த வேலைக்கு நல்ல தகுதியான ஆளா இருப்பான் என்பார்கள்.

விழிப்புணர்வின்றியே நாம் பாகுபாடுகளை கொண்டுள்ளோம் என்று எப்படி சொல்கிறீர்கள்?

நாம் பிறக்கும்போது பாகுபாட்டு மனத்தை கொண்டுள்ளோம் என்று சிலர் சொல்கிறார்கள். எனக்கு ஆய்வு அடிப்படையில் நாம் வளரும்போதுதான் இந்த பாகுபாட்டு மனம், தவறான சிந்தனைகளுக்கு உள்ளாகிறோம் என்று தெரிந்துகொண்டேன். வாழ்பனுபவங்களின் அடிப்படையில்தான் ஒருவர் சமூகத்தைப் பார்க்கிறார். பிற மனிதர்களுடன் தகவல்தொடர்பை வைத்துக்கொள்கிறார். ஒருவரின் எண்ணங்களை வளர்ப்பதில் அவரைச்சுற்றியுள்ள சூழல், குடும்பம், நண்பர்கள், ஊடகங்கள் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.

குழந்தைகளாக இருக்கும்போது நமக்கு யாருடன் இருந்தால் சந்தோஷமாக இருக்கிறோம். சோகமாக இருக்கிறோம் என்பதுதான் தெரியும். எதிரி, நண்பன் என்பதையெல்லாம் பெற்றோர், ஊடகங்கள், இலக்கியங்கள்தான் கற்றுத்தருகின்றன.


Sway by Pragya Agarwal - YouTube
youtube



எதிர்காலம் இந்த காக்னிட்டிவ் பயாஸ் பிரச்னை இன்றி இருக்குமா?

மாற்றங்கள் சமூகத்தில் மிக மெதுவாகத்தான் நடக்கும். குறிப்பிட்ட ஒருவரின் அந்தஸ்து, இடம் பறிபோகும்போது அவரின் சிந்தனைப்போக்கு மாறுகிறது. இதன்விளைவாக அவர் சார்ந்து நாம் சில கருத்துகளை உருவாக்கி நினைவுகொள்கிறோம். காக்னிட்டிவ் பயாஸ் என்பதை முழுக்க தவறு என்று நாம் கூறிவிட முடியாது. காரணம். நிறைய சமயங்களில் முடிவெடுக்க தகவல்களை வேகமாக சரிபார்த்து உதவுகிறது.  அது பற்றிய கவனத்துடன் இருக்கவேண்டும். இந்து என்றால் வன்முறையாளன், முஸ்லீம் என்றால் தீவிரவாதி என்ற அடிப்படை எண்ணங்களிலிருந்து வெளியே வருவது அவசியம்.

செயற்கை நுண்ணறிவிலும் இந்த பாகுபாட்டு தன்மை உண்டா?

சிலிகன் வேலியிலுள்ள பல்வேறு அறிவியலாளர்கள் ஆண்கள்தான். அவர்கள்தான் கணினிகளுக்கான, செயற்கை நுண்ணறிவுக்கான கோடிங்குகளை எழுதுகிறார்கள். இவர்களின் கருத்து அதில் உள்ளே வராமல் எப்படி இருக்கும்? உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள ஏ.ஐ உதவியாளரின் குரல் ஏன் பெண்ணாக இருக்கிறது? அதற்கு காரணம் அதனை வடிவமைப்பவர்களின் எண்ணம்தான். பெண் உதவியாளராக இருக்கவேண்டும். கணினி என்றாலும் அதனை அதட்டி மிரட்டி வேலை வாங்குவது எளிது என நினைக்கிறார்கள். பலர் ஏ.ஐ. உதவியாளரிடம் பாலியல் ரீதியாக பேசினால், எனக்கு வெட்கமாக இருக்கிறது என பெண்குரல் சொல்லுவது உங்களுக்கு என்ன விதமான கருத்தைப் புரிய வைக்கிறது? நாம் இதுபோன்ற விஷயங்களை முன்னமே அடையாளம் கண்டு சரி செய்யவேண்டும்.

ஆங்கிலத்தில்: ஏமி பாரட்

நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

 


கருத்துகள்