இந்திய அரசு அடையாள அரசியலை கைவிட்டு மக்களுக்கு உதவவேண்டும்! - பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி
அமேஸான் |
இந்தியாவிடம் மேற்குலகு கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன
பிரான்ஸைச் சேர்ந்த தாமஸ்
பிக்கெட்டி, கேப்பிடல் அண்ட் ஐடியாலஜி என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலைப் பற்றி அவரிடம்
பேசினோம்.
இந்த நூலை எழுத உங்களைத் தூண்டியது எது?
நான் பல்வேறு நாடுகளில்
நிலவும் சமூக பாகுபாடு, பணக்காரர்கள், ஏழைகள் ஆகியவற்றோருக்கு இடையிலுள்ள வேறுபாடுகள்,
இடைவெளி ஆகியவற்றை கவனித்து வருகிறேன். இந்த வகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில்,
மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரங்கள் நான் தீவிரமாக கவனித்து வருகிறேன். இங்கு
2002இல் பொருளாதார இடைவெளி குறைந்து பின்னர் 2015-16 ஆண்டுகளில் மீண்டும் தோன்றியுள்ளது.
இதைப்பற்றி ஆராயும் விதமாகவே நான் இந்த நூலை எழுதியுள்ளேன்.
பொருளாதார சமச்சீரின்மை, இடைவெளிகள்தான் பொருளாதாரத்தை வளர்க்கிறது
என்று சிலர் கூறுகிறார்களே?
அது தவறான கருத்து. ஓர்
நாடு வளர்வதற்கான முக்கியக்காரணம், அந்நாடு கல்வி அறிவைப் பெறுவதுதான். அமெரிக்கா மிகப்பெரிய
வல்லரசு நாடாக வளர்ந்து உருவானதற்கு காரணம், அங்குள்ள கல்வி அமைப்புகள்தான். இன்று
அந்த தகுதியை அந்நாடு இழந்துவிட்டது. அனைத்து மக்களுக்கும் பொருளாதார சீர்தன்மை இருக்கவேண்டும்.
இதுவே தனிமனிதர்களையும் நாட்டையும் உயர்த்தும். முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட்
ரீகன், பொருளாதார சீரின்மை பொருளாதாரத்தை வளர்க்கும் என்று பேசினார். ஆனால் இது வளர்ச்சிக்கும்
மக்களின் மேம்பாட்டிற்கும் பொருந்தாது.
சமநிலையற்ற தன்மை, சாதி அமைப்பு ஆகியவற்றைப் பற்றி உங்கள்
நூலில் எழுதியுள்ளீர்கள். இதில் இந்தியா எப்படி கவனம் பெறுகிறது?
இந்தியா போன்ற பொருளாதார
சமச்சீரின்மை, சாதி கட்டுப்பாட்டுகள் கொண்ட நாடுகளிடமிருந்து வளர்ச்சி பெற்ற மேற்குலகு
கற்றுக்கொள்ள முடியும். 1871-1931 காலகட்டத்தில் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவில்
நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது. சாதிக் கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களால் பின்னாளில்
இட ஒதுக்கீடு, கல்வி ஆகிய விஷயங்கள் வளர்ந்தன. இட ஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு
கல்வி கிடைத்தாலும் நிலங்களைப் பெறுவது இன்றுவரையிலும் எளிமையாக இல்லை. நான் இவற்றை
விமர்சிக்கவில்லை. இவற்றை முக்கியமாக பொருளாதாரத்தில் கருத்தில் கொள்ளவேண்டும் என்று
சொல்கிறேன்.
கொரோனா பாதிப்பும், பொதுமுடக்க காலகட்டமும் பொருளாதாரத்தில்
நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துமா?
வல்லரசு நாடுகளுக்கு இதில் பெரிய பிரச்னை இருக்காது. ஆனால் சமூக இடைவெளி சார்ந்த விதிகளை ஏற்படுத்தி, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தொகையை ஒதுக்காவிட்டால் பொதுமுடக்க காலத்தில் தொழிலாளர்கள் கஷ்டப்படுவார்கள் என்பதே உண்மை. இந்தியா போன்ற நாடுகள் இந்த நேரத்தில் குறைந்தபட்ச மாத வருமானம் போன்ற திட்டங்கள் அமல்படுத்தலாம். அதனை சோதித்துப்பார்க்க இதுவே சிறந்த வாய்ப்பு. இனம்,மதம்,மொழி சார்ந்த அடையாள அரசியலை கைவிட்டு அரசு மக்களின் வாழ்க்கையை காப்பாற்ற முன்வரவேண்டும். சமூக பாதுகாப்பிற்கான சட்டங்களை இக்காலகட்டத்தில் அரசு உருவாக்குவது முக்கியம்.
பெருந்தொற்று காரணமாக வல்லரசு நாடுகளிலும் பொருளாதார சமச்சீரின்மை
தோன்றும் என்று நினைக்கிறீர்களா?
அதுபோன்ற பாதிப்புகள் இருக்கும்
என்பது உண்மையே. மக்களிடம் வசூலிக்கும் வரியை நாம் அவர்களுக்காக செலவு செய்கிறோம் என்பதால்
இதில் பெரிதாக யோசிக்க ஏதுமில்லை. அரசு இப்போது வருமான வழிகளையும், மக்களுக்கு எப்படி
நிதியை வழங்குவது என யோசித்து வேகமாக அவர்களுக்கு நிதி வழங்கி காப்பாற்றியாக வேண்டும்.
பல்லாயிரம் பேர் இந்த பெருந்தொற்று காரணமாக வேலையிழந்து உணவுக்குக்காக தடுமாறிவருகின்றனர்.
நன்றி: ஃபோர்ப்ஸ் இந்தியா
ஆங்கிலத்தில்: பூஜா சர்க்கார்
கருத்துகள்
கருத்துரையிடுக