ஐபிஎல் விளையாட்டு மக்களின் மனநிலையை மாற்றும் - சஞ்சு சாம்சன்



The myriad challenges of being Sanju Samson | Sanju Samson | Sanju ...
manorama


சஞ்சு சாம்சன், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி


பொது முடக்க காலத்தில் எப்படி பயிற்சி செய்கிறீர்கள்? உடல்நலத்தை பராமரிக்கிறீர்களா?


பொதுமுடக்க காலத்திற்கு முன்னே பயிற்சிக்கான சாதனங்களை நான் வாங்கி வைத்துவிட்டேன். தற்போது எனது பயிற்சியாளரின் உதவியுடன் எளிமையான உடற்பயிற்சிகளை செய்துவருகிறேன். வீட்டின் மொட்டை மாடியில் மாலை நேரம் பயிற்சி செய்கிறேன்.


கிரிக்கெட்டிற்கான தனிப்பட்ட பயிற்சிகள் எப்படி செல்கின்றன?


என் தம்பியின் வீட்டு மாடியில் அதற்கான இடத்தை அமைத்துள்ளேன். அங்கு டென்னிஸ் பந்து மூலம் பயிற்சி செய்கிறேன். விக்கெட் கீப்பருக்கான பயிற்சியாக சுவரில் பந்தை எறிந்து அதை ஒற்றைக் கையில் பிடித்து பயிற்சி நடைபெறுகிறது.


இது ஐபிஎல் விளையாடும் நேரம் அல்லவா? எப்படி உங்களை உற்சாகப்படுத்திக்கொள்கிறீர்கள்?


கடந்த எட்டு ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வருகிறேன். இடைவிடாத பயிற்சிகள் செய்துகொண்டு வருகிறேன். இப்போது, பெருந்தொற்று காரணமாக விளையாட முடியவில்லை. பொதுமுடக்க காலத்தை எதிர்கொள்வது கடினமாகவே இருக்கிறது. அதிலும் முதல் இரண்டு வாரங்கள் என்ன செய்வதென்றே புரியவில்லை.


மனநிலையை பராமரிப்பது முக்கியம் அல்லவா?


உடலுக்கு உடற்பயிற்சியைப் போலவே மனநிலையை குறிப்பிட்ட நிலையில் வைக்க தியானம் செய்துகொண்டிருக்கிறேன். ஸ்டீவ் வாக் எழுதிய நூலை படித்துவருகிறேன். ரஜினிகாநத் நடித்த படங்களையும், மலையாளப் படங்களையும் நிறைய பார்த்து வருகிறேன்.


கொரோனா சம்பந்தப்பட்ட செய்திகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


பொதுவாக நான் நாளிதழில் வரும் செய்திகளையும், டிவி செய்திகைளயும் படிக்க பார்க்க விரும்புவதில்லை. ஆர்வம் இல்லை அவ்வளவுதான். ஆனால் பொதுமுடக்க காலத்தில் அந்த விஷயம் மாறியிருக்கிறது. செய்திகளை கவனித்து வருகிறேன். வைரஸ் ஒன்று, உலகம் முழுவதையும் கட்டுப்படுத்துகிறது என்பது நம்பவே முடியாத செய்தி. இந்த நேரத்தில் அரசு கூறும் விதிகளை கடைப்பிடித்து நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உதவுவது நமது கடமை.


உங்களது சொந்த மாநிலமான கேரளம் நோய்த்தொற்றை தடுப்பதில் முன்னிலை வகிக்கிறது. அதைப்பற்றி...?


கேரள அரசு நோய்த்தொற்றை தடுக்க முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் முன்னரே அறிந்து வேகமான செயல்பாடுகளை செய்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


இடம்பெய்ரந்த தொழிலாளர்கள் பலர் வேலையின்றி தங்கள் ஊருக்கு நடந்து சென்று வருவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து..


அந்த செய்தியை டிவியில் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது. நமக்கு கிடைத்துள்ள வசதிகள் வாய்ப்புகள் மேல் எனக்கு நன்றி பெருகியது. இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவசியமான விஷயங்களை செய்து கொடுத்திருந்தால் இதுபோல சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. உள்ளூர் மக்களுக்கு நான் சில உதவிகளைச் செய்து வருகிறேன். இது தனிப்பட்ட விவகாரம் என்பதால் இதைப்பற்றிய விவரங்களை கூற விரும்பவில்லை.


உங்கள் நண்பர்களோடு பேசி வருகிறீர்களா?


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களோடு காணொலி மூலம் பேசி வருகிறேன். யு-13 என்ற கேரள அணி வீரர்களோடு பேசியும், வாட்ஸ்அப் மூலம் செய்தியைப் பகிர்ந்தும் வருகிறேன். முடிந்தவரை விளையாட்டுகள் வேகமாக தொடங்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். ஐபிஎல் தொடங்கப்பட்டால் தற்போது இந்தியாவிலுள்ள நிலைமை மாறும் என நினைக்கிறேன். விளையாட்டு வீரராக அன்றியே இதனை சொல்கிறேன்.


நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் மே 4, 2020


ஆங்கிலத்தில்: நிஹால் கோஷி


கருத்துகள்