போருக்கு தயாராகுங்கள் என்று ராணுவத்திற்கு அழைப்பு விடுப்பது இயல்பானதுதான்! - டெய்லர் ஃபிராவல்
போருக்கு
தயாராகுங்கள் என்று சீனா சொன்னது இயல்பானதுதான்
எம்.டெய்லர்
ஃபிராவல்
எம்ஐடி
பாதுகாப்பு ஆராய்ச்சி, அரசியல் அறிவியல் பேராசிரியர்
சீன அதிபர் ஜின்பிங், மக்கள்
விடுதலை ராணுவத்திடம் போருக்கு தயாராகுங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?
அவர்
கூறிய வார்த்தை ஒன்றும் புதிதல்ல கடந்த ஆண்டும் இதேபோலத்தான் கூறினார். மக்கள் விடுதலை
நாளிதழில் இத்தகையை குறிப்புகள் 2018 இல் 1,300 முறையும், 2019 இல் 1,100 முறையும்
கூறப்பட்டுள்ளன. ராணுவம் தனது இலக்குகளை நோக்கி முன்னேறச் செய்ய அதன் தலைவர் இப்படி
ஊக்கமூட்டுவது வழக்கம்தான். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலும் இதுபோல பேசப்பட்டுள்ளது.
சீனா டோக்லம் பகுதி முன்னேற்றத்தின்போது
அமைதியாகவே இருந்தது. இதை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?
Add caption |
2017 ஆம் ஆண்டு முதலே டோக்லம் பகுதியில் எல்லைப்ப்பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. இதில் இந்தியா, சீனாவின் எல்லை மீறலுக்கு பதிலடியாக சீனா, பூடான் எல்லைப்பகுதியில் தன் படைகளை உள்ளே அனுப்பியது. இதனை சீனா தனது இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக கருதியது. அதேசமயம் இந்தியா பூடான் நாட்டுடன் கொண்டுள்ள சிறப்பான உறவு காரணமாக அந்த நாடு இதனை ஆட்சேபிக்கவில்லை. இந்தியாவை இந்நடவடிக்கையிலிருந்து விலக்க சீனா பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. இன்னும் சில காலத்திற்கேனும் சீனா கைகளை கட்டியபடி இருக்க வாய்ப்புள்ளது..
இந்த
எல்லைக்கோடு பிரச்னை இரு நாடுகளிடையே முக்கியமான பிரச்சனை ஆகுமா?
இந்த
எல்லைக்கோடு பகுதியில் சீனாவை விட இந்தியா பலமாக இருக்கிறது. இதற்கு காரணம், அந்நாடு
உருவாக்கியுள்ள சாலை வசதிகள்தான். சீனாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் அதன் காரணமாக
ஏற்பட்ட பொருளாதார இழப்பும் அதிகம். மேலும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள தைவான், ஹாங்காங்,
தென் சீனக்கடல் ஆகியவற்றிலும் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகிறது. எல்லைப் பிரச்னை
தீரவேண்டுமெனில் சீனா, இந்தியா நாட்டு தலைவர்கள் ஒன்றாக கூடி பேசினால் மட்டுமே தீர்வு
சாத்தியம்.
நன்றி:
தி இந்து ஆங்கிலம்
ஆங்கிலத்தில்:
ஆனந்த் கிருஷ்ணன்
கருத்துகள்
கருத்துரையிடுக