இடுகைகள்

எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலாசாரத்தை இழந்த குற்றவுணர்ச்சி! - தந்தைக்கோர் இடம் - அன்னி எர்னோ - எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி- நாவல்

படம்
    தந்தைக்கோர் இடம் அன்னி எர்னோ பிரெஞ்சிலிருந்து தமிழில் – எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி காலச்சுவடு பதிப்பகம் மூல நூல் – லா பிளேஸ்   2022ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அன்னி எர்னோவின் நூல். பிரான்சில் வாழும் அன்னி, தனது பெற்றோர்,தனது வாழ்க்கை பற்றி எழுதியுள்ள   சுயசரிதைக் கதைதான் தந்தைக்கோர் இடம். நாவல் 74 பக்கங்களைக் கொண்டது. எனவே, வேகமாக வாசிப்பவர்கள் வாசிக்கலாம். ஆனால் முடிந்தவரை நிதானமாக வாசிப்பதே நல்லது. இதன் மூலம் கதையில் வரும் நாயகியின் அப்பா பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முடியும். பிரான்சிலுள்ள ஒய் எனும் ஊரில் வாழ்பவர், நாயகியின் அப்பா. இவர் தொழிற்சாலைத் தொழிலாளியாக இருந்தவர். அதிக படிப்பறிவு இல்லாதவர். அதனால், ஏற்பட்ட தாழ்வுணர்ச்சி அவருக்கு இறக்கும் நாள்வரை மனதில் உள்ளது. அதன் விளைவாக அவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார். தனது கல்வி கற்ற மகளிடம் எப்படி நடந்துகொள்கிறார், அவரது நண்பர்களை எப்படி வரவேற்கிறார் என்பதைக் கதையில் விவரித்து கூறியிருக்கிறார் எழுத்தாளர் அன்னி எர்னோ. நாவலின் தொடக்கமே, ஆசிரியர் வேலை கிடைத்த மகள், இரண்டு நாட்களுக்குப் பிறகு   இறந்துப