இடுகைகள்

மரணதண்டனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் மரணதண்டனை திரும்ப வருகிறது!

ஏறத்தாழ மரண தண்டனை என்பது பல்வேறு நாடுகளில் கைவிடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலான அரசு மீண்டும் மரண தண்டனையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். அரசு அட்டர்னியான வில்லியம் பர் , இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளையும் , பெண்களையும் கற்பழித்து கொலை செய்து சமூக அமைதியைக் கெடுத்தவர்கள் இவர்கள் என மரணதண்டனையை நியாயப்படுத்தியுள்ளது அரசு. சமூகத்தைக் குலைக்கும் மக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக அரசு செயல்படும். மேலும் மரண தண்டனை என்பது மாநிலங்களின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க மாநிலங்களில் 29 இல் மட்டுமே மரண தண்டனை அமலில் உள்ளது. மரணதண்டனை விதிப்பதில் அரசுக்குச் செலவு, தவறான தீர்ப்பு இழப்பீடு, இனவெறுப்பு என பல்வேறு பிரச்னைகள் மறைந்துள்ளன. இத்தனையையும் இனி ட்ரம்ப் அரசு சமாளிக்கவேண்டும்.  நன்றி - சிஎன்என்

நோரியோ நகாயாமா - கொலைகாரர் எழுத்தாளர் ஆன கதை!

படம்
அசுரகுலம் நோரியோ நகாயாமா எழுத்தாளர் கொலைகாரர் ஆவரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். நோரியோ  கொலைகார ர் பிரபலமான நாவல் எழுத்தாளர் ஆக முடியும் என நிரூபித்துக் காட்டியபோது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. 1949 ஆம்ஆண்டு ஜப்பானின் அபாஸிரி எனுமிடத்தில் பிறந்தார். இவரது குடும்ப நிலை தெரியவில்லை. சிபுயா எனுமிடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வேலை செய்தார். ஆனால் திடீரென 1968 ஆம் ஆண்டு அக்.11 முதல் 1969 நவ.5 வரையிலான காலகட்டத்தில் துப்பாக்கி மூலம் நான்கு பேர்களை இரக்கமின்றி கொன்றார். கொன்றவர்களில் இருவரிடம் 16,420 யென்களை கொள்ளையடித்தார். இப்படி குற்றச்சாட்டு வந்தால் அந்நாட்டு நீதிமன்றம் என்ன செய்யும்? மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நம் அரசியல் தலைவர்கள் போகாத பொழுதை எப்படி ஓட்டுவார்கள் அதேதான. சும்மாதான் எழுத தொடங்கினார். விரைவில புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிவிட்டார். அதிலும் உச்சமாக வுடன் பிரிட்ஜ் என்ற நாவலுக்கு ஜப்பான் இலக்கியப் பரிசே அளித்து விட்டார்கள். ஆனாலும் அப்பீலுக்கு சட்டம் மசியவில்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நோரியோவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட