இடுகைகள்

தேசப்பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிக்டாக்கை பொது எதிரியாக கட்டமைக்கும் அமெரிக்கா!

படம்
  மேற்குலக நாடுகளுக்கு வேற்றுகிரகவாசிகள் என்றுமே எதிரியாகவே இருக்கமுடியும். ஏன் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு பயம் கொள்கிறார்களா என்ன? முதலில் ரஷ்யாவை நினைத்து பீதியடைந்தவர்கள், திரைப்படம், பாடல், டிவிநிகழ்ச்சி, செய்தி என அனைத்திலும் அதற்கு எதிரான கருத்துகளை உருவாக்கினார்கள். இந்த ஆண்டுகூட உக்ரைனில் எடுக்கப்பட்ட ரஷ்ய எதிர்ப்பு ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. அதேசமயம், வெள்ளையர்கள் செவ்விந்தியர்களை கொன்ற உண்மையைப் பேசும் ஸ்கார்சி படத்திற்கு ஒற்றை விருது கூட வழங்கப்படவில்லை. இப்போது சில ஆண்டுகளாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சீனாவை பலவீனப்படுத்த வழி தேடுகிறார்கள். அந்நாட்டு நிறுவனங்களை முடக்கி வருகிறார்கள். அதற்கு தேசப்பாதுகாப்பு என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறுகிறார்கள்.  டிக்டாக் ஆப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பதினைந்து நொடி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்ற ஆப். தற்போது, இசை, நூல் வாசிப்பு என வளர்ந்து வருகிறது. இதில் வீடியோ போட்டு சம்பாதிப்பவர்கள் உலகம் எல்லாம் உண்டு. இந்த நிறுவனத்தில் நாற்பது சதவீத பங்குகளை பைட் டான்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பூர்விகம் சீனா.

குற்றச்சாட்டுகளை பூமாரி போல எதிர்கொண்ட ஹூவாய் நிறுவனர் ரென் - பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் மின்னூல் வெளியீடு

படம்
    அமெரிக்க அரசால் தேச துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனம்தான். ஆனால் அதன் வெற்றி என்பது எளிதாக வரவில்லை. அதன் நிர்வாக கொள்கைகளை வகுத்தவர், ரென். நிறுவனத்தின் ஆன்மிகத் தலைவரும் அவர்தான். எப்படி ஜெயித்தார் என்பதை பல்வேறு சம்பவங்களை விளக்கி சற்று எளிமையான முறையில் சுருக்கமாக சொல்லும் நூல்தான் இது. வளவளவென சுற்றி வளைக்காமல் என்ன விஷயமோ அதைப்பற்றி மட்டுமே கவனப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இதனால் போனில், டேபில் படித்தாலும் வேகமாக வாசிக்க முடியும். இது தொழில்நுட்ப ரீதியான சாதக அம்சம். இதைத்தாண்டி ரென் எப்படி ஹூவாவெய் நிறுவனத்தை கட்டமைத்தார். பன்னாட்டு உலக நிறுவனமாக அதை மாற்றினார் என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.  ஆசியாவில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு நிறுவனம் வெற்றி பெறுவது எளிதல்ல. இன்றும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அதிக விலை கொண்ட ஆப்பிளுக்கு நிகரான தரத்தைக் கொண்டுள்ளன. இப்படியொரு வளர்ச்சி எப்படி சீனத்துக்கு சாத்தியமானது என்பதையும் ரென் நூலில் கூறியுள்ளார். இப்படி ஆசியாவில் உள்ள இந்தியாவுக்கு அண்டை நாடான சீனாவை புரிந்துகொள்வதன் மூலம் நான் முன்னேற வேண்டிய பாதை தெ