இடுகைகள்

மருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீண்டகால நோய்களுக்கு தீர்வு!

படம்
    மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதியின் மருந்து வீரியமுறை சற்று சிக்கலானது. இதில் இடம்பெறும் மூலிகைகள் அனைத்தும் பச்சையாக இருக்கும்போது அரைத்து சாறு எடுக்கப்பட்டு அதை சர்க்கரை அல்லது சாராயத்தில் கலக்கிறார்கள். ஓமியோபதி மருந்துகள் பலவும் சர்க்கரை அல்லது சாராயத்தில் கரைக்கப்பட்டவையாகவே இருக்கும். சில மருந்துகளை கொடுக்கும்போது சாராயத்தில் நனைத்துக் கொடுப்பார்கள். மருந்தை வீரியமாக்கவே இந்த முயற்சி. சர்க்கரை, சாராயம் என இரண்டுமே மருந்துகள் வீரியமிழப்பதை கட்டுப்படுத்துகின்றன. பெரும்பாலான மூலிகைகள் பச்சையாக இருக்கும்போது சாறு எடுக்கப்படுவதற்கு, காரணம் அதில்தான் சாரம் இருக்கும். வலிமை இருக்கும் என்பதே. காய்ந்த மூலிகையில் வலிமை கிடையாது. அது பொடியாக இருந்தாலும் அல்லது வேறு வகையாக இருந்தாலும் சரி. மருந்துகளை நீர்த்துப்போன வடிவமாக்கி தாய் திராவகம் தயாரிக்கிறார்கள். சாராயத்தில் உள்ள மூலிகைச் சாறின் அளவு நீர்த்துப்போன அளவு கூடும்போது குறையும். 0 எனும்போது உள்ள மூலிகைச்சாறு மூலக்கூறு அளவு, 30சி, 200சி எனும்போது இருக்காது. இப்படி இருக்கும்போது கொடுக்கப்படும் மருந்து நோயைத் தீர...

நோயில்லாத ஒருவருக்கு செய்யப்படும் மருந்து சோதனை!

 மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி மருத்துவமுறையை உருவாக்கிய சாமுவேல், பல்வேறு மருந்துகளை தன்னுடைய உடலில் செலுத்தி அதன் அறிகுறிகளை குறித்து வைத்துக்கொண்டே பல்வேறு நூல்களை எழுதினார். இந்த மருத்துவமுறையில் உள்ள அனைத்து மருந்துகளுமே நோயில்லாத ஒருவரின் உடலில் செலுத்தி, அதன் அறிகுறிகளை பார்த்து, கேட்டு எழுதிய பிறகே நோயுள்ளவருக்கு வழங்கப்படுகிறது. இப்படியான சோதனைகள் நடைபெறாமல் மருந்துகளை நேரடியாக நோயாளிக்கு பரிந்துரைக்க கூடாது. மருத்துவர் சாமுவேல் கூடுதலாக ஒரு நிபந்தனையையும் கூறுகிறார். அதாவது, ஓமியோபதி மருத்துவர் தனக்கு தேவையான மருந்துகளை தானே தயாரித்துக்கொள்ளவேண்டும் என்கிறார். நவீன காலத்தில் அவரின் அறிவுரை எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. மருத்துவர், நோயாளிக்கான மருந்தை தானே தயாரிக்கவேண்டும். அதன் தரம், தூய்மை, வீரியம் பற்றிய கவலைகள் காரணமாக இருக்கலாம். ஒவ்வாமைக்கு எனக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அனைத்துமே உள்மருந்துகள்தான். வெளியே பூச ஏதுமில்லை. எனக்கு தொடக்கத்தில் குழப்பமாக இருந்தது. மருத்துவர் அதைப்பற்றி தெளிவாக எதையும் கூறவில்லை. நானும் மருந்துகளை ஏதாவது கொடு...

ஓமியோபதி மருந்துகளால் உருவாக்கப்படும் செயற்கையான வியாதி!

      மருந்து = நஞ்சு ஓமியோபதி ஓமியோபதி மருந்துகளை தோல் நோய்க்கு சாப்பிடும்போது, வெளியில் தடவுவதற்கு கொடுக்கும் மருந்து பொதுவாக சூழல்களால் ஏற்படும் எரிச்சலை, அரிப்பை தடுக்க மட்டுமே. மற்றபடி உள்ளுக்குள் கொடுக்கும் தாய் திராவகம், இனிப்பு உருண்டை மருந்துகள், சப்பி சாப்பிடும் இனிப்பு மாத்திரைகள் மட்டுமே நோயைத் தீர்க்கும். தொடக்கத்தில் ஓமியோபதிக்கு கொடுத்த மருந்துகள், இருக்கும் நோயை அதிகப்படுத்தின. காளான்படை என வைத்துக்கொள்வோம். இந்த ஒவ்வாமை நோய்க்கான உணவு பிரச்னையை நான் முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். சித்த மருந்துகளை சாப்பிட்டபோது, உள்ளுக்கும் மருந்துகளை சாப்பிடவேண்டும். வெளியிலும் நெய் மருந்துகளை பூசவேண்டும். பூசி வைத்து ஒரு மணிநேரம் அல்லது அரைமணிநேரம் வைத்து கழுவ வேண்டும். தலைமுதல் பாதம் வரை எனக்கு கொப்புளங்கள் வெடித்து அதில் சீழும் ரத்தமும் வந்தது. மருந்துகள் விலை அதிகம், தங்கியிருந்த வீட்டில் குளிக்க, குடிக்க நீர் பிரச்னை என்றாலும் கூட வேறுவழியில்லை என்பதால், சித்த மருத்துவத்தை கடைபிடிக்க நேரிட்டது. சென்னையில், வழக்குரைஞர் தொடங்கிய ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைய...

ஓமியோபதி மருந்துகளை எப்படி சாப்பிடுவது?

படம்
        ஹோமியோபதியில் நான் சிகிச்சைக்கு சென்றபோது, ஆறே மாதம் நோய் தீர்ந்துவிடும் என மருத்துவர் சூளுரைத்தார். இதை தன்னம்பிக்கை அல்லது அகங்காரம் என எப்படி வகைப்படுத்துவது என தெரியவில்லை. பரவாயில்லை. ஆனால், அவர் சொன்ன காலகட்டம் எல்லாம் எப்போதே தாண்டிவிட்டது. தற்பெருமை கொண்டவர்களிடம் அவர்களின் திறமையின்மை பற்றி சொல்லக்கூடாது. கோபம் கொண்டுவிடுவார்கள். அடிப்படை தத்துவத்திற்கு வருவோம். உங்களுக்கு ஒரு நோய் உள்ளது. அந்த நோயை எந்த காரணி உருவாக்குகிறதோ, அதை நீரைச் சேர்ந்து நீர்த்துப்போன வடிவமாக மாற்றி மருந்துகள் உருவாக்கப்படுகிறது. பிறகு, மருந்தின் வீரியத்தை காக்க சர்க்கரை, ஆல்கஹால் என இரண்டில் பதப்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளிலும் அதன் தூய்மை, வீரியம் சார்ந்து மருந்துகளின் விலை பல்லாயிரம் வரை செல்கிறது. குறிப்பாக தாய் திராவகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஆங்கிலத்தில் மதர் டிங்க்சர் என்று கூறலாம். தாய் திராவகத்தை மருத்துவர் உள்ளுக்கும் சாப்பிடச்சொல்வார். வெளியில் கூட தடவலாம். ஏதாகிலும் அதை மருத்துவரே பரிந்துரைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்கும் மருந்துகள் மூன்று நா...

அரிய நோய்களுக்கான மருந்துகள்!

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி ஆர்பன் ட்ரக் என்றால் என்ன? மக்கள்தொகையில் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை தாக்கும் நோய்களுக்கான மருந்துகளை ஆர்பன் ட்ரக் என்று கூறுகிறார்கள். இந்த மருந்துகள் அதிக லாபத்தை மருந்து கம்பெனிகளுக்கு கொடுப்பதில்லை. ஆனால், அரிய நோய்களுக்கு மருந்துகள் அவசியம் தேவை. எனவே, அமெரிக்க அரசு ஆர்பன் ட்ரக் ஆக்ட் 1983 என தனிச்சட்டம் போட்டு மருந்து நிறுவனங்களுக்கு நிதி உதவியை அளிக்கிறது. மருந்துகளை தயாரிக்க வைத்து வெளியிட உதவுகிறது. ஆன்டிபயாடிக் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்? செல்மன் வாக்ஸ்மன் என்பவர், நோய்க்கு பயன்படுத்தும் பாக்டீரிய நுண்ணுயிரிகளை ஆன்டி பயாடிக் என்று கூறினார்.கூறிய காலம் 1940களின் மத்தியில் என வைத்துக்கொள்ளலாம். இவருக்கு முன்னதாக ஆன்டிபயாசிஸ் என்பதை கூறியவர், பால் வுயில்மன். இவர் பாக்டீரியங்களின் வளர்ச்சிக்கு உதவும் ப்யோசைனின் என்ற வேதிப்பொருளைக் கண்டுபிடித்து தனியாக பிரித்தெடுத்தார். இந்த வேதிப்பொருள் ஆய்வகத்தில் சோதனைக்குழாயில் பாக்டீரியா வளர்வதை ஊக்கப்படுத்துகிறது. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷம் இது.    

ஆயுர்வேத அடிப்படைகளை விளக்கிப் பேசும் நூல்!

படம்
          பதார்த்த விஞ்ஞானம் எல் மகாதேவன் தமிழ்நாடு அரசு மின்னூலகம் பதார்த்த விஞ்ஞானம் என்ற நூல், மொத்தம் 393 பக்கங்களைக் கொண்டது. இந்த நூலின் அடிப்படை ஆயுர்வேதம் என்றால் என்ன, அதில் நோய்களை எப்படி மருத்துவர்கள் அடையாளம் காண்கிறார்கள் என்பதை விளக்குவதேயாகும். ஆனால், நூலின் பெரும்பகுதியில் ஆயுர்வேதத்திற்கு அடிப்படையான பல்வேறு மெய்யியல் நூல்களை வரிசையாக விளக்கி கூறிக்கொண்டே வருகிறார் ஆசிரியர். பிறகு, ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதைக்கு வருகிறார். வடமொழி நூல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட தமிழ்நூல் என்பதால், வடமொழி சொற்கள், வார்த்தைகள், சுலோகங்கள், பாடல்கள் நிறைய உள்ளன. வடமொழியை புகழ்ந்தும் இறுதியில் வாசகம் உள்ளது. நூல் முடியும்போது, வடமொழியை ஏன் தொன்மை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என தந்திரயுக்தி பகுதி விளக்குகிறது. வடமொழியைக் கற்றவர்கள்தான் ஆயுர்வேதம் கற்க முடியும், கற்கவேண்டும் என அழுத்திக் கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தின் அடிப்படை, மூன்று தோஷங்கள், பஞ்ச பூதங்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம் என பல்வேறு விஷயங்களை வாசகர்களுக்கு தெளிவாக விளக்க முனைகிறது...

மக்களின் நோய் தீர்க்க மருந்து தேடி ஆபத்தான கல்லறையைத் திறக்க செல்லும் பொக்கிஷக் குழுவின் கதை!

படம்
  moutain porter சீன திரைப்படம் ஒன்றரை மணிநேரம் ஐக்யூயி ஆப் இதுவும் கொடூரமான குணம் கொண்ட ராணியின் கல்லறையைத் திறக்கும் கதைதான். ஆனால் அதை திறக்கும் காரணம், பொக்கிஷமல்ல.  கிராமத்து மக்களை பாதிக்கும் நோயைத் தீர்க்க மருந்து தேடி கல்லறைக்கு வருகிறார்கள்.இவர்களைக் கொல்ல பின்தொடர்ந்து கொள்ளைக்கூட்டம் ஒன்று வருகிறது. இறுதியில் அனைவரும் இறந்துவிட நாயகனும் நாயகியும் மட்டும் பிழைக்கிறார்கள். இறுதியாக கூட மருந்து கிடைப்பதில்லை. அதைத்தேடி அலைவதோடு கதை முடிகிறது.  இந்த கதை தொடங்கும்போது, நாயகன் ஒரு கண்ணாடி ஒன்றைத் தேடி வருகிறான். அதை இன்னொரு இளம்பெண் திருடிக்கொண்டு செல்கிறாள். அவள் ஒரு அடிமை. கடவுள் திருவிழாவில் பலியிடுவதற்காக அவளை கட்டிவைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணைத்தான் நாயகன் காப்பாற்றுகிறான். ஆனால் அவள் உண்மையில் யார் என்பது இறுதியாக தெரியும்.  இந்த படத்தில் சுவாரசியம், அவரின் அப்பா, அவரின் நண்பர் ஆகியோர் ராணியின் குகைக்கு சென்று மாட்டிக்கொள்கிறார்கள். அதில், நாயகனின் அப்பா காணாமல் போகிறார். நண்பர் எப்படியோ காயங்களோடு தப்பித்துக்கொள்கிறார். இதனால், நாயகனுக்கும் அவனது அப்...

அன்றைய காலம் தொட்டு இன்றைய வரையில்.... உடற்பயிற்சி

படம்
  காலம்தோறும் உடற்பயிற்சி 1500 கி.மு மெக்சிகோவில் பெருகிய ஆல்மெக் மக்களின் குடியேற்றம் புதிய விளையாட்டை உருவாக்கியது. பெரிய ரப்பர் வளையத்திற்குள் வீரர்கள் தங்கள் இடுப்பு, கால்களை பயன்படுத்தி உள்ளே புகுந்து வெளியே வரவேண்டும்.  1400 கி.மு பரோகா கல்லறையில் மன்னர்கள் குத்துச்சண்டை, வில் போட்டி, ஓடுதல் ஆகியவற்றில் மக்களை ஊக்குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.  776 கி.மு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறத் தொடங்கியது. ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது நாடு பிற நாடுகள் மீது போர்தொடுக்க உதவும் என நம்பினர்.  1316 இரு சுவர்களுக்கு நடுவில் கைப்பந்து விளையாடும் பழக்கம் பிரெஞ்சு நாட்டில் இருந்தது. இந்த விளையாட்டிற்கு ஜீ டி பாமே என்று பெயர்.  14-15ஆம் நூற்றாண்டு மத்தியகால ஐரோப்பாவில் கும்பலாக கால்பந்து விளையாடுவது வழக்கமாக இருந்தது. எந்த வரைமுறையும் இல்லாமல் கால்பந்தை உதைத்து விளையாடும் இந்த விளையாட்டு போட்டிகள் பலவும் வன்முறையில் முடிந்தன. எனவே. இந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது.  1553 ஸ்பெயின் நாட்டு மருத்துவர் கிறிஸ்டோபல் மென்டெஸ் என்பவர், முதல் உடற்பயிற்சி நூலை எழுதி வெ...

உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்!

படம்
  உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்! உடற்பயிற்சி செய்யவே ஒருவர் சற்றேனும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். யோகா செய்ய பொறுமை தேவை. ஆனால் எடைகளை தூக்க, கயிறுகளை இழுக்க, பலம் தேவை. இப்படி செய்யும் உடற்பயிற்சி ஒருவருக்கு மருந்தாக செயல்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி செய்பவர்கள், திண்ணென்ற மார்பை பிறருக்கு காட்ட முயல்வார்கள். ஆனால் அதை பயில்வதன் மூலம் நோயை விரட்ட முடியுமா? மார்க் டர்னோபோலோஸ்கி என்ற ஆராய்ச்சியாளர், முன்கூட்டியே வயதாகுவதை ஏற்படுத்தும் மரபணு பிரச்னை தொடர்பாக ஆராய்ந்தார். இதில், உடற்பயிற்சி செய்தவர்களுக்கு நோயின் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. பொதுவாக உடல் ஆரோக்கியம் என்ற வகையில் உடற்பயிற்சி சரிதான் என்பவர்களும் கூட பயிற்சிகளை அடர்த்தியாக தீவிரமாக செய்யத் தொடங்குபவர்களை நேரத்தை வீணடிக்கிறான் என்பார்கள். உண்மையில், உடற்பயிற்சி முன்கூட்டியே நோய்களை தடுப்பதோடு, உடலில் உள்ள நோய்களின் பாதிப்பையும் குறைக்கிறது என்பதே உண்மை.  ஆராய்ச்சியாளர் மார்க், எலிகளை வைத்து செய்த சோதனையில் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். அதில், உடற்பயிற்சி செய்ய பயிற்றுவிக்கப்பட்ட எலிகளின் ...

வயதாவதை தடுக்கும் உடற்பயிற்சி!

படம்
  வயதாக கூடாது என நினைப்பது தவறு கிடையாது. அதற்கு என்ன செய்யலாம் என நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதிக ஆயுள் கொண்டவர்களை ஆய்வு செய்து உணவு, வாழ்க்கைமுறையைக் கூட பதிவு செய்து வருகிறார்கள். உண்மையில் உணவு, லோஷன், காய்கறி, பழம் என ஏதுமே உதவாது என்பதே உண்மை. காரணம், வயதாவதை, உடல் பலவீனமாவதை தடுக்க முடியாது. ஆனால் அதன் வேகத்தை உடற்பயிற்சி மூலம் குறைக்கலாம். குறிப்பாக இதயநோய்கள், வாதத்தை உடற்பயிற்சிகள் செய்வது குறைக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.  செல்களில் உள்ள நச்சை நீக்கினால்தான் ஒருவர் வயதாவதைத் தீர்க்க முடியும். அந்த வகையில் உடற்பயிற்சியே உதவுகிற கருவியாக உள்ளது. உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்பின் சுரக்கிறது. சோர்வை போக்குவதோடு, மூட்டுகளை இலகுவாக்குகிறது. உடல் முழுக்க ஆக்சிஜன் செல்வதை ஊக்கப்படுத்துகிறது. செல்களின் வயதை டிஎன்ஏவே தீர்மானிக்கிறது. இந்த செயல்பாட்டில் உடற்பயிற்சி தாக்கம் ஏற்படுத்துகிறதா என்று தெரியவில்லை.  இதுவரை உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் ஒரே நாளில் மாரத்தான் ஓடவேண்டியதில்லை. மெதுவாக பயிற்சிகளை ச...

தனது குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்க சிறு குறுங்கத்தியோடு கிளம்பும் விஷ ராஜா!

படம்
  பாய்சன் கிங், வெனோம்கிங் மாங்கா காமிக்ஸ்  எப்படி சிலந்தி கடித்து மாணவன் ஒருவன் சிலந்தி மனிதன் ஆகிறானோ அதேபோல சென்டிபீட் எனும் விஷப்பூச்சியை ஜின் ஜகான் கடித்துக்கொல்கிறான். அதன் விஷம் உடலுக்குள் இறங்க சுயநினைவை இழக்கிறான். அவனது தாத்தா, பேரனின் உயிரைக் காப்பாற்ற மாத்திரை ஒன்றை அவனுக்கு கொடுக்கிறார். அந்த மாத்திரை ஜின்னின் உடலில் உள்ள ரத்தத்தை ஜெல் போல மாற்றி விஷம் அவனை பாதிக்காதவாறு மாற்றுகிறது.  மருத்துவ இனக்குழு, விஷ இனக்குழுக்களால் முழுமையாக தோற்கடிக்கப்படுகிறது. நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு பழிவாங்க சிறுவன் ஜின் எழுகிறான். அவனது பலமே சென்டிபீட் மூலம் உடலுக்குள் சேகரமான விஷம்தான். அதை வைத்து அவனை விட பலமடங்கு வலுவான எதிரிகளிடம் போரிடுகிறான். சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் அடிபட்டு உதைபட்டு நினைவிழந்து வீழ்ந்தாலும் தைரியத்தை இழப்பதில்லை. தான் தோற்றுவிட்டேன். தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எ்ன்பதை அவன் கூறுவதில்லை. அவனது மன உறுதியும் போர் திட்டங்களும் அவனோடு இருப்பவர்களுக்கும், சமயங்களில் அவனது எதிரிகளுக்கும் கூட திகைப்பை ஏற்படுத்துகிறது.  மருத்துவ இனக...

மருந்தில்லாமல் உளவியல் குறைபாடு குணமாக வாய்ப்புள்ளதா?

படம்
  ஸ்காட்லாந்தின் கிளாக்ஸோவில் பிறந்தவர் ஆர் டி லைங். கிளாக்ஸோ பல்கலையில் மருத்துவம் படிப்பை படித்தவர், பிரிட்டிஷ் ராணுவத்தில் உளவியலாளராக பணியாற்றினார். அங்கு மனநிலை சிதைந்துபோன நோயாளிகளைப் பார்த்தார். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயன்றார். அந்த ஆர்வம் அதிகமாக, லண்டனில் இயங்கிய லாவிஸ்டாக் என்ற மருத்துவமனையில் உளவியல் சார்ந்த சிகிச்சைகளுக்காக பயிற்சி பெற்றார்.  1965ஆம் ஆண்டு லைங் மற்றும் அவரது சகாக்கள் பிலடெல்பியா அசோஷியேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பில்  உள்ளவர்களும், உளவியல் குறைபாடு உள்ளவர்களும் ஒரே கட்டிடத்தில் ஒன்றாகவே வாழ்ந்தனர். அன்றைக்கு பிரபலமாக இருந்த உளவியல் சிகிச்சை முறைகளுக்கு முழுக்க எதிரானதாக குடும்ப சிகிச்சை முறை இருந்தது. அதை முழுமையானதாக லைங் உருவாக்கவில்லை. அவரது குண இயல்புகளும், சிகிச்சை செயல்பாடுகளும், ஆன்மிக செயல்பாடுகளும் பின்னாளில் அவரது பெருமையை உருக்குலைத்தன. 1989ஆம்ஆண்டு மாரடைப்பால் காலமானார்.  முக்கிய படைப்புகள்  1950 the divided self 1961 the self and others 1964 sanity madness and the family 1967 the politics of experienc...

அவதாரம் 1 - உள் ஆழத்தில் ஒரு எதிரொலி மின்னூல் வெளியீடு!

படம்
உளவியல் குறைபாடுகள், அதற்கான சிகிச்சை, மருந்துகள் பற்றி விவரிக்கிற நூல் இது. இந்த நூல் மூலம் ஒருவர் உளவியல் குறைபாடுகள், அதன் அறிகுறிகள், மருந்துகள் ஆகியவற்றைப் பற்றி அறியலாம். மற்றபடி மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை நேரடியாக ஒருவர் பயன்படுத்தக்கூடாது. இந்த நூல் உளவியல் குறைபாடுகளை, அறிகுறிகளை அறிந்துகொள்ள உதவும் வழிகாட்டி நூல் மட்டுமே.  https://kdp.amazon.com/en_US/bookshelf?publishedId=ARXS766BBPQT0

அவதாரம் மின்னூல் அட்டைப்படம் வெளியீடு!

படம்
 

மருத்துவ சோதனையால் நோயுற்ற கிராம மக்களைக் காப்பாற்ற கொலைத்தாண்டவமாடும் பொதுநல நேசன்!

படம்
                பத்ராத்ரி தெலுங்கு ஶ்ரீஹரி , கஜாலா பத்ராத்ரி என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மருந்துகளை பார்மசூட்டிகல் நிறுவன அதிபர் பரிசோதிக்கிறார் . இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் , அவரது துறைசார்ந்த பிற அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் . இதனால் அந்த கிராமத்தில் வாழும் பல நூறு மக்கள் வியாதி வந்து வாழும் பிணம் போல மாறுகிறார்கள் . இதை தடுக்க அந்த கிராமத்தில் உள்ள ரகுராம் என்பவர் முயல்கிறார் . அவரது தம்பியை மருத்துவம் படிக்க வைக்கிறார் . கிராமத்தினர் நோய்களிலிருந்து மீண்டனரா என்பதே கதை . தொடக்க காட்சியில் சிறைக்குள் சென்று குற்றவாளி ஒருவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொல்கிறார் ரகுராம் . அடுத்து , போலீசார் துரத்த அவர்களை பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து பீதிக்குள்ளாக்கி தப்பித்து பத்ராத்ரி வருகிறார் . அங்குள்ள மக்களுக்கு தம்பி கொடுத்ததாக மாத்திரைகளை கொடுக்கிறார் . அவரது குடும்பத்தில் அம்மா , மாமா , அவரின் பெண் ஆகியோர் இருக்கிறார்கள் . மாமா பெண்ணை , மருத்துவரான பிறகு தம்பி திருமணம் செய்துகொள்வதுதான் ஏற்பாடு . அதைப்பற்றி...

செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - அமீலியோ, பிளைண்ட், கிராபிகா

படம்
  அமீலியோ - சிறைக்கைதிகளுக்கான வீடியோ அழைப்பு டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023   நோவா நார்டிஸ்க் அமெரிக்க சந்தையில் நோவா நார்டிஸ்கின் ஆசம்பிக், ரைபெல்சஸ் ஆகிய மாத்திரைகளுக்கு கிராக்கி அதிகம். ஏனெனில் இந்த மாத்திரைகள் உடல் எடை குறைப்பிற்கானவை. இந்த மாத்திரைகளை இரண்டாம் நிலை நீரிழிவுக்கும் பயன்படுத்தலாம். நோவா மருந்து உற்பத்தி நிறுவனம், தனது மருந்துகளை எப்படி பயன்படுத்துவது, யாருக்கு பரிந்துரைப்பது என்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. உடல் எடை குறைப்பு சந்தை பெரியது. அதில் நோவாவின் மாத்திரைகளைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் அதிகம். அதையும் அந்த நிறுவனம் அறிந்திருக்கிறது. அல்சீமருக்கான மருந்துகள், சிகிச்சைகளை வழங்கவதற்கு திட்டமிட்டு வருகிறது. இதன் இயக்குநர் லார்ஸ் ஃப்ரூயர்கார்ட். #Nova nordisk கிராபிகா செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்படும் போலி செய்திகள், போலி புகைப்படங்கள், பிரசாரங்களை அலசி ஆராய்ந்து உண்மை என்ன என்பதை கிராபிகா கண்டுபிடிக்கிறது. இந்த நிறுவனம், அமெரிக்காவின்   நியூயார்க் நகரில் செயல்படுகிறது. 2022ஆம் ஆண்டு மெட்டா, கூகுள், ஸ்டான...

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மனிதர்களின் ஏற்றமும், வீழ்ச்சியும்! மருந்து - புனத்தில் குஞ்ஞப்துல்லா

படம்
  எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா மருந்து - நாவல் மருந்து புனத்தில் குஞ்ஞப்துல்லா தமிழில் சு.ராமன் வாரணாசியில் உள்ள மருத்துவமனைக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை. அங்கு பணியாற்றும் பல்வேறு மனிதர்களின் கதை. கதையின் தொடக்கத்தில் தேவதாஸ் என்ற இளைஞர், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக வருகிறார். இப்படி தொடங்கும் கதை பிறகு, லெஷ்மி, டி குமார், ஹஸன், க்வாஜா, தனுஜா, மேட்ரன் ஹெலன், மேரி, குஞ்சம்மா, பியாரோலால் என நிறைய பாத்திரங்களைக் கொண்டதாக மாறுகிறது. இதில், குறிப்பிட்ட பாத்திரங்களை மையப்படுத்தி நகர்கிறது என எதையும் சொல்ல முடியாது. ஆனாலும் மேரிக்கான இடமும், அவளுக்கான விவரணைகளும் நன்றாக உள்ளன. பிறருக்கான வலி, வேதனைகளை அறிந்து மருந்து கொடுத்து அவர்கள் வாழ்வதற்கு தைரியம் தருபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள். அதேசமயம் அவர்களது தனிப்பட்ட தொழில் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்னைகள், சீர்கேடுகள், மன உளைச்சல்கள் எழுகின்றன. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை புனத்தில் தனது வசீகரமான மொழியில் கூறியுள்ளார். தேவதாஸ் –லெஷ்மி கதை, எப்போதும் போலான காதல் கதையாக மாறுவதற்கான அனைத்து வா...