உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்!

 











உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்!




உடற்பயிற்சி செய்யவே ஒருவர் சற்றேனும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். யோகா செய்ய பொறுமை தேவை. ஆனால் எடைகளை தூக்க, கயிறுகளை இழுக்க, பலம் தேவை. இப்படி செய்யும் உடற்பயிற்சி ஒருவருக்கு மருந்தாக செயல்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி செய்பவர்கள், திண்ணென்ற மார்பை பிறருக்கு காட்ட முயல்வார்கள். ஆனால் அதை பயில்வதன் மூலம் நோயை விரட்ட முடியுமா?


மார்க் டர்னோபோலோஸ்கி என்ற ஆராய்ச்சியாளர், முன்கூட்டியே வயதாகுவதை ஏற்படுத்தும் மரபணு பிரச்னை தொடர்பாக ஆராய்ந்தார். இதில், உடற்பயிற்சி செய்தவர்களுக்கு நோயின் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. பொதுவாக உடல் ஆரோக்கியம் என்ற வகையில் உடற்பயிற்சி சரிதான் என்பவர்களும் கூட பயிற்சிகளை அடர்த்தியாக தீவிரமாக செய்யத் தொடங்குபவர்களை நேரத்தை வீணடிக்கிறான் என்பார்கள். உண்மையில், உடற்பயிற்சி முன்கூட்டியே நோய்களை தடுப்பதோடு, உடலில் உள்ள நோய்களின் பாதிப்பையும் குறைக்கிறது என்பதே உண்மை. 


ஆராய்ச்சியாளர் மார்க், எலிகளை வைத்து செய்த சோதனையில் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். அதில், உடற்பயிற்சி செய்ய பயிற்றுவிக்கப்பட்ட எலிகளின் ரத்தத்தில் நிறைய மாறுதல்கள் இருந்தன. தினசரி ஓட்டப் பயிற்சி செய்பவர்களின் தோல் வளமாகும், கண் ஆரோக்கியம் சீராகும் என்பதைக் கண்டறிந்தார். 


வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். அமெரிக்காவில் 82 மில்லியன் மக்கள் எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் வாழ்கிறார்கள். இதயநோய்கள், புற்றுநோய், அல்சீமர் ஆகியவை இவர்களுக்கு ஏற்படுகிறது. ஏற்கெனவே முதுகுவலி, மூட்டுவலி இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்யாதபோது நிலைமை இன்னும பிரச்னைக்குரியதாக மாறும். 


உடற்பயிற்சியை சிறியளவில் தொடங்கி பிறகு மென்ஸ் ஹெல்த், வுமன்ஸ் ஹெல்த், மலையமானின் கட்டழகு கைகள் ஆகியவற்றைப் படித்து தீவிரமாக்கிக்கொள்ளலாம். அதில் எந்த தவறுமில்லை. நீண்டகால நோய் இருப்பவர்கள், பயிற்சிகளை மருத்துவர் வழிகாட்டுதலுடன் செய்யலாம். தீவிரமான பயிற்சியில் பத்து நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்ளலாம். அதைவிட ஓய்வு நேரம் நீளக்கூடாது. பளு தூக்கும் உடற்பயிற்சிகள் ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் ஆதரவானது. நல்லது. எனவே, உடல் எடையை மட்டுமே வைத்து பயிற்சி செய்தாலும் கூட பளு தூக்கும் பயிற்சிகளை முழுக்க தவிர்க்காமல் செய்வது அவசியம். 


தொடக்கத்தில் மருத்துவர்கள் நோயைத் தடுக்க உணவுமுறை மட்டுமே போதாது. அதற்கு துணையாக உடற்பயி்ற்சியும் தேவை என்று நினைத்தனர். ஆனால், 1900க்குப் பிறகு, அறுவை சிகிச்சை மேம்பட்டபிறகு, நோயைத் தடுப்பது என்பது மாறியது. நோய் வந்தால் அதை நீக்குவது என சிந்தனை மாற்றம் கண்டது. இதனால் உடற்பயிற்சி என்பது நோயைத் தடுக்கும் அம்சம் என்ற கருத்து மக்களின் மனதில் இருந்து அகன்றது. விளையாட்டு மைதானங்கள், அதில் பயிற்சியில் ஈடுபவர்கள் விளையாட்டு சார்ந்த ஆர்வம் காரணமாகவே அதை செய்கிறார்கள் என பலரும் நம்பினர்.  இதன் காரணமாகவே பள்ளிகளி்ல் இருந்த விளையாட்டு வகுப்புகள் கூட பாட ஆசிரியர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. உடல் அளவில் மாணவர்கள் பலவீனமானவர்களாக உருவாகத் தொடங்கினர். 2017ஆம் ஆண்டு, அமெரிக்காவில் 3 ஆயிரம் பங்கேற்பாளர்களை வைத்து உடற்பயிற்சி தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கான செலவு 170 மில்லியன் டாலர்கள். 


உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் காலத்தில் உடலில் பசி ஏற்பட்டு சற்று பருமனாக வாய்ப்புண்டு. எடை கூடக்கூட செய்யலாம். அதற்காக நம்பிக்கை இழந்து எதையும் கைவிடவேண்டியதில்லை. பயிற்சிமுறைகளை தீர்க்கமாக அமைத்துக்கொண்டு முயன்றால் போதும். எடை குறையும். 


டைம் தி சயின்ஸ் ஆஃப் எக்சர்சைஸ் 2023 - மாண்டி ஓக்லாண்டர் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

பிக்சாபே


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்