இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி தேடும் இருவர், காடுகளை அழிக்காமல் பொருட்களை தயாரிக்க முயலும் ஆய்வாளர்!

 















reem hajajreh - yael admi




இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்குமான பிரச்னை தீராத ஒன்று. இஸ்ரேலுக்கு அமெரிக்க ஆதரவு உள்ளது. எனவே, சண்டையிட்டால் எப்போதும் அதன் கை ஓங்கி இருக்கும். அதற்காக பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. பலவீனமாக இருந்தாலும் போரிடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. போரைப் பொறுத்தவரை இருதரப்பிலும் இழப்புகள் உண்டு. உயிர்ப்பலி தொடங்கி பொருளாதார பாதிப்புகள் வரை உண்டு. எனவே, இரு தரப்பிலும் அமைதி முயற்சிகளை சிலர் செய்து வருகிறார்கள். அவர்களில் இருவர் முக்கியமானவர்கள். அவர்களின் பெயர்கள் ரீம் ஹஜாஜ்ரே, யேல் ஆட்மி. 


ரீம், வுமன் ஆஃப் சன் என்ற பெண்கள் அமைப்பையும். யேல், வுமன் வேஜ் பீஸ் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து போருக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போராடினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் உண்டு. ஹமாஸ் அமைப்பு, அக்.7 இல்தான் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றது. இறந்துபோனவர்களில் யேலின் வும் வேஜ் பீஸ் அமைப்பின் துணைத்தலைவர் விவியன் சில்வரும ஒருவர். 


அவர்கள் நாட்டுக்குள் புகுந்து மக்களைக் கொன்றால் தன்மானப் பிரச்னை எழுமே? இஸ்ரேல் படை வீரர்கள் காசாவிலுள்ள பாலஸ்தீனர்களை தாக்கி 29 ஆயிரம் பேர்களைக் கொன்றனர். வுமன் ஆஃப் சன் அமைப்பைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் பலியாகியுள்ளனர். ரீம், யேல் என இருவரும் தற்போதைய நம்பிக்கை இல்லாத சூழலைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. அவர்கள் எப்போதும்போல அமைதிக்கான போராட்டங்களை பெண்களைத் திரட்டி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். யேலின் அண்ணன், எகிப்துக்கும், இஸ்ரேலுக்கும் நடந்த போரில் பங்கேற்று உயிரைத் தியாகம் செய்தவர். அந்த செய்தியை அறிந்தபோதிலிருந்து போர் நடக்காமல் இருக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இவரின் அமைப்பிற்கு நாடு முழுவதும் ஐம்பதாயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். யேல் தனது அமைப்பை 2014ஆம் ஆண்டு தொடங்கினார். 


ரீம், தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டு 2021ஆம் ஆண்டு வுமன் வேஜ் பீஸ் அமைப்பைத் தொடங்கினார். பெண்களுக்கு வேலைவாய்ப்பு, பொதுவெளியில் சுதந்திரமான உரிமைகளை உத்தேசித்து இயங்கத் தொடங்கினார். பெண்களுக்கு சரியான கல்வியை அளித்து சரியான இடத்தை அளித்தால் அவர்கள் ஆற்றல் கொண்டவர்களாக மாறுவார்கள் என்றார் ரீம். 2024ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு இரு அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு நாட்டு மக்களவையில் சென்று பேசுவதற்கு ரீம், யேல் என இருவரும் அழைக்கப்பட்டுள்ளது இரு அமைப்புகளுக்கும் முக்கிய அங்கீகாரம். 


-yasmeen aerhan


2


காடுகளிலிருந்து நிறைய வளங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை முழுக்க அழித்துவிட்டால், அதைப்போல ஒன்றை உருவாக்குவதில் முடியுமே ஒழிய உண்மையான காட்டை ஒருநாளும் உருவாக்கிவிட முடியாது. மாங்குரோவ் காடுகள் என பெயருக்கு பச்சை நிறத்தில் எதையாவது வளர்த்துக்கொண்டு சாதித்துவிட்டோம் என திரியலாம். 


எம்ஐடியில் தி எஞ்சின் என்ற பல்வேறு தரப்பினரும் பங்கேற்கும் ஆய்வகம் இயங்கி வருகிறது. அங்குதான் ஃபோரே பயோசயின்ஸ் நிறுவனம் உருவானது. பெக்வித், மரங்களை வெட்டாமல் அதன் செல்களை வைத்து மட்டுமே பல்வேறு விஷயங்களை செய்ய முயன்று வருகிறார். மரப்பொருட்களுக்கு மரங்களை வெட்டாமல் மரத்தின் செல்களை வளர்த்து பொருட்களை தயாரித்து விற்பதே திட்டம். 2022ஆம் ஆண்டு தனது நிறுவனத்தை தொடங்கினார். மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் முனைவர் படிப்பை முடித்தவர் பெக்வித். 


கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் மரங்களிலிருந்து பொருட்களை செய்வதற்காக ஐந்து லட்சம் சதுர மைல் காடுகளை இழந்திருக்கிறோம். இதற்கு மாற்றாக பெக்வித், பிளாக் காட்டன் வுட் மரத்தின் இலைகளிலிருந்து செல்களை தனியாக பிரித்து வளர்த்தெடுத்து பல்வேறு பொருட்களை செய்ய முனைகிறார். பிளாக் காட்டன் வுட்டின் நாரிலிருந்து நிறைய பொருட்களை தயாரிக்க முடியும். உணவு, அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள், உயிரி பிளாஸ்டிக் என பல்வேறு பொருட்களை மரத்தின் செல்களை வைத்து தயாரிக்க முடியும். 


ashley beckwith

foray bioscience



எம்ஐடி ரிவ்யூ

அப்துல்லாஹி சனி



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்