கண்முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராக அமைதி காப்பதும் தவறுதான்! - கோகோ காஃப்
கோகோ காஃப்
coco gauff
டென்னிஸ் வீரரான கோகோ காப், 2023ஆம் ஆண்டில் 22 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். இதில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலம் கிடைத்துள்ளது. இது அவருக்கு பெருமையான ஒன்று. கருப்பினப் பெண்ணாக நான் விளையாடும் விளையாட்டு அந்தளவு பன்மைத்தள்மை கொண்டதல்ல. எனக்கு இது அர்த்தம் கொண்ட ஒன்று என்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், தனது பத்தொன்பதாவது வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை காஃப் வென்றார். போட்டியில், ஆரியானா சபாலென்கா என்ற வீரரை போட்டியிட்டு வென்றார். சாம்பியன் பட்டத்தை பெறும்போது பெயரும் புகழும் கூடவே வரும் என்று தெரியும். ஆனால், அதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. எனது வீட்டில் எத்தனை பட்டங்களை வாங்கி வைக்க முடியும் என்றுதான் யோசித்து வருகிறேன் என்றார்.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியின் அரையிறுதியில் தோற்றாலும் காஃபின் நம்பிக்கை தளரவில்லை. அவர் தான் நினைத்த பாதையில் தீர்க்கமாக சென்றுகொண்டே இருக்கிறார். 2020ஆம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட் போலீசாரால் கொல்லப்பட்டபோது, அதை தீவிரமாக யோசித்துள்ளார். நடந்த அநீதி பற்றி யோசித்தேன். அதை நினைத்து அழுதுள்ளேன். அதுபற்றி ஏதேனும் கூறவேண்டும் செய்யவேண்டும் என்று கூட தோன்றியது. நீங்கள் அநீதி நடைபெறும்போது அமைதியைத் தேர்ந்தெடுத்தால் ஒடுக்குபவரின் பக்கத்திற்கு ஆதரவு தருகிறீர்கள் என்று அர்த்தம். எனக்கு இப்போது இருபது வயதாகிறது. உலகத்திற்கு புதிய மாற்றம் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் மாற்றத்தின் சிறிய பங்காக நான் இருப்பேன் என நம்புகிறேன் என்றார்.
-சீன் கிரிகோரி - டைம் வார இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக