மூன்றாவது பிறப்பில் எதிரிகளை நாயகன் எதிர்கொண்டு வெல்வானா?
அகெய்ன்ஸ் காட்ஸ்
மாங்கா காமிக்ஸ்
மான்வா.காம்.
இதில் நாயகன் பலவீனமானவன். அவனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்த திருமணம் கூட ஒரு நன்றிக்கடனை கழிக்கவே செய்யப்படுகிறது. திருமணத்திற்கு மாப்பிள்ளை கழுதையில் உட்கார வைத்து அழைத்து வரப்படுகிறான். அவனது சொந்தக்காரர்கள் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். மாப்பிள்ளை பலவீனமான உதவாக்கரை என ஊருக்கே தெரிகிறது. அதாவது அவன் தற்காப்புக்கலை கற்க முடியாதபடி உடலில் பிரச்னை இருக்கிறது. மேலும் அவனது அண்ணணுக்கே, தம்பி கட்டிக்கொள்ளும் பெண் மீது பொறாமை உள்ளது. எனவே, தம்பிக்கு விஷத்தை டானிக் என கொடுத்து குடிக்கச் செய்கிறான். அப்போது அவனது உடலில் வேறு ஆன்மா ஒன்று குடியேறுகிறது.
அந்த ஆன்மாவினுள்ளே பொக்கிஷமாக கருதப்படும் விஷம் உள்ளது. அந்த விஷம் டானிக்கிலுள்ள விஷத்தை முறிக்கிறது. புதிய உடலில் குடியேறிய ஆன்மாவுக்கு இது மூன்றாவது வாழ்க்கை. ஏற்கெனவே இரண்டு வாழ்க்கை வாழ்ந்து இரண்டிலும் தற்கொலை செய்துகொண்டு இறந்த வரலாறு கொண்டிருக்கிறது. இந்த பிறவியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கவனிக்கத் தொடங்குகிறது. இதில் ஆறுதல், அவனுக்கு அத்தை முறை வரும் அவனது வயதுள்ள பெண்ணும், மனைவியாக வரும் பெண் என இருவர் மட்டுமே ஆறுதலாக இருக்கிறார்கள்.
குடும்ப அரசியல் உறவுக்கான திருமணம் இது என கல்யாணப் பெண் தெரிந்துகொண்டிருக்கிறாள். எனவே, உடலுறவுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை. அவனை கையாலாகதவன், தனக்கு தகுதியில்லாதவன் என திருமணமான அன்றே இரவில் கூறுகிறாள். நாயகன் யுன்சேவுக்கு அதுவொன்றும் ஆச்சரியமாக இல்லை. அவனது மனைவி குயின்சே தற்காப்பு கலையில் உயரத்தில் இருக்கிறாள். அவளோடு ஒப்பிட்டால் அவனெல்லாம் பொருட்படுத்தக்கூடியே ஆளே இல்லை. ஆனால் அவளுக்கு ஐஸ் ஆற்றல் காரணமாக உடலில் நோய் ஒன்று உருவாகியிருக்கிறது. அதை அவன் தனது வைத்திய ஆற்றல் மூலம் நீக்குகிறான். மற்றபடி அவனுக்கு தாழ்த்தி கேலி பேசும் மனைவியை விட அத்தை முறை வரும் பெண்ணைத்தான் பிடித்திருக்கிறது. அவள், நாயகன் யுன் சேவை பலரும் கேலி கிண்டல் பேசினாலும் அதை பொருட்படுத்தாமல் அவனை காதலிக்கிறாள். உறவுமுறை திருமணம் செய்ய முடியாதபடி செய்துவிட்டது என்ற வருத்தம் நாயகனுக்கும் இருக்கிறது. முதலிரவில் நாயகி அவனை அறையை விட்டு துரத்தியடிக்க, நாயகன் வீட்டுக்கு சற்றுத்தள்ளி காட்டுப்புறமாக மரத்தடியில் தனது அத்தை முறைப் பெண்ணோடு கழிக்கிறான்.
இப்படியே சில நாட்கள் செல்ல, வீட்டின் அருகில் இளவரசி ஜாஸ்மின் என்ற சிறுமி அடிபட்டு கிடக்க அவளை நாயகன் யுன்சே காப்பாற்றுகிறான். அவள் ஒரு தேவதை பிரிவில் வருவாள். அவளுடைய உடலில் விஷம் தாக்கிவிட, அதை சரிசெய்ய நாயகன் யுன்சேவின் உடலில் உள்ள பொக்கிஷமான விஷம் தேவைப்படுகிறது. யுன்சேவின் உடலில் தங்கி அவன் வைத்திருக்கிற விஷத்தைப் பயன்படுத்தி தன்னைக் குணப்படுத்திக்கொள்கிறாள். இவர்களுக்கு இடையில் வரும் அடல்ஸ் ஒன்லி உரையாடலை நீங்களே படித்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த உறவு மெல்ல அண்ணன் தங்கையாக மாறிவிடும். அதுவரையில் உரையாடலை நீங்கள் ரசிக்கலாம். தொடரில் நாயகனை நிறைய பெண்கள் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முயல்வார்கள். அதைப்போலவே அவர்களது உடலை நாயகன் பயன்படுத்திக்கொள்வார். இன்பவேட்டையேதான்.
அத்தை முறை கொண்ட தன் சகவயது பெண்ணை முதலிரவு அன்றே முத்தம் கொடுத்து கட்டியணைத்து சமாச்சாரங்களை செய்வது, அக்கா என சொல்லிக்கொண்டே இளவரசியுடன் பாலுறவு கொள்வது, மனைவியின் குருவைக் காப்பாற்றுவது என சொல்லிக்கொண்டு பாலுறவு கொள்வது என மன்மத லீலைகளில் நாயகனை மிஞ்சவே முடியாது. அந்தந்த நேரத்தில் அவனோடு உள்ள பெண்களை நாயகன் நேசிக்கிறான். இதில் தவறு என்ன இருக்கிறது? ஒரே வாழ்க்கை ஒரே பெண் என வாழ்வது எளிமையான ஒன்றா என்ன?
பீனிக்ஸ் பறவையின் சவால்களை சந்தித்து அதன் வழித்தோன்றலாகி சக்திகளைப் பெறுவது, அசூர் டிராகனின் போட்டிகளில் வென்று அதன் சக்திகளைப் பெறுவது ஆகிய சம்பவங்கள் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. இதில் கூடுதலாக, அசூர் டிராகனின் காணாமல் போன மகள் வாளில் சிறைவைக்கப்படுகிறாள். அவளை மீட்கும் பணி நாயனுக்கு இருக்கிறது. கூடுதலாக, அவனது உடலில் உள்ள சிவப்புத்தலை இளவரசி ஜாஸ்மின் பழைய ஆற்றலைப் பெற சில அரிய மூலிகைகள் தேவை. அதையும் தேடும் முயற்சியில் நாயகன் அலைகிறான்.
157 அத்தியாயத்தில் உள்ள கதை மேலே உள்ளதுதான். உண்மையில் குறிப்பிட்ட இனக்குழுவில் பேரனாக இருப்பவன் வளர்ப்பு பிள்ளைதான் என உண்மை தெரியவரும். எனவே, அதைக் காரணமாக வைத்து அவனுக்கு செய்து வைத்த கல்யாணம் செல்லாது என கூறுவார்கள். அவனது மனைவியையும் அபகரிக்க சிலர் முயல்வார்கள். நாயன் கல்யாண சான்றிதழை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று சொல்லிவிட்டு குடும்ப வீட்டை விட்டு வெளியே வந்துவிடுவான். ஏனெனில் அவன் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கும். திருமணம், மனைவி என்பது மட்டுமே அவனுக்கு தடையாக இருக்கும். அதையும் தூக்கியெறிந்தபிறகு சுதந்திரமாகிவிடுவான். அதேசமயம், தன்னையும் தன் மனைவியையும் சங்கடப்படுத்திய சகோதரனின் கண்களை குருடாக்கி நாக்கை வெட்டி ஆணுறுப்பை சிதைத்து ஆன்ம ஆற்றலைப் பெற முடியாதபடி செய்துவிட்டே வேறிடம் செல்வான்.
ஒரே இடத்தில் இருந்தபடி வாழும் வாழ்க்கை யுன்சேவுக்கு கிடையாது. எனவே, அந்த நேரத்தில் அமையும் பெண்கள், ஆண்களுடன் நட்பு அமைத்துக்கொள்வான். பெண்களுடன் காதல் கொள்வதும் கூட அப்படித்தான். யுன்சே பயன்படுத்தும் கொலோசல் வாள், இரண்டாயிரம் கிலோ எடையுடையது. அதை யாருமே எடுத்து பயிற்சி செய்ய மாட்டார்கள். நாயகன் அதை எடுத்து பயிற்சி செய்து வெற்றிகரமாக தற்காப்புக்கலை போட்டியில் பயன்படுத்துவான். உண்மையில் அந்த வாள் பிறரை பாதுகாப்பதற்கானது. அதை தரையில் குத்தி நிறுத்தினால் நாயகனே கூட அதன் பின்னால் மறைந்துகொள்ளலாம். அந்தளவு அகலமான வாள்.
இந்த மாங்கா காமிக்ஸில் உள்ள ஓவியங்கள் அனைவருக்கும் பிடித்தமானவை என்று கூற முடியாது. எளிமையானவை. வாள் வீச்சில் அந்தளவு தெளிவு, துல்லியம் கிடையாது. வேகமாக வாசிக்க கூடிய கதை.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக