ஐஇடி வெடிகுண்டுகள் - ஒரு அலசல்
காவிக்கட்சி ஆட்சியில் கலவரங்கள் தேசியமயமாக்கப்பட்டு சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது. நாளிதழ்களில், இந்தமுறை எத்தனை பேர் இறந்தார்கள் என எண்ணிக்கை விளையாட்டுதான் மக்கள் விளையாட வேண்டும். அந்தளவு சிறுபான்மையினர் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். சொத்துகள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதில், அதீதமாக வெடிகுண்டு வைப்பதும் புதிதாக சேர்ந்துள்ளது. தேசப்பற்று கொண்ட வட இந்தியர்கள் கட்டுப்பாடு தவறாமல் காவிக்கட்சிக்கு வாக்களித்துவிட்டு வேலை செய்யவும், வாழவும் தென்னிந்தியாவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த ராஜதந்திரம் புரியாத வடநாட்டிலேயே வேலை செய்யும் மக்கள் மாட்டு மூத்திர பைத்தியங்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற இடத்தில் ஐஇடி என்ற வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் பத்துபேர் காயமுற்றிருக்கிறார்கள். ஐஇடி என்பதற்கு இம்ப்ரூவைஸ்டு எக்ஸ்ளோசிவ் டிவைஸ் என்று விரிவாக்கம் கூறுகிறார்கள்.
சிசிடிவி கேமராவில் கஃபேயில் மர்ம மனிதர் பேக்கோடு வந்து உட்கார்ந்திருக்கும் காட்சியை காவல்துறை கைப்பற்றியுள்ளனர். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட குண்டு வகையில் ஐஇடி வருகிறது. இதை குழாய் வெடிகுண்டு தொடங்கி அதிக சேதம் ஏற்படுத்தும் வெடிகுண்டு வகை மாதிரியாக கூட தயாரிக்க முடியும் என அமெரிக்க காவல்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2003ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஈராக்கில் நுழைந்தபோது, அவர்களுக்கு எதிராக ஐஇடி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றை கையில் எடுத்து வீசலாம். வாகனங்களில் பொருத்தி வெடிக்க வைக்கலாம். பேருந்து, ரயில், வாகனங்களில் பொருத்தி வெடிக்கவைக்கலாம். ஆகமொத்தம் வீட்டு முறையில் தயாரித்து மக்களை எளிதாக பலிவாங்கிவிட முடியும்.
வெடிகுண்டு வெடிக்க ஸ்விட்ச், ட்ரிக்கர் இயக்க அமைப்பு, மின்சார சக்தியைப் பெறும் அமைப்பு, கன்டைனர் ஆகிய அமைப்புகள் அடிப்படையானவை. வெடிகுண்டு வெடித்தால், அதில் பாதிக்கப்படும் மக்கள் அதிகமாக இருந்தால்தானே தீவிரவாதிகளுக்கு ஒரு பெருமை? இதற்காக அதில் கண்ணாடி, உலோகங்கள், ஆகியவை சேர்க்கப்படுகின்றன. விபத்தில் பிழைத்தாலும் கூட கண்ணாடி, உலோகங்கள் ஒருவரின் உடலில் ஆழப்பதிந்துவிட்டால், சதையை கிழித்துவிட்டால் ஏற்படும் ரத்த இழப்பு அதீதமாக இருக்கும். உயிர்பிழைக்க வாய்ப்பு குறைவு. ஐஇடி குண்டுகளில் கதிரியக்க தனிமங்கள் சேர்க்கப்படுவது உண்டு. இந்த வகையில் கழிவு யுரேனியம் சேர்க்கப்பட்ட குண்டுகளை டர்ட்டி பாம் என அழைக்கிறார்கள்.
ரயில், விமானம், பேருந்துகளில் குறிப்பிட்ட பொருட்களை ஏற்றக்கூடாது என்பார்கள். ஏனென்றால், உள்நாட்டு மக்களில் உள்ள மேதாவிகள், சில பொருட்களை மட்டுமே வைத்து எளிதாக ஐஇடி குண்டுகளை தயாரித்துவிடமுடியும். குறிப்பாக உரங்களை வைத்து, அதிலுள்ள அம்மோனியம் நைட்ரேட், யூரியா நைட்ரேட், வெடிமருந்து, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவறை வைத்தே வெடிகுண்டுகளை தயாரிக்க முடியும். மூளையைக் கொஞ்சம் பயன்படுத்தவேண்டும். அவ்வளவே.
காஷ்மீரிலுள்ள தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் ஆகியோர் ஐஇடி குண்டுகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ராணுவத்தில் வீரர்களை எதிரி நாட்டுப்படையினர் திசைதிருப்ப ஐஇடிகளை பயன்படுத்துகிறார்கள். இந்த குண்டு ஏற்படுத்தும் பாதிப்பு என்பது, அதன் அளவில்தான் உள்ளது. பெரியளவில் வெடிகுண்டுகள் இருந்தால் காயம், இறப்பு கூடுதலாக இருக்கும். பெரும்பாலும் சிறியதாக இருப்பதால், இதை எளிதாக தயாரித்து யாருக்கும் தெரியாதவாறு வாகனங்களில் மறைத்து வைத்து வெடிக்க வைக்கிறார்கள்.
1993 ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு, 2008ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு, 2006ஆம் ஆண்டு ஜமா மசூதி குண்டுவெடிப்பு, 2013ஆம் ஆண்டு நடந்த போத் கயா குண்டுவெடிப்பு ஆகியவற்றில் ஐஇடி பயன்படுத்தப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை தழுவியது.
கருத்துகள்
கருத்துரையிடுக