கருப்பினத்தவருக்கு குடியிருக்க வீடுகளைப் பெற்றுத்தர உதவும் போராட்டக்காரர்!
லிசா ரைஸ்
lisa rice
வீடுகளை வாங்குவதில், வாடகைக்கு பிடிப்பதில் சாதி, மத, இன வெறி இயல்பாக வெளிப்பட்டுவருகிறது. இதற்கு மேற்குலக நாடுகளும் விதிவிலக்கு கிடையாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, சிறுபான்மையினருக்கு சாதி, மத இழிவு நடக்கிறது என்றால் வெளிநாடுகளில் கருப்பினத்தவருக்கு நடக்கிறது. ஒருவர் வீடு வாங்குவதில் வாடகைக்கு பிடிப்பதில் நிறவெறி சார்ந்த சிக்கல்கள் எழுந்தால் அந்த விவகாரங்களை லிசா ரைஸ் கையாண்டு தீர்வுகளை எட்ட முயல்கிறார்.
அமெரிக்காவில் சொந்த வீடு வைத்துள்ள வெள்ளையர்களின் எண்ணிக்கை அதிகம். வாடகைக்கு வீடு கொடுப்பது, வீடுகளை வாங்குவது ஆகியவற்றில் கருப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அறுபதுகளில் சிறுபான்மையினர் நிறம் சார்ந்த புறக்கணிப்பை அனுமதித்தனர் என்றால் இப்போது வீடு, நிதி வசதி சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்புகளின் மூலம் அதே விஷயம் ஒழுங்குமுறையாக நிகழ்த்தப்படுகிறது. தேசிய வீட்டுவசதி கூட்டமைபு என்ற நிறுவனத்தின் அதிபர், இயக்குநராக உள்ள லிசா ரைஸ், இன்று பாகுபாடு என்பது தானியங்கி முறையி்ல மாறியுள்ளது. எனவே இதை எதிர்கொள்வது கடினம் என்றார். பாகுபாட்டிற்கு எதிராக தீண்டாமைச் சட்டங்களைப் பயன்படுத்தலாம். ஆனால், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய அமைப்புகள் சிறப்பாக செயல்பட முடியாமல் நிதி வசதியின்றி தடுமாறுகின்றன. லிசா ரைஸ் இந்த போதாமையை தனது நிறுவனம் தீர்க்க முயன்று வருகிறார்.
கடன் வழங்குவது, காப்பீடு, வாடகை, வீடுகளை வாங்குவது ஆகியவற்றில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டால் அதை எதிர்த்து லிசா ரைஸ் போராடி வருகிறார். அதிக சம்பளம் கொண்ட கருப்பினத்தவருக்கு கூட வங்கிக்கடன் கிடைப்பதில் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதுதான் வேதனைக்குரியது.
-பெலிண்டா லஸ்காம்பே
கருத்துகள்
கருத்துரையிடுக