தான்சானியாவில் நிலவிய ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க உதவிய சீன வேளாண்மை உத்திகள்!
சீனா - ஆப்பிரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தால் வலிமை பெறும் பெண்கள், குழந்தைகள்! ஆப்பிரிக்காவின் ஜாம்பியா, டான்சானியா, மலாவி ஆகிய நாடுகளில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 2023ஆம் ஆண்டு செய்த ஆய்வில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முப்பது சதவீதம் பேர் ஊட்டச்சத்து இன்றி வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. மேற்கு நாடுகள் ஆப்பிரிக்காவிற்கு உதவி செய்கிறோம் என வெற்றுப்பேச்சு பேசி வந்த நிலையில் சீனா செய்த உதவியால், ஆப்பிரிக்க நாடுகள் மெல்ல வளர்ச்சியை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளன. இதற்கான முதல்கட்டமாக 2019ஆம் ஆண்டு, சீனாவும், ஆப்பிரிக்க நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தன. இதன்படி சீன வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை சாந்த முறைகளை, தொழில்நுட்பத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கி வருகிறது. ஆப்பிரிக்க மாணவர்கள் சீனாவுக்கு வந்து புதிய வேளாண்மை முறைகளை வீரிய பயிர்களைப் பற்றி பயிலத் தொடங்கியுள்ளனர். இந்த மாணவர்களின் எழுச்சியால், ஆப்பிரிக்க நாடுகளான மலாவி, தான்சானியாவில் சோளம், சோயாபீன்...