இடுகைகள்

பறவை சரணாலயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பனைமரத்தில் கூடு கட்டித் தங்கும் கூழைக்கடா!

படம்
  கூழைக்கடா வீடு   மாறிய கூழைக்கடா திருநெல்வேலியில் கூந்தன்குளம் பறவை சரணாலயம் அமைந்துள்ளது. ஆனால் இங்கு ஆண்டுதோறும் வந்துகொண்டிருந்த கூழைக்கடா பறவைகள் இப்போது ஏரியில் தங்கி இனப்பெருக்கம் செய்யாமல் பனைமரங்களில் தங்கி வருகின்றன. 1994ஆம் ஆண்டு கூந்தன்குளம் பறவை சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. இங்கு பறவை ஆய்வாளரான பால் பாண்டி, 55 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துவருகிறார். அவருக்கும் கூழைக்கடா, ஏரி அல்லது ஏரிக்கு அருகில் உள்ள இடங்களில் தங்காமல் பனையில் தங்குவது ஆச்சரியமாகவே உள்ளது. இதற்கு காரணம் இருக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழை சதுப்புநிலத்தை நிறைக்க போதுமானதாக இருக்கவில்லை. அப்போது அங்கு வந்த கூழைக்கடா பறவைகள் நீரின் இருப்பு குறைவாக இருப்பதைப் பார்த்து, அருகிலுள்ள அருமனேரிக்கு சென்றுவிட்டன. அங்குள்ள சதுப்புநிலத்தில்   பனைமரங்கள் அதிகம்.   ‘’சதுப்பு நிலத்தில் நீர் வரத்து குறைவு என்பதால் கூழைக்கடாவோடு பிற பறவைகளையும் காப்பாற்ற, இங்கு வரச்செய்து தக்கவைக்க மணிமுத்தாறு அணையைத் திறந்து நீர் விடுமாறு மாவட்ட ஆட்சியரைக் கேட்டுள்ளோம். இதற்கு கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோரின் ஆதரவும் கிட