கார்டியன் நாளிதழ் - நம்பிக்கை நாயகர்கள் 2024
கார்டியன் நாளிதழ் - நம்பிக்கை நாயகர்கள் 2024 மகளின் நோயை விளக்க புத்தகம் எழுதிய தாய்! டோன்யே ஃபாலுகி எகேசி நைஜீரியாவைச் சேர்ந்தவர் லோலா சோன்யின். இவர் உய்டா புக்ஸ் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார். கவிஞரான இவர் குழந்தைகளுக்காக ஏழு நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு ஊக்கம் தந்த எழுத்தாளராக டோன்யே என்ற எழுத்தாளரை அடையாளம் காட்டினார். டோன்யே, தனது ஒன்பது வயது மகள் சிமோனுக்காக நூல்களை எழுதி வெளியிட்டவர். அவரது மகளுக்கு டவுன் சிண்ட்ரோம் நோய் உள்ளது. இதுபற்றிய நூல்கள் இல்லாத நிலையில், தாயே மகளுக்காக, மகளின் நோயைப் பற்றிய நூலை எழுதியிருக்கிறார். இவரின் நூல்களை உய்டாபுக்ஸ் வெளியிட்டு வருகிறது. டோன்யேவின் வீட்டிக்கு வந்த டவுன் சிண்ட்ரோம் சிகிச்சையாளருக்கு, நோயை எப்படி விளக்குவதென தெரியவில்லை. ஏதேனும் நூல்கள் கிடைக்குமா தேடி சோர்ந்து போயிருக்கிறார். உகோ அண்ட் சிம் சிம் - வாட் இஸ் டவுன் சிண்ட்ரோம் என்ற தலைப்பில் இரு பிரதிகளை அச்சிட்டிருக்கிறார். பிறகு, ஐந்தாயிரம் பிரதிகளை அச்சடித்து விற்றிருக்கிறார். பிறகுதான் உய்டோ பதிப்பக உதவி கிடைத்திருக்கிறது. என்னுடைய குழந்தையின் நிலையை அறி...