குணச்சித்திரம் - இரு திருடர்கள்
இரு திருடர்கள். எங்கள் தெருவில் இரு திருடர்கள் இருக்கிறார்கள். இந்த இரு திருடர்களும் ஒருவரையொருர் நன்றாக அறிவார்கள். இருவரும் பெண்கள். இவர்களின் கணவன்மார்கள் சகோதர்கள். சொத்துக்களை தனியாக வைத்துக்கொண்டு குடித்தனம் செய்கிறார்கள். பெரிதாக இருவருக்கும் இடையே நட்பும் கிடையாது. விரோதமும் கிடையாது. பொதுவாக யாராவது ஒருவரிடம் திருட வேண்டுமென்றால் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள். முதல் திருடரைப் பார்ப்போம். இவரது கணவர் தென்னை மரம் ஏறி பிழைப்பவர். இப்போது வயதாகிவிட்டது. இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் அப்படியே திருட்டு, கொள்ளை, மோசடி, வஞ்சகம், துரோகம் ஆகியவற்றை செய்வதில் கைதேர்ந்தவர்கள். ஐந்து பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே அந்தளவு மோசமில்லை என்று சொல்லாம். கடைசியாக பிறந்தது ஆண் பிள்ளை. இருப்பதிலேயே ஈவு இரக்கம் இல்லாத ஈனப்பிறவி. முதலில் மின் பொருட்கள் சார்ந்த தொழிலை கற்றவர், பிறகு காப்பீடு முகவராக மாறினார். ஏஜெண்டாக மக்களிடம் பெற்ற பணத்தை அரசு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை. தன்னுடைய சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார். பிறகு நல்ல நாள் பார்த்து ராகு எமகண்டம்...