இடுகைகள்

வெப் தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடிகர்களின் தொழில்வாழ்க்கை நீட்டிக்கப்பட்டிருக்கிறது! - இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி

படம்
  மிதுன் சக்கரவர்த்தி மிதுன் சக்கரவர்த்தி இந்தி நடிகர்  நீங்கள் 370 திரைப்படங்களுக்கு மேல் நடித்துவிட்டீர்கள். புதிதாக படம் தொடங்கும்போது பதற்றமாக இருக்குமா? பதற்றம் இருக்காது. ஆனால் நடிக்கும் குழு புதிது என்பதால் முடிந்தளவு கவனமாக இருப்பேன். அக்குழுவோடு முழுமையாக இணைய இரண்டு மூன்று நாட்கள் தேவை. ஜோக்குகளை சொல்லி அனைவரிடம் பேசினால்தான் நான் மூத்த நடிகர் என்பதை பலரும் மறப்பார்கள்.  நீங்கள் நடிக்க வந்து 46 ஆண்டுகள் ஆகிறது. அன்றிலிருந்து இன்றுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன என்று சொல்லுங்கள்.  எண்பது, தொண்ணூறுகளில் ஐந்து பாட்டு, ஐந்து பைட், நிறைய வசனங்கள் என இயங்கினோம். இப்போது முக்கியமான பாத்திரங்களில் பெரிய நடிகர்களே நடித்து வருகிறார்கள். இப்படி நடித்தால் நடிகர்களின் தொழில் வாழ்க்கை இன்னும் நீளும்.  அமேசானின் பெஸ்ட் செல்லர்ஸ் தொடரில் நடிக்கிறீர்கள் அல்லவா? அதில் போலீஸ் பாத்திரம். அவரின் பாத்திரத்தை பிறர் எளிதாக கணிக்கவே முடியாது. தனக்கென தனி யூடியூப் சேனலை வைத்து கொண்டிருக்கும் அதிகாரி. நகரில் எங்கு என்னென்ன உணவு கிடைக்கும் என பேசிக்கொண்டே இருப்பவர். அதேசமயம் இரக்கமில்லாமல் நடந்துகொ

ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சிறந்த ஆப்கள் 2021!

படம்
கிளிப்ஸ் ஆப்பிளில் பயன்படுத்தும் வீடியோ எடிட்டர். இதனைப் பயன்படுத்தி எளிதாக வீடியோக்களை எடுக்கலாம். உங்களை புகைப்படம் எடுத்து, அதன் பின்னணியை ஆக்மெண்ட் ரியாலிட்டி முறையில் கூட மாற்றிக்கொள்ளலாம்.  ஷோமேக்ஸ் படங்களைப் பார்க்கும் சேவை இது. மொபைலா, டிவியா என முடிவு செய்து பணத்தை சந்தா வாக கட்டிக்கொள்ளலாம். ஆண்ட்ராய்ட், ஆப்பிள் என எதிலும் படங்களைப் பார்க்கலாம்.  டேஸ்டி சமையலறையில் பயன்படும் ஆப். இதை வைத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகளை பயன்படுத்தலாம். அதன் வடிவம் எப்படி வரவேண்டும் என்பதைக்கூட இந்த ஆப் கூறுகிறது. ஆண்ட்ராய்ட், ஆப்பிளில் இலவசமாக பயன்படுத்தலாம்.  ஜஸ்ட் வாட்ச் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வீடியோ சேவைகளை வழங்கும் ஆப். பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து ஒன்றாக வழங்குகிறது. உங்களுக்கு எது தேவையோ அதை பார்க்கலாம். இலவசமான ஆப்தான்.  ரேவ் டிவி தொடர்களைப் பார்ப்பது, பிறகு அதைப்பற்றி விவாதிப்பது என அனைவருக்கும் பிடித்ததுதானே அதைத்தான் இந்த ஆப்பில் செய்யப்போகிறீர்கள். இதனால் உலகத்திற்கு நாம் பார்த்து ரசித்த விஷயங்களை சொல்லலாம் என நினைத்தவர்கள் ஏமாற மாட்டார்கள்.  லூம்  ஆப்பிளில் மட்

சலூன் நடத்தியபடியே இலக்கிய சிற்றிதழை நடத்திய மனிதர்! - கடிதங்கள்

படம்
          அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது . பகலில் மட்டுமல்ல இரவிலும் கூட பயங்கரமாக புழுங்குகிறது . கீழே உட்கார்ந்து வேலை செய்வது கடினமாக உள்ளது . தேர்தல் முடிந்தபிறகு ஈரோடு செல்வேன் என்று நினைக்கிறேன் . எழுதுவதற்கான விஷயங்களை மெல்ல திரட்டி வருகிறேன் . படிப்பதற்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும் . ஐ யம் அலைவ் என்ற வெப் தொடரை எம்எக்ஸ் பிளேயரில் பார்த்தேன் . தமிழில் பார்க்க முடியும் . புனைவு கலந்த தொடர் . போலீஸ்கார தந்தை குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர் . தனது இரண்டு பெண்களின் மீதும் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார் . சீரியல் கொலைகாரன் ஒருவனை பிடிக்கப் போகும்போது , அவரது சகா உதவிக்கு வர மறுத்து சூதாட்டத்திற்கு சென்றுவிடுகிறார் . அவனை பிடிக்கும் நினைக்கும்போது , எதிராளியின் தாக்குதலில் இறந்துபோய் விடுகிறார் . இறந்த போலீஸ்காரருக்கு திரும்ப உலகிற்கு வர வாய்ப்பு கிடைக்கிறது . போலீஸ்காரராக இருக்கும் மற்றொரு மனிதரின் உடலில் ஆன்மா புகுகிறது . இவரும் வேலை பார்ப்பது , இறந்த போலீஸ்காரரின் பெண் டிடெக்டிவாக உள்

வெப்தொடர், சினிமா இரண்டிலும் பேலன்ஸ் செய்து நடிப்பேன்! - விஜய் வர்மா

படம்
        மொழிபெயர்ப்பு நேர்காணல் ரீடர்ஸ் டைஜஸ்ட் சுகானி சிங் நடிப்பிற்கு உங்களை அழைத்து வந்தது எது ? நான் குடும்ப தொழிலை செய்யக்கூடாதுஎன்று நினைத்தேன் . அதற்காக பேஷன் டிசைன் , டாட்டூ டிசைனர் , விழாக்களை நடத்துவது , மென்பொருள் பொறியாளர் என பல்வேறு வேலைகளை செய்துள்ளேன் . இதில் சிலவற்றை வெற்றிகரமாக செய்துள்ளேன் . சிலவற்றை மோசமாக செய்துள்ளேன் . எதுவாக இருந்தாலும் அனுபவங்கள் கிடைத்தன என்று நினைத்துக்கொண்டேன் . நான் நடிகனாக இருக்கவேண்டும் என்பதைத்தான் ரகசியமான ஆசையாக நினைத்துக்கொண்டேன் . அப்போதைக்கு அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை . சினிமா , டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தது உங்கள் கனவை நிறைவேற்ற உதவியதா ? இன்ஸ்டிடியூட் , எனக்கு புதிய சன்னலைத் திறந்தது என்பது உண்மை . உண்மையில் அது விபத்துபோலத்தான் நடந்தது என்பேன் . அப்போது இன்ஸ்டிடியூட் இருபது ஆண்டுகளாக முக்கியமான நடிகர்களை உருவாக்கிக் கொண்டிருந்தது . நான் முதல் முறை விண்ணப்பித்தபோது அங்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை . அந்த நிராகரிப்பை என்னால் மறக்கவே முடியாது . பின்னர் , ஹைதராபாத் சென்று சூத்ரதார் என்ற நாட