இடுகைகள்

நாக சௌரியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிற்போக்குத்தனங்களின் அவியல் - கிருஷ்ணா விரிந்தா விகாரி - அனிஷ் ஆர் கிருஷ்ணா - நாக சௌரியா, ஷிர்லி சேதியா

படம்
  கிருஷ்ண விருந்தா விகாரி இயக்கம் அனிஷ் ஆர் கிருஷ்ணா ஒளிப்பதிவு சாய் ஶ்ரீராம் இசை மகதி ஸ்வர சாகர் மரபான ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவன், கிருஷ்ணா. இவன் ஹைதராபாத்தில் உள்ள சொந்தக்காரரின் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான். அங்கு விரிந்தா இளம் பெண்ணைப் பார்த்து காதல் கொள்கிறான். அவள் வட மாநிலத்துப் பெண். அவளுக்கு உடலில் ஒரு குறைபாடு இருக்கிறது. அதைசொல்லி திருமணம் வேண்டாம் என்கிறாள். ஆனால் கிருஷ்ணா, அவளுக்கு சாக்கு போக்குகளை சொல்லி மணக்கிறான். திருமணத்திற்கு பிறகு இருவரின் வீட்டாருக்கும் கலாசார வேறுபாடு, பெண்களை அடிமைப்படுத்தி வைக்கும் பிற்போக்கு தனம் காரணமாக வேறு பாடு வர தம்பதிகள் பிரிகின்றனர். இறுதியில் இவர்கள் இணைந்தார்களா என்பதே கதை. அன்டே சுந்தரானிக்கு என்ற தெலுங்குபடம் பார்த்திருப்பீர்கள். நானி நடித்து வந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியிருப்பார். சாதி, மதம், பெண்ணின் திருமணம், குழந்தைப் பேறு ஆகியவற்றை முற்போக்காக அணுகிய படம். அதேசமயம் அந்த சிக்கலான விஷயங்களை நகைச்சுவையாக அணுகியிருப்பார்கள். அந்த படத்தின் கதையேதான். ஆனால் அனைத்தும் இங்கே தோசையைத் திருப்பிப்போடு கணக்

காதலை சொல்லத் தயங்கும் கோபக்கார பெண்ணின் வாழ்க்கை! - வருடு காவாலேனு 2021

படம்
  வருடு காவாலேனு 2021 தெலுங்கு - தமிழ் டப்  இயக்கம் லஷ்மி சௌஜன்யா இசை, பின்னணி - விஷால் சந்திரசேகர், எஸ்.தமன் படத்தின் சிறப்பு ரிது வர்மாவின் பாத்திரம் தான். இதனை இயக்குநரே பேட்டியில் கூட சொல்லிவிட்டார். இதில், பெண் பாத்திரமாக நாயகிக்குத்தான் அதிக முக்கியத்துவம் உள்ளது போல தெரியும். ஆனால் அப்படி கிடையாது. படத்தில் இரு பாத்திரங்கள் முக்கியமானவை. ஒன்று பூமி எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்தும் இளம்பெண். அடுத்து, அவளை ஆகாயம் போல சுற்றி வளைக்க முயலும் பாரிஸிலிருந்து வரும் கட்டிடக் கலைஞன் ஆகாஷ். இவர்கள் இருவரின் காதல், ஈகோ, போட்டி, பொறாமை, ஆவேசம்தான் படமே.  காட்சிகளின் படி படத்தை அடுக்கினால் தான் படம் மட்டுமல்ல கதை சொல்வதுமே புரியும். பூமி, தரணி எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறாள். முழுக்க இயற்கைக்கு அதிக சேதம் விளைவிக்காத பொருட்களை வைத்து வீடுகளை கட்டுவதுதான் நோக்கம், லட்சியம், பேராசை இன்ன பிற என்று வைத்துக்கொள்ளுங்கள்.  பூமிக்கு, திருமணம் ஆகவில்லை. வயதும் 30 ஆகிவிட்டது. இதனால் அவளை வீட்டில் அம்மா கல்யாணம் செஞ்சுக்கோ என நெருக்குகிறாள். அப்பாவைப் பொறுத்தவரை கல்யாணம், காதல் எல்லாம் அவள்தான

ஓர் ஆணை இருபெண்கள், ஓர் ஆண் காதலித்தால் - நர்த்தனசாலா படம் எப்படி?

படம்
நர்த்தனசாலா -2018 இயக்கம் ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு விஜய் சி குமார் இசை மகதி ஸ்வரா சாகர் ஒரு ஆணை இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண் விரும்பினால் என்ன நடக்கும்? அதுதான் நர்த்தனசாலா படம் சொல்லுகிறது. ஆஹா பெண்கள் மீதான கிண்டல், கேலிக்கு அவர்களே பதிலடி கொடுக்கும் காட்சி அருமை. காஷ்மீராவின் அழகு, யாமினியின் தைரியம் என இரண்டு நாயகிகளும் சிறப்பாக இருக்கிறார்கள். ஜெயபிரகாஷ் ரெட்டி, நாக சௌரியாவின் தந்தையான சிவாஜி ராஜா ஆகியோர் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். சாகரின் அற்புதமான பாடல்கள் படத்தை பொறுமையாக பார்க்கச் செய்கின்றன. ஐய்யையோ ஓரினச்சேர்க்கை பற்றி இத்தனை கிண்டல்கள் அவசியமா? அதற்கு கிளைமேக்ஸில் நாக சௌரியா  கொடுக்கும் ஒற்றை வரி சமாளித்தல் எப்படி உதவும் இயக்குநர் சார்? இரு நாயகிகளுக்கும் நடிப்பதற்கான வாய்ப்பை இயக்குநர் இறுதிவரை தரவே இல்லை. ஷோகேஸ் பொம்மை போல பயன்படுத்தி இருக்கிறார்கள். யாமினி பாஸ்கர் தைரியமாக இருக்கிறார். அதுசரி, அதற்காக அவரை புகழ்ந்த ஒரு ஆணை இன்ஸ்டன்டாக லவ் செய்து திருமணம் வரை போகும் காட்சிகள் சரியாக இல்லை. அவரை வீட்டில் சந்திக்கும்போ