இடுகைகள்

பிரைவசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டெக் நிறுவனங்களுக்கு எதிரான எதிர்மறை விஷயங்கள்! - மைக்கேல் சொலானா

படம்
  மைக்கேல் சொலானா டெக் நிறுவனங்களின் மீதான வெறுப்பு, ஊடகங்களால் உருவாக்கப்பட்டதுதான் நேர்காணல் மைக் சொலானா முதலீட்டாளர்  பேச்சாளர் டெக்லாஷ் எனும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது மக்களுக்கு மோகம் குறைந்துள்ளது. அவர்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். தொழில்நுட்பம் அடுத்த பத்து ஆண்டுகளில் அது இப்போது உள்ள அங்கீகாரத்தை இழக்கும் என்று தோன்றுகிறது. எங்கு தவறு தோன்றியது என நினைக்கிறீர்கள்? ஓராண்டுக்கு முன்னர்தான் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. ஊபர், பேஸ்புக் ஆகியவற்றுக்கு எதிரான சில புகார்களை மக்கள் எழுப்பினர். பொதுவாக அமெரிக்கர்கள் இந்த நிறுவனங்களின் சேவைகளை எப்போதும் போல பெற்றுவந்தனர். அதில் அவர்கள் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. பேஸ்புக்கை குறிவைத்து பிரைவசி விஷயத்தை எழுப்பியவுடன், தாராளவாதிகள் அதனைக் கவனிக்கத் தொடங்கினர்.  சாதாரண பொதுமனிதர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவர்கள் வாங்க நினைத்த லெதர் ஷூக்களை பேஸ்புக்கில் பார்த்து அவர்களை பெரியளவு பாதிக்கவில்லை. டெக்லாஷ் எனும் தன்மை இயல்பானதல்ல. அதனை பெரிதாக உருவாக்கினார்கள். இடது பாப்புலிசவாதிகள், வலதுசா

பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி!

  பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி ! உலகம் முழுவதும் மக்களுக்கான சுதந்திரத்தன்மையை , இணையம் வழங்கியுள்ளது . இதில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் அதன் கட்டற்ற தன்மையை தடுத்து வருகின்றன . டெக் உலகில் கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் , ஆப்பிள் , ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை . இந்த பெரு நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் இத்துறையில் போட்டியிடுவதை தடுத்து வருகி்ன்றன என்ற குற்றச்சாட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது . அமெரிக்கா , இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் ஆகிய நாடுகள் , டெக் நிறுவனங்களுக்கு எதிரான சட்டப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர் . கூகுளின் சர்ச் எஞ்சின் வழியாக தேடும் தகவல்களில் பெரும்பாலானவை , கூகுளின் நிறுவனங்களிலிருந்து வழங்கும் சேவையாகவே உள்ளது என புகார்கள் கூறப்படுகிறது . மக்கள் , பிற வலைத்தளங்களை விட கூகுளின் தளங்களை விட்டு வேறு தளங்களுக்கு செல்லாதபடி இந்த நிறுவனம் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது . இதுபற்றி , தி மார்க்அப் என்ற நிறுவனம் இணையவழியில் ஆய்வை மேற்கொண்டது . இதன்படி கிடைத்த 15 ஆயிரம் முடிவுகளை சோதித்ததில்

டெக் நிறுவனங்கள் எப்படி தனி மனிதர்களை உளவு பார்க்கின்றன தெரியுமா?

படம்
  உளவு பார்க்கும் ஆயிரம் கண்கள்! உலகம் முழுக்க செயல்படும் பன்னாட்டு டெக் நிறுவனங்கள், தகவல் சுதந்திரத்திற்கு ஆதரவாக நின்றாலும் பல்வேறு வழிகளில் அவர்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.  ஆ ப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தகவல் பாதுகாப்பு சட்டப்படி தங்களை வடிவமைத்து வருகின்றன. இதில் வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்புக்கு கொஞ்சம் உத்தரவாதமான நிறுவனம் என  மக்கள் நினைப்பது ஆப்பிளைத்தான். ஆப்பிள் இயக்குநர் டிம் குக், பாட்காஸ்ட் ஒன்றில் பேசியபோது, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தள மாடலில் விளம்பரங்கள் மூலமாக வருமானம் அதிகம் கிடைக்கிறது. எனவே அவர்களால் மக்களின் தகவல்களைப் பாதுகாக்க முடியாது என்று கூறினார். இப்படி நேரடியாகவே விமர்சிப்பதை ஜனநாயகம் என ஏற்கலாம். ஆனால், ஆப்பிள் தகவல் பாதுகாப்பு கொள்கைகளை உலகம் முழுக்க மாற்றியமைத்துள்ளது. மக்களை கண்காணிப்பதை ஆப்பிள் இன்னும் மறைமுகமாகவே செய்யத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 15இல் புகைப்படத்தில் உள்ள எழுத்துகளை நகல் எடுத்து இன்னொரு இடத்தில் பதியமுடியும். படத்திலுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள முட

இந்தியாவில் நடக்கும் குற்றங்களுக்கு அமெரிக்காவில் சென்று புகார் கொடுக்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத், ஐடி அமைச்சர்

படம்
                ரவிசங்கர் பிரசாத் , ஐடி அமைச்சர் சமூக வலைத்தளங்களை முறைப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திய உள்ளது . இதைப்பற்றி அமைச்சர் பேசினார் . மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்து சமூக வலைத்தள நிறுவனங்கள் நிற்க காரணம் என்ன ? இந்தியா ஜனநாயக நாடு . சமூக வலைத்தள நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்து வருமானம் ஈட்டத்தான் வருகின்றன . அவர்கள் குடிமக்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறார்கள் என்பது உண்மைதான் . ஆனால் சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை கடைப்பிடித்துதான் ஆகவேண்டும் . நீங்கள் கூறுகிறபடி விதிகளை அமைத்தால் அரசை விமர்சிக்கும் குரலகளை கூட எளிதாக தணிக்கை செய்யமுடியுமே ? மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விதிகள் , சமூக வலைத்தளங்களை கையாள்வதற்கானவை அல்ல . அரசு , பிரதமரை விமர்சிக்கும் விமர்சனங்களை அனுமதிக்கிறோம் . ஆனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அவதூறு செய்வது , அதனை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றை கட்டுப்படுத்த நினைக்கிறோம் . இளம்பெண்களை மார்பிங் செய்து புகைப்படங்கள

மக்களின் தகவல்களை அவர்கள் அறியாமல் திருடுவது ஜனநாயகத்தன்மை அல்ல! - டிம் பெர்னர்ஸ் லீ

படம்
            நேர்காணல் சர் டிம் பெர்னர்ஸ் லீ எம்ஐடி பேராசிரியர் . இணையத்தை கண்டுபிடித்தவர் . ஓப்பன் டேட்டா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை தொடங்கியவர் . பிரைவசி என்பதை ஏன் முக்கியமாக கருதுகிறோம் ? இணையத்தில் பிரைவசி என்பது முக்கியமானதுதான் . காரணம் , நிறுவனங்கள் உங்களை அறிந்துகொண்டு பல்வேறு பொய்களை சொல்லி குறிப்பிட்ட வலைத்தளத்தை கிளி்க் செய்யச் சொல்லுகிறார்கள் . இதன் மூலம் அந்த நிறுவனம் உங்களின் தகவல்களை வைத்து வருமானம் பார்க்கிறது . ஆனால் இந்த விஷயம் நாம் நினைப்பதை விட அபாயகரமானது . இப்படி தகவல்களை திருடுவது , விற்பது என்பது அரசியல் , வணிகம் , குற்றம் என பல்துறை சார்ந்ததுதான் . ஒருவரின் தகவல்களை திருடுவதால் அதனைப் பயன்படுத்தி அவர் தவறான விஷயங்களைச் செய்யவும் வாய்ப்புள்ளது . உங்களுடைய கண்டுபிடிப்பு தவறாக பயன்படுத்தப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்ழ மனிதர்கள் இணையத்தை மனிதநேயத்துடன் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் எனது விருப்பம் . அதில் நல்ல , கெட்ட விஷயங்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம் . 2016 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல் வெளிவந்தபோது , மக்க

தி எகனாமிஸ்ட் இதழின் புத்தக தேர்வுகள் 2020!

படம்
                      புத்தகம் புதுசு எ டாமினென்ட் கேரக்டர் சமந்த் சுப்ரமணியன் , டபிள்யு . டபிள்யு நார்டன் அட்லாண்டிக் புக்ஸ் இந்த புத்தகத்தில் இங்கிலாந்தில் அறிவியல் வளர்ந்த விதம் பற்றி ஆசிரியர் விளக்குகிறார் . அரசியலும் அறிவியலும் எப்படி ஒன்றாக கலந்து மாற்றங்களை ஏற்படுத்தின ஆசிரியர் சுவாரசியமாக விளக்கியுள்ளார் . பிரைவசி இஸ் பவர் காரிசா வெல்ஸ் தனிநபர்களின் தகவல்களை பெரு நிறுவனங்கள் திரட்டுவது ஏற்படுத்தும் ஆபத்துகள் பற்றி பேசுகிற நூல் இது . நூலை படிக்கும்போது பதற்றம் ஏற்படுவதற்கு பதிலாக இப்பிரச்னையை சூதானமாக எப்படி எதிர்கொள்வது என யோசிக்க வைக்கிறது . அப்போலோ ஏரோ நிக்கோலஸ் கிரிஸ்டாகிஸ் லிட்டில் ப்ரௌன் பெருந்தொற்று எப்படி நம் வாழ்க்கையில் சமூக , பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது என ஆய்வுப்பூர்வமாக ஆசிரியர் எழுதியுள்ளார் . புதின் பீப்புள்ஸ் கேத்தரின் பெல்டன் பாரர் ஸ்ட ்ராஸ் அண்ட் கிரோக்ஸ் ரஷ்ய அதிபரான புதின் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுளன . அவற்றுள் இந்த நூல் அவருக்கு நெருக்கமான ஆட்களைப் பற்றிப் பே

வாட்ஸ்அப்பில் ரகசியம் பறிபோகிறதா? - வாட்ஸ்அப் பயனர் ரகசியங்கள்

படம்
        வாட்ஸ்அப் பாதுகாப்பானதா? வாட்ஸ்அப்பில் ஒருவர் பிறருக்கு அனுப்பும் செய்திகள் போன் மெமரியில் இடம்பெற்றிருக்கும். எனவே, செய்திகளை ஆப்பில் அழித்துவிட்டாலும், ஹேக்கர்கள் மூலம் போனிலுள்ள செய்திகளை மீட்டு எடுக்கலாம். தொலைதூரத்தில் கூட இருந்து கூட ஆப்பை இயங்க வைக்கமுடியும். செய்திகளை மீட்டெடுக்க முடியும். போன், நிரந்தரமாக அழிக்கப்பட்டால் தகவல்களைப் பெற முடியாது. வாட்ஸ்அப்பை க்ளவுட் முறையில் ஒருவர் இணைத்து வைத்திருந்தால், அதிலுள்ள தகவல்களை காவல்துறை பெறமுடியும். இம்முறையில் கூகுள் டிரைவ், ஐக்ளவுட் ஆகியவை செயல்படுகின்றன. இந்த வசதியை ஒருவர் பயன்படுத்தினால், சிம்மை புதிய போனில் செயல்படுத்தும்போது, அவர் பதிவு செய்த அனைத்து தொடர்புகளும் அப்படியே புதிய போனில், இன்ஸ்டால் செய்யப்படும் ஆப் மூலம் வந்துவிடும். வாட்ஸ்அப் வழியே அனுப்பப்படும் செய்திகள் ஒருவருக்கு சென்று சேர்ந்தவுடன் அவை வாட்ஸ்அப் நிறுவன சர்வர்களிலிருந்து அழிக்கப்பட்டுவிடுகிறது. செய்தி ஒருவருக்கு சென்று சேராத சூழலில் என்கிரிப்ட் செய்யப்பட்டு 30 நாட்கள் சர்வரில் இருக்கும். வாட்ஸ்அப் வழியாக ஒருவர் செய்யும் அழைப்பு, செய்தி, இணைய முகவரி,

டிஜிட்டல் கருவிகள் உங்களை கண்காணிக்கின்றனவா?

படம்
மிஸ்டர் ரோனி அலெக்ஸா, சிரி, கூகுள் அசிஸ்டென்ட் இன்று அனைத்து இடங்களிலும் வந்துவிட்டது. ஸ்மார்ட்போனில் கூட ஹே கூகுள் என்று குரல் கொடுத்தால் போதும். இவை நம்மை அறியாமல் தகவல்களை பதிவு செய்யும் வாய்ப்புகள் உள்ளதா? காளத்தி நியூஸ் மார்ட்டில் ரோஸ்மில்க் கிடைக்குமா என்பது போன்ற கேள்விதான் இது. பதிவு செய்யாமல் என்ன? டிஜிட்டல் உதவியாளர்களது வேலையை உங்களைக் கவனித்து புரிந்துகொள்வதுதான். அவற்றை விழிப்படையச் செய்யும் சில வார்த்தைகளை பதிந்து வைத்திருப்பார்கள். ஹே கூகுள் என்பது போல சிரி என்றால் ஆப்பிளின் இயக்கமுறைமை தன் பணியைத் தொடங்கிவிடும். இப்படி தினசரி பலமுறை விழித்தெழுந்து உரையாடல்களை பதிவு செய்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன. நீங்கள் யாரிடமாவது உரையாடிக்கொண்டிருப்பீர்கள். அல்லது நெட்பிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அதில் வரும் சில வார்த்தைகள் டிஜிட்டல் உதவியாளர்களை விழிப்புணர்வுக்கு கொண்டு வரும். அப்படி வந்தால் அடுத்த ஆறு நொடிகளுக்கு ஒலிகளை பதிவு செய்யும். இதனை நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் செய்த ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது. விபத்தாக சில வார்த்தைகளைக் கேட்ட

புதிய எலக்ட்ரானிக் பொருள்களின் வருகை - சிஇஎஸ் 2020

படம்
அமெரிக்காவின் லாஸ்வேகாசில் தொடங்கவிருக்கும் சிஇஎஸ் விழாவில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம். புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட சாதனங்களை நிறுவனங்கள் இந்த விழாவில் அறிமுகப்படுத்தவிருக்கின்றன. அவற்றில் புதிய தொழில்நுட்பங்கள் சிலவற்றைப் பார்ப்போம். 5ஜி இந்தியாவில் 3ஜிக்கும் 2 ஜிக்கும் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறோம். டெல் நிறுவனம் தனது மடிக்கணினியில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. மீடியாடெக், க்வால்காம் ஆகிய நிறுவனங்கள் 5ஜிக்கான சாக்கெட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளன. செயற்கை நுண்ணறிவு ஸ்மார்ட்போன்கள் முதல் காலையில் முதல்வேலையாக செல்லும் டாய்லெட்டுகள் வரை செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் உள்ளது. இந்த முறையும் பல்வேறு பொருட்களை ஏஐ என்று சொல்லி அறிமுகப்படுத்த டெக் நிறுவனங்கள் தயாராக உள்ளன. எனவே, உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் பார்த்து வாங்குங்கள். மைக்ரோ எல்இடி டிவிகளில் பிளாஸ்மா, ஓஎல்இடி எல்லாம் பழசு. அதனால்தான் புதிய தொழில்நுட்பமாக மைக்ரோ எல்இடி தயாராகி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை காப்புரிமை பெற்று அறிமுகப்படுத்தும் நிறுவனங்களே 2020ஆம் ஆண்டு டிவி சந்