டெக் நிறுவனங்களுக்கு எதிரான எதிர்மறை விஷயங்கள்! - மைக்கேல் சொலானா

 



மைக்கேல் சொலானா



டெக் நிறுவனங்களின் மீதான வெறுப்பு, ஊடகங்களால் உருவாக்கப்பட்டதுதான்



நேர்காணல்

மைக் சொலானா

முதலீட்டாளர்  பேச்சாளர்

டெக்லாஷ் எனும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது மக்களுக்கு மோகம் குறைந்துள்ளது. அவர்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். தொழில்நுட்பம் அடுத்த பத்து ஆண்டுகளில் அது இப்போது உள்ள அங்கீகாரத்தை இழக்கும் என்று தோன்றுகிறது. எங்கு தவறு தோன்றியது என நினைக்கிறீர்கள்?

ஓராண்டுக்கு முன்னர்தான் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. ஊபர், பேஸ்புக் ஆகியவற்றுக்கு எதிரான சில புகார்களை மக்கள் எழுப்பினர். பொதுவாக அமெரிக்கர்கள் இந்த நிறுவனங்களின் சேவைகளை எப்போதும் போல பெற்றுவந்தனர். அதில் அவர்கள் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. பேஸ்புக்கை குறிவைத்து பிரைவசி விஷயத்தை எழுப்பியவுடன், தாராளவாதிகள் அதனைக் கவனிக்கத் தொடங்கினர். 

சாதாரண பொதுமனிதர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவர்கள் வாங்க நினைத்த லெதர் ஷூக்களை பேஸ்புக்கில் பார்த்து அவர்களை பெரியளவு பாதிக்கவில்லை. டெக்லாஷ் எனும் தன்மை இயல்பானதல்ல. அதனை பெரிதாக உருவாக்கினார்கள். இடது பாப்புலிசவாதிகள், வலதுசாரி பாப்புலிச வாதிகள் ஆகிய இருவரும்தான் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக திரண்டனர். வலதுசாரிகள் தங்கள் கருத்துகளை எடிட் செய்வதை எதிர்த்தனர். 

ஒரு மாணவன் கல்விக்கடன் பெற்று அதனை அடைக்கமுடியாமல் இருக்கிறான். அதேநேரம் வேலை செய்து வீட்டையும் வாங்க முடியவில்லை. இதற்கு பாகுபாடு கொண்ட பொருளாதாரம்தான் காரணம். தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்ல. பெர்னி சாண்டர்ஸ் போன்றவர்கள் இச்சூழலைப் பயன்படுத்தி பெரு நிறுவனங்களுக்கு எதிராக மக்களை திரட்டினர். மக்களின் கோபத்திற்கு டெக் நிறுவனங்கள் எளிமையான இலக்காகிவிட்டன. 

வலதுசாரிகளை கோபப்படுத்திய ட்விட்டரின் இயக்குநர் ஜேக் டோர்ஸியின் செயல்பாட்டில் அர்த்தம் இருந்தது. அவரும் பிறரும் செய்த கருத்துகளை எடிட் செய்த செயல்பாடு வலதுசாரி பாப்புலிசவாதிகளை கடுமையாக ஆக்ரோஷமடைய வைத்தது. இந்த சூழ்நிலை குடியரசுவாதிகள், ஜனநாயகவாதிகள் என இரு கட்சியினரையும் சிக்கலான இடத்திற்குள் தள்ளியது. டெக் நிறுவனங்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு நடவடிகை எடுத்தே ஆகவேண்டும். ஆனால் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியவில்லை. 

டெக் துறையில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு தங்கள் கதையை ஊக்கத்துடன் பிறருக்கு சொல்லத் தெரியவில்லை. மேலும் அவர்கள் மீது குற்றம் சுமத்தும்போது அதனை மறுக்கவும் தடுமாறுகிறார்கள். தங்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு தெரியவில்லை.  ஊபர், பேஸ்புக் மீது என்ன புகார் சொன்னாலும் சாதாரண மக்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஊடகங்கள் அவர்களை எந்தளவு மோசமானவர்கள் என எதிர்மறையான கோணத்தில் காட்டுகிறார்கள். 

டெக் துறையைப் பற்றி எதிர்மறை செய்திகளை ஊடகங்கள் பல்லாண்டுகளாக மோசமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஊடகங்கள் இப்படி செய்திகளை வெளியிடும்போது டெக் உலகை சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து இதை எதிர்க்க வேண்டும். மார்க் ஸூக்கர் பெர்க்கை ஊடகங்கள் தாக்கியபோது, பிற டெக் நிறுவன தலைவர்கள், இயக்குநர்கள் தாங்கள் அடுத்து தாக்கப்படக்கூடாது என பிரார்த்தனை செய்துகொண்டு அமைதியாக இருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் காக்க ஒன்றாக இருந்திருக்கவேண்டும். 

டெக் துறையில் சிலர் மோசமான செயல்களை செய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் தணிக்கை செய்யப்பட்ட சர்ச் என்ஜின் ஒன்றை அமைக்க கூகுள் முயன்றது. நாம் ஒருவரை எதிர்க்கிறோம் என்றால் கண்டிப்பாக அவர்களை விமர்சனம் செய்யவேண்டும். கூகுளின் செயல்பாட்டிற்கு உள்ளிருந்தே நிறைய விமர்சனங்கள் வந்திருக்கவேண்டும். இது மோசமான செயல்பாடு. 

பொதுவாக டெக் துறையைச் சேர்ந்த சாதாரண பணியாளர் கூட ஊடகத்தின் பக்கம் நிற்கமாட்டார். அவராகவே ஏன் போய் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டும். உங்களுக்கு செல்வாக்கும், அதிகாரமும் இருந்தால் ஏதாவது செய்யலாம். அப்படி இருப்பவர்கள், நாங்கள் மக்களுக்காக இந்த விஷயங்களை செய்கிறோம். இதன் வழியாக மதிப்பை உருவாக்குகிறோம். ஆனால் டெக் துறைக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அப்படி செயல்படவில்லை என்று தைரியமாக சொல்லலாம். அதில் அவர்களின் உழைப்பிற்கு பெருமையுமுண்டு. 

works in progress  


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்