பவளப்பாறை, பருவ மழைக்காடு பற்றி அறிவோம்!
தெரியுமா?
பவளப்பாறை
கடலின் ஆழ்கடலில் உள்ள முக்கியமான சூழல் அமைப்பு. ’கடலில் அமைந்துள்ள மழைக்காடுகள் ’என சூழலியலாளர்கள் இதனைக் கூறுகிறார்கள். பவளப்பாறைகளைப் பார்க்க பாறைகள் போல தோற்றமளிக்கும். ஆனால் அவை உண்மையில் விலங்குதான். இதன் மேல்பகுதி கால்சியம் கார்பனேட் வேதிப்பொருளால் ஆனது. இதுவே அதன் ஓடுபோல தோற்றமளிக்கிறது.
இதன் அடிப்பரப்பில் நண்டு, ஆமை, மீன் என ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறை, எளிதில் அழியக்கூடியவை. கடலில் ஏற்படும் மாசுபாடு இதனை எளிதாக பாதித்து அழிவை உருவாக்குகிறது.
பருவ மழைக்காடு
இங்கு, வெப்பமும், ஈரப்பதமும் சரிபாதி அளவில் இருப்பதால், தாவரங்களும் உயிரினங்களும் அதிகளவில் இங்கு வாழ்கின்றன. உலகில் வாழும் தாவரம் மற்றும் விலங்கு இனங்களில் பாதியளவு பருவ மழைக்காடுகளில் காணப்படுகின்றன. தாவரம், விலங்கு, பூஞ்சை, நுண்ணுயிரிகள் என பல்லுயிர்த்தன்மை கொண்ட இடம் இது. மத்திய தெற்கு அமெரிக்கா, மேற்கு மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூகினியா தீவு ஆகியவற்றில் பருவ மழைக்காடுகள் அமைந்துள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக