பதில் சொல்லுங்க ப்ரோ! - தூக்க மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன?

 





இல்லஸ்டிரேஷன் - டங்கா பாலமுருகன்


பதில் சொல்லுங்க ப்ரோ?

தூக்கமாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன?

மென்மையான வேதிப்பொருட்களைக் கொண்ட தூக்க மாத்திரைகள் அனைத்திலும் ஆன்டிஹிஸ்டாமைன் சமாச்சாரங்கள் இருக்கும். இவை, நியூரோடிரான்ஸ்மீட்டரான ஹிஸ்டாமைன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கிறது. இதனால் உங்களுக்கு உடல் களைப்பானது போல தோன்றும். இந்த மாத்திரைகள், காபா எனும் மூளையில் தூக்கத்தை வரவைக்கும் ரிசெப்டருடன் இணைந்து வேலை செய்கின்றன. 

குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது ஏன்? 

புதிதாக பிறந்த குழந்தைகள் தினசரி 20 மணி நேரம் தூங்குவார்கள். பிறகு அவர்களின் வயது ஒன்றாகும்போது தூங்கும் நேரம் 11-12 மணிநேரம் என குறையும். இப்படி வெறித்தனமாக குழந்தைகள் தூங்குகிறார்களே சிலர் ஆச்சரியப்படுவார்கள், தூக்கம் வராதவர்கள் இதனை சற்றே டோன் மாற்றிக்கூட சொல்லுவார்கள். இதற்கு முக்கியமான அறிவியல் காரணம், குழந்தைகளின் மூளை மெல்ல உருவாகி மேம்பாடு அடைவதுதான். எனவே வயது வந்தவர்களை விட குழந்தைகள் அதிக நேரம் தூங்குகிறார்கள். இந்த தூக்கத்திற்கு ஆர்இஎம் தூக்கம் என்று பெயர். இதோடு உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களும் பொங்கிப் பெருகிப் பாய வேண்டாமா? அதற்காகவும்தான் குழந்தைகள் தூங்குகிறார்கள். 


ஹவ் இட் வொர்க்ஸ் - அமேசிங் பயாலஜி 









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்