பசித்த வயிற்றின் மீது எதற்கு கோபம்? - உணவு அரசியலால் தவிக்கும் குழந்தைகள்
உணவை மக்களுக்கு விநியோகிப்பவர்கள் அதன் மீதான ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். எந்த உணவை மக்கள் சாப்பிடவேண்டுமென அறிவியல் பூர்வமான ஆய்வுகளை புறக்கணித்து தங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை புகுத்த தொடங்கிவிடுகின்றனர். இலவசமாக கொடுக்கும் உணவுகள் பெரும்பாலும் சைவமாகவே இருப்பது தற்செயலானது அல்ல.
கடந்த ஆண்டு, கர்நாடகத்தில் எம்என்எம் மகளிர் பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டை திடீரென நீக்கப்பட்டது. இதற்கு உள்ளூரைச்சேர்ந்த அரசியல்வாதிகளே காரணம் என மாணவிகள் அறிந்தனர். கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்னை நீங்காமல் இருக்கிறது. இந்த நிலையில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டையை நீக்கினால் எப்படி? இதை அங்குள்ள மாணவி அஞ்சலி தீவிரமாக எதிரொலித்தார்.
தற்போது மத்திய அரசின் மதிய உணவுத்திட்டத்திற்கு பிஎம் போஷான் என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை பெருமைப்படுத்தும் விதமாக இதுவரை உணவில் இருந்த முட்டையை நீக்கிவிட்டனர். இப்போது மதிய உணவில் சமைத்த காய்கறிகள் சேர்த்த உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.
நாங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். அரசு அல்ல. அரசு மதிய உணவில் முட்டையை நீக்கும் முடிவை எடுத்தால் நாங்கள் போராடுவோம் என அஞ்சலி மாணவிகள் சார்பாக பேசினார்.
மாநில அரசுகள் மதிய உணவு திட்டத்தை முன்னரே தொடங்கினாலும், மத்திய அரசு தொண்ணூறுகளில்தான் இதனை கையில் எடுத்தது. தேசிய ஜனநாயக அரசு இன்னும் ஊட்டச்சத்து சார்ந்த விஷயத்தில் அந்தளவு தீவிரமான கவனத்தை இன்னுமே செலுத்தவில்லை என்றுதான் கூறவேண்டும்.
வறுமை, வேலைவாய்ப்பின்மை, காலநிலை மாற்றம், நகர்ப்புற, கிராம ப்புற பிரிவினை என பல்வேறு விஷயங்களை சொன்னாலும் உண்மையில் குழந்தைகள் பலருக்கும் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்னை இன்னுமே உள்ளது.
பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட வங்கப் பஞ்சத்தால் 3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய மக்கள் பசியால் இறந்துபோனார்கள். பிறகு சுதந்திரம் கிடைத்தும் கூட இந்தியா அமெரிக்க அரசின் உணவு மானிய உதவிகளால் தான் பிழைத்திருந்தது. 2021ஆம் ஆண்டு வெளியான குடும்பநல ஆய்வு, இந்தியாவில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் 36 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதை கூறியது. உயரத்திற்கு ஏற்ற எடையின்றி இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 21 சதவீதமாக இருந்து 19ஆக குறைந்திருக்கிறது. தேசிய அளவில் குறைந்த எடையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 32 சதவீதமாக உள்ளது.
இந்தியாவின் நிலை பற்றிய பல்வேறு அறிக்கைகளை வெளியிடும் நிதி ஆயோக்கின் கேப்ஷன் என்ன தெரியுமா? ஈட் ரைட் இந்தியா, சஹி போஜன் பேதார் ஜீவன் , ஃபிட்னஸ் கி டோஸ், அதா கண்டே ரோஸ்.
2
தேசிய குடும்பநல ஆய்வுகளில் வெளியான தகவல்களில் முன்பை விட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகை பாதிப்ப அதிகரித்துள்ளது. இதனால் இளம் பெண்கள் கர்ப்பிணிகளாக இருக்கும்போது இரும்புச்சத்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்ளும் கட்டாயம் உருவாகியுள்ளது. இந்தவகையில் 180 நாட்களுக்கு மாத்திரைகளை சாப்பிடவேண்டும்.
பசி பட்டினி தொகுப்பு பட்டியலில் இந்தியா 101 ஆவது இடம் பிடித்துள்ளது கவலைக்குரியது. மொத்த நாடுகள் 116 என்பதையும் கருத்தில்கொண்டால் இந்தியாவின் நிலை எங்குள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம். ஊட்டச்சத்துக் குறைவு என்பதில் நுண்ணூட்டச்சத்தும் உள்ளது என்பது பாதியளவு உண்மை. உலகளவில் இந்தியாவின் ஊட்டச்சத்துக்குறைபாடு சதவீதம் அதிகமாக உள்ளது. பட்டினி சார்ந்த பிரச்னை தொடர்கதையாக உள்ளதை அரசு புரிந்துகொள்ளவேண்டும். 50, 60களில் அரசு கலோரி, புரதம் பற்றி கவலைப்பட்டது. இப்போது நுண்ணூட்டச்சத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனாலும் ஊட்டச்சத்துக்குறைவு என்பது இன்றும் பிரச்னையாகவே உள்ளது என்றார் ராஜேஸ்ராவ். இவர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பள்ளியில் பணியாற்றுகிறார்.
உலக ஊட்டச்சத்து அறிக்கைப்படி இந்தியா இதுவரை திட்டமிட்ட 13 இலக்குகளில் ஏழு இலக்குகளை நிறைவு செய்துள்ளது. ஆனாலும் ஆசிய அளவில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஐந்து வயதுக்குள் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 17 சதவீதமாக உள்ளது. நம் சமூகத்தில் உணவு கிடைக்கிறது. ஆனால் அதை வாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை. அதுதான் பிரச்னை. மேலும் சில மாநில அரசுகள் மக்கள் சாப்பிடும் பொருட்களுக்கு தடை விதிக்கின்றன. மேலும் உயரும் விலைவாசிக்கு ஏற்ப சம்பளம் உயர்த்தப்படுவதில்லை. பொது விநியோக முறையில் பருப்பு, எண்ணெய் வித்துகள், பால், முட்டை ஆகியவற்றையும் வழங்கலாம். ஆனால் இதுபோன்ற திட்டங்கள் அரசின் திட்டத்தில் இல்லை.
குறைந்த வருமானமுள்ள மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சியை அரசு தடைசெய்வது ஊட்டச்சத்துகள் கிடைப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. அரசு மரபாக மக்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதை சாப்பிட அனுமதிக்கவேண்டும். இது அவர்களது உணவுமுறைக்கு ஏற்ப சத்துகளை உடலுக்குப் பெற்றுத்தரும்.
உணவுக்கான உரிமை என்பது 1948ஆம் ஆண்டில் உலக நாடுகளிலு அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் அமலுக்கு வர 2013ஆம் ஆண்டு வரை ஆகிவிட்டது. இதையும் குடியுரிமை மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கு காரணமாகவே உணவு உரிமை சட்டம் அமலானது.
3
மேற்சொன்ன உணவு உரிமை சட்டம் மூலம் 75 சதவீத கிராம மக்களுக்கும், 50 சதவீத நகர மக்களுக்கும் உணவு தானியங்களை வழங்குவது சாத்தியமானது. பிஎம் மாத்ரி வந்தனா யோஜனா திட்டத்தில் முதல் குழந்தைக்கு மட்டும் பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது. இதனை மாற்றி அனைத்து குழந்தைகளுக்கும் பயன்கள் கிடைக்குமாறு செய்ய வேண்டுமென உணவு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தகவல்
அவுட்லுக் 2,2022
அசுதோஷ் சர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக