வயதாகும் போது உடலுக்குள் என்ன நடக்கிறது?



Illustration -tanga balamurugan





 வயதாகும்போது என்ன ஆகிறது?

பொதுவாக சிறுமிகள், ஆன்டி, அங்கிள் எனும்போதுதான் பேசிக்ஸ் ஷர்ட்டை ஆபரில் வாங்கி போட்டிருந்தாலும் கூட உள்ளுக்குள் சுர்ரென வலிக்கும். ஆகா, வயசாச்சே என கண்ணாடியைப் பார்த்தால், வடிவேலு கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து குரங்கு பொம்மை என சொல்லுவது போல இருக்கும். 

அந்தளவு குடும்ப சுமை, அலுவலகம் என அனைத்தையும் செய்துவிட்டு வந்தால் வயசாச்சு ப்ரோ, பூமர் அங்கிள் என உலகமே சொல்லிவிட்டு எளிதாக கடந்துபோய்க்கொண்டிருக்கும். டிப்பம் டிப்பம் டிப்பர டிப்பர என ஃபோக் மார்லியின் பாடலைக் கேட்டாலும் கூட உடலுக்குள் வயதாவதால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டுதான் ஆக வேண்டும். 

பொதுவாக ஒருவருக்கு வயதாகிறது என்றால் கண்ணில் தெரிவது தோல் சுருக்கமும், நரைமுடியும், உடலில் தளர்ச்சியும் வெளிப்படையாக தெரிவதுதான். இதெல்லாம் தாண்டி உள்ளுக்குள் என்ன நடக்கிறது? உறுப்புகளின் செயல்திறன் குறைந்துகொண்டே வரும். ஆத்தோ, சவர்மா சாப்பிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தால் ஐபிஎஸ் அல்லது ஃபேட்டி லிவர் என மருத்துவர பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்து மருந்து வாங்கிச் சாப்பிடுங்க என்று சொல்லுவார். உடல் உறுப்புகள் மெல்ல செயல்திறனை இழப்பதோடு, எலும்புகளின் செறிவும் மெல்ல குறைந்துகொண்டே வரும்.  

வயதாகிக்கொண்டிருக்க நேரத்தில்தான் நமது கண்ணில் நாம் ஏறாத பஸ்சாக கண்மணி, கதீஜா என பல பெண்கள் தெரிவார்கள். இண்டிகா டை ஸ்பென்சர்ஸ் கோ வில் ஆஃபரில் கிடைக்குமா கல்லா கேஷியரை நச்சிக்கொண்டிருப்போம். மென்ஸ் ஹார்லிக்ஸ்சில் என்ன கலந்திருப்பார்கள் என ஆய்வு செய்துகொண்டிருப்போம். ஸ்பேர் மார்க்கெட்டில் செட்வெட் வேக்ஸ் ஜெல்லையும்,  பிரிட்டன் தயாரிப்பில் வர்ஜின் தேங்காய் எண்ணெய்யையும் ஒரு சேர வாங்கி குவிப்போம். எதற்காக எல்லாம் நாட்டைக் காப்பாற்றத்தான். கையை உதறிவிட்டு ஓடும் குழந்தையாக மாறிவிட்ட இளமையை விடாமல் பிடிக்கும் முயற்சிதான். 

இதற்கெனவே நிறைய தோல் சுருக்கத்தைப் போக்கும் களிம்புகள், சீரங்கள் கிடைக்கின்றன. பெருகிப்போன வயிற்றின் அகலத்தை அட்ஜஸ்ட் செய்ய ஷர்ட் பேண்ட்களும் கிடைக்கின்றன. ஏ 1 சிப்ஸைப் பார்த்ததும் சட்டை  பட்டன் தெறித்தால் சத்தியமாக நமக்கு வயதாகிவிட்டது என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதை ஏற்றுக்கொண்டு உணவுமுறை அட்ஜஸ்ட் செய்துகொண்டால், பூமர் அங்கிள் என யார் வம்புக்கிழுத்தாலும் குட் வைப்ரேஷன் என ஆண்டனி தாசன் போல பாடிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். 





\


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்