இணையத்தில் வழியே பெருக்கெடுக்கும் காதலும், நெருக்கமும் - மெட்டாவர்ஸ் நாகரிகம்










1

இன்று இணையம் நமது உடலின் இன்றியமையாத பாகம் போல ஆகிவிட்டது. இணையம் இல்லாத ஸ்மார்ட்போன், கணினி என்பது உயிரில்லாத உடல்போல. இணையம் அனைத்தையும் தந்தாலும் உறவைத் தருமா, ஒருவர் தொடுவது போன்ற சுகத்தை தருமா என்றால் கொஞ்சம்  போலியாக இருந்தாலும் அதையும் தரும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. அவற்றைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம். 

தட் சாஸி திங் என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ளது. இதன் நிறுவனர், சாச்சி மல்ஹோத்ரா. இது டிஜிட்டல் வடிவிலான செக்ஸ் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிராண்ட். இதனை தொடங்கியவர், தனது காதலருடனான காதலை பகிர்ந்துகொள்வதும் இணையம் வழியாகத்தான். சில சமயங்களில் நாம் மனதிலுள்ள  ஆசைகளை பகிர்ந்துகொள்வது கடினமானது. அதற்கு செக்ஸ்டிங் வழிமுறை உதவுகிறது. நாம் தினசரி எதிர்கொள்ளும் சவால்களையும், சங்கடங்களையும் டிஜிட்டல் வழியாக நாம் விரும்புபவருடன் பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருக்கிறது என்றார் சாச்சி. 



தனாயா நரேந்திரா, செக்ஸ் கல்வியாளர்


பேஸ்புக், ட்விட்டர், இன்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் என அனைத்துமே மக்களுடன் தொடர்புகொள்ளும் சாதனங்கள்தான். முன்பை விட டிஜிட்டல் வழியாக பிறருடன் தொடர்புகொள்ளும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது. நேரடியாக சந்திப்பதை விட எழுத்து, வீடியோ வழியாக பேசுவது என்பது பெண்களுக்கு எளிதாக இருக்கிறது. அதற்கான உளவியல் காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். 

பேஸ்புக் கூறிய மெட்டாவர்ஸ் உலகத்தில் தினேஷ் சிவக்குமார், பத்மாவதி கல்யாணம் நடைபெற்ற செய்தியை வீடியோ, அச்சு என இரண்டிலும் அறிந்திருப்பீர்கள். அதுதான் இப்போதைய டிரெண்ட். விர்ச்சுவலாக உங்களைப் போலவே இன்னொரு உருவத்தை தயார் செய்து மெட்டாவர்ஸ் உலகத்தில் உலவ விடுவது. இதை படிக்கும்போது ரெடி பிளேயர் ஒன் படம் பார்ப்பது போல இருக்கிறதா, உண்மை இப்படித்தான் உள்ளது. உலகம் இதை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறது. 


2

பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணம்தான் பெஸ்ட் என சில குழுக்களும்,, லவ் ஜிகாதி என அரசியல்வாதிகள் தேர்தலில் வெல்ல திட்டம் போட்டுக்கொண்டிருக்க இணையம் முழுமையான சுதந்திரத்தோடு உள்ளது. 

அங்கு ஏராளமான டேட்டிங் ஆப்புகள் உள்ளன. அதில் சென்று புழங்கினால், நட்பு வேண்டுமா, சும்மா பேசிக்கொண்டிருக்கவா, உறுதியான உறவுக்காகவா என ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. அதை தேர்ந்தெடுத்து உங்கள் விருப்பம் போல உறவுகளோடு பவண்டோவோடு மிராண்டாவாக கலந்து ஜமாய்க்கலாம். சந்தை நிலவரப்படி இந்த டேட்டிங் ஆப்கள் சென்று சேர்ந்திருப்பது 2.2 சதவீதம் பேரிடம்தான். 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.6 சதவீதமாக அதிகரிக்குமாம். இதிலேயே நிறைய பிரிவுகள் வந்துவிடும் என்பதால் உறவுகளை லைட் தீஸ்கோ என எடுத்துக்கொண்டு செக்ஸ் என்றால் அதை நோக்கியும், அதற்கான பார்ட்டி, போன் செக்ஸ் என ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. இளைஞர்கள் மதவாத கும்பல்களை ஒதுக்கிவிட்டு அதை நோக்கி செல்வார்கள். 


டெபாரதி தாஸ், பாயிண்ட் ஆப் வியூ




ஆன்லைனில் இப்படி உறவாக இணைபவர்கள் பலரும் அதில் எழுத்து மூலம் பேசவே அதிகம் விரும்புகிறார்களாம். வாட்ஸ் அப் இதில் முக்கியமான சாதனம். 

”பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளில் தனியாக இருந்தவர்கள் செக்ஸ் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்கள். அவர்களுக்கு இணையம் பெரும் ஆறுதலாக இருந்திருக்கிறது. அதில் தனக்கு பிடித்தவருடன் பேசலாம், கொஞ்சலாம் கெஞ்சலாம் அல்லவா” என கருத்துகளை பேசுகிறார் தனாயா நரேந்திரா. இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமான செக்ஸ் கல்வியாளர். 

நாட் ஸோ அரேஞ்சுடு என்ற வலைத்தளம் உள்ளது. இதில், உங்களுக்கு தேவையான இணையர் இவர்தான் என அடையாளம் காட்டினால், அவர்களே அப்படிப்பட்டவர்களே தேடி பொறுக்கி எடுத்து நேர்காணல் செய்ய உதவுகிறார்கள். இந்தவகையில் உங்களுக்கு தேவையான பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தியவர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் நிறுவனர் தனிஷா குரா கனானி. ஆன்லைனை விட நேரடியாக சந்தித்துப் பேசுவது மனித உறவுகளுக்கு முக்கியம் என நம்புகிற ஆட்கள். ஆன்லைன் பாதி, ஆஃப்லைன் மீதி என செயல்பட்டு கம்பெனியை வளர்க்கிறார் தனிஷா. 


3

இணையம் இன்னொரு வாசலையும் திறந்துள்ளது. அதுதான் குயிர் எனும் பால் புதுமையினர், மாற்றுத்திறனாளிகளுக்கான செக்ஸ் சார்ந்த உறவுகள். இதற்கு என பாயிண்ட் ஆப் வியூ எனும் வலைத்தளம் செயல்படுகிறது. இப்படி இணையத்தில் செக்ஸ் சார்ந்து உரையாடுவது, அது தொடர்பான ஆலோசனைகளைக் கேட்பது இவர்களுக்கு மிக எளிதாக பாதுகாப்பானதாக இருக்கிறது. அதேசமயம் ஆன்லைனில் ஒருவரின் எழுத்து, வீடியோக்களின் வழிதான் அவரை பார்க்கிறோம் என்பதால், எளிதாக ஏமாந்துவிட வாய்ப்புள்ளது. ட்ரோல் செய்வது, அவமானப்படுத்துவது, புகைப்படங்களை மார்பிங் செய்வது ஆகிய சமாச்சாரங்களும் இணைய உறவுகளின் மறுபக்கம் என்பதை மறந்துவிடக்கூடாது. 

வேலை சார்ந்த லிங்க்ட் இன் வலைத்தளத்தில் கூட பெண்ணைப் பார்த்ததும் அவரைப் பாலோ செய்து உடனே மெசேஜ் பக்கத்தில் தொடர்பு எண் கேட்கும் அநாகரீகம் நடைபெறுகிறது. இத்தனைக்கும் அது பேஸ்புக், வாட்ஸ் அப் போல அல்ல. அது வேலை தொடர்பான சமாச்சாரங்களை பேசும் வெளியிடும் இடம். இதற்கு முக்கியமான காரணம், ஆபாச படங்களின் அதிகரிக்கும் போக்குதான். எளிதாக விபிஎன் போடாமலேயே ஆபாச படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. பலரும் பாலியல் வடிகாலாக அதனை  பயன்படுத்துகிறார்கள். ஆனால் தொடர்ச்சியான இந்த பழக்கம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம்தான் பெண்களை நுகர்வுப்பொருளாக பார்க்க வைக்கிறது. உடனே தொடர்புஎண்ணை கேட்க வைக்கிறது. 

மேற்குறிப்பிட்ட பெண்கள் அனைவருமே இணையத்தில் ஒருவருடன் உரையாடும்போது உங்களுக்கு அது கம்ஃபோர்ட்டாக இருந்தால், உணர்ந்தால் மட்டுமே பேசுங்கள் என அறிவுறுத்துகிறார்கள். இல்லாதபோது சிக்கல் ஏற்பட்டு சைபர் போலீசுக்கு தகவல் கொடுக்கவேண்டியிருக்கும். 














 





இந்து ஆங்கிலம்

கீத்திகா சச்தேவ்


https://thatsassything.com/



https://criphumanimal.org/2020/08/04/interview-debarati-das-brownfeministvegan/

கருத்துகள்