இடுகைகள்

நம்பிக்கை மனிதர்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் பெண்களின் குழு - கூல் கன்யா

படம்
நம்பிக்கை மனிதர்கள் வனிஸ்கா கோயங்கா (vaniska goenka) “ எனக்கு திடீரென ஒரு உண்மை தெரிந்தது . பல்வேறு அலுவலகங்களிலும் கூட பெண்களின் சதவீதம் குறைவுதான் . எனவே அவர்களுக்கு உதவ முடிவெடுத்தேன் . அதற்காகவே அவர்களுக்கான பணி ஆலோசனைகளை வழங்க கூல் கன்யா (Kool Kanya) என்ற அமைப்பைத் தொடங்கினேன் .” என்று உற்சாகமாக பேசுகிறார் வனிஸ்கா . ஒருமுறை வனிஸ்காவின் வீட்டில் குடும்ப வியாபாரத்தை அவருடைய தந்தைக்கு பிறகு யார் பார்த்துக்கொள்வது என்று பேசிக்கொண்டிருந்தனர் . அவருடைய தந்தைக்கு இரு மகள்தான் இருந்தனர் . அதுதான் , நான் இருக்கிறேனே என்று வனிஸ்கா நினைத்தார் . ஆனால் அவரை பொருட்டாகவே குடும்பத்தினர் கருதவில்லை . பின்னாளில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனத்தை வனிஸ்கா நிர்வாகம் செய்தார் . அப்போது தன்னைச் சுற்றிலும் பார்த்தபோதுதான் குடும்பத்தினர் அப்படி கவலைப்பட்டு பேசியதன் காரணம் புரிந்தது . அவர் அலுவலகத்தில் அவர் மட்டும்தான் ஒரே பெண் . அனைவரும் ஆண்களாகவே இருந்தனர் . 2019 இல் கூல் கன்யா என்ற நிறுவனம் தொடங்கியபோது , அந்த நிறுவனம் பெண்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகளை

சீனாவின் மாசுபாட்டை உலகிற்கு கூறும் போராளி!

சூழலுக்கு சகோதரன் ! சீனாவின் பெய்ஜிங்கைச் சேர்ந்த பிரதர்நட் , அரசுக்கு சங்கடங்களை அள்ளித்தரும் போராளி . நிகழ்த்துகலை கலைஞரான இவர் , சூப்பர் மார்க்கெட்டில் ஷெல்ஃப் முழுக்க நோங்ஃபு ஸ்பிரிங் என்ற குடிநீர் பிராண்டின் பாட்டில்களை அடுக்கி வைத்து பிரபலமானார் . எப்படி ? பிராண்ட் என்பது பாட்டில்தான் . ஆனால் உள்ளே நிரப்பிய குடிநீர் ஷாங்ஸி என்ற பகுதியிலுள்ள ஷியாவோஹாட்டு எனுமிடத்திலிருந்து எடுத்த பல்வேறு கனிமங்கள் நிறைந்த மாசுபட்ட குடிக்க தகுதியற்ற தன்மை கொண்டது . புற்றுநோய் மற்றும் தோல்நோய்களால் அவதிப்பட்ட மக்களின் புகார்களை அரசு ஒதுக்கித்தள்ள , பிரதர்நட் பெய்ஜிங்கில் நடத்திய 798 கலைக்கண்காட்சியில் குடிநீர் பாட்டில் அணிவரிசை சீன அரசுக்கு தேள் கொட்டியதுபோல் இருந்தது . உடனே போலீஸ் அக்கண்காட்சியை மூடி பாட்டில்களை கைப்பற்றியது . உடனே வண்டியில் ஆயிரம் கலப்பட குடிநீர்பாட்டில்களை அள்ளிப்போட்டுக்கொண்டு நகர் முழுக்க சுற்றிவந்து சூழல் பிரசாரம் செய்துவருகிறார் பிரதர்நட் . 2015 ஆம் ஆண்டு காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்தபோது அதனை உலகிற்கு கூற மாசுபட்ட தூசுக்கள் மூலம் கற்களை உருவாக்கி விழிப்புணர்

கா்நாடகத்தில் குளங்களை வெட்டிய இடையர்!

குளங்களை வெட்டிய கிராமத்து மனிதர் ! கர்நாடகாவைச் சேர்ந்த இடையரான காமெகௌடா , மாண்டியா மாவட்டத்திலுள்ள தாசனதோடி கிராமத்தை பசுமையாக்க 14 குளங்களை வெட்டியுள்ளார் . அரசின் உதவியின்றி தன் சொந்த சேமிப்பான 15 லட்சத்தை செலவழித்து குளங்களை கட்டி நீர்வளம் பெருக்கியுள்ளார் காமெகௌடா . நாற்பதாண்டுகளுக்கு முன்பு குண்டினபேட்டா மலைப்பகுதி மழைபொய்க்க பசுமை இழந்து புற்கள் வெயிலில் பொசுங்கிப்போக இடையரான காமெகௌடா வாழ்வாதாரம் குலைந்து தவித்துப்போனார் . மலையை நம்பி வாழ்ந்த விலங்குகளும் பறவைகளும் உணவின்றி தவிக்க காமெகௌடா அரசுக்கு மனுபோடாமல் கையிருப்பை கரைத்து குளம் வெட்டத்தொடங்கினார் . பதினான்கு குளங்களில் நீர்தேக்கத்தினால் மலையே பசுமை சூழ்ந்து அழகாகியுள்ளதோடு , நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது . " கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் வெளியில் செல்லவேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் . கண்களை மூடியிருந்தாலும் இப்பகுதியை தெள்ளத்தெளிவாக என்னால் அடையாளம் காணமுடியும் . தினசரி இக்குளங்களை காண்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது ." என்கிறார் காமெகௌடா . 

சூப்பர் டீச்சர்!

படம்
மாற்றத்திற்கான ஆசிரியர் ! கானாவை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ரிச்சர்ட் அப்பையா அகோடோ குழந்தைகளுக்கு எம்எஸ் வேர்ட் விண்டோவை கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்தி புகழ்பெற்றுள்ளார் . இவரின் பாடம் நடத்தும் புகைப்படம் இணையத்தில் வைரலாக , மைக்ரோசாஃப்ட் அகோடோவிற்கு இலவச பயிற்சியளிக்க முன்வந்துள்ளது . தற்போது அகோடோ சிங்கப்பூரில் நடைபெறும் மைக்ரோசாஃப்ட்டின் எஜூகேட்டர்ஸ் எக்ஸ்சேஞ்ச் நிகழ்வில் பங்கேற்றுள்ளார் . தற்போது அக்ரா பகுதியைச் சேர்ந்த NIIT கானா நிறுவனம் அகோடோவிற்கு நூல்களும் லேப்டாப்பும் அவரின் பள்ளிக்கு ஐந்து கணினிகளையும் வழங்க முன்வந்துள்ளது . விரைவில் மைக்ரோசாஃப்ட்டின் பயிற்சி பெற்ற ஆசிரியராக மாணவர்களுக்கு கல்வியமுது புகட்டவிருக்கிறார் அகாடோ .  -கோமாளிமேடை டீம்