இடுகைகள்

அமேஸான் வளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமேஸிங் அமேஸான்!- அனைத்து தொழில்களிலும் அசத்துவது எப்படி?

படம்
ஆட்டிப்படைக்கும் அமேஸான் ! ஒரே கம்ப்யூட்டர் போதும் . பஜாரில் அலைந்து திரியாமல் சல்லீசு காசில் பர்சேஸை வீட்டில் உட்கார்ந்தபடியே முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் . சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ரெய்ன்டிசைன் எனும் கம்பெனியின் புகழ்பெற்ற தயாரிப்பு லேப்டாப் ஸ்டேண்ட் (19 டாலர் ). இன்று அந்த டிசைன் அமேஸானில் ரெய்ன் டிசைனைவிட பாதி விலையில் கிடைக்கிறது .  " மிகச்சிறந்த பொருட்களை காப்பி அடிப்பது அமேஸானின் வழக்கம் " என்கிறார் முன்னாள் அமேஸான் பணியாளரான ரேச்சர் க்ரீர் . இன்று அமேஸானின் மதிப்பு 740 பில்லியன் டாலர்கள் . கூகுள் , ஃபேஸ்புக் குறிப்பிட்ட டெக் முயற்சிகளோடு நின்றுவிட அமேஸான் காய்கறிகள் , டிவி , ரோபோக்கள் , மேக கணியம் , எலக்ட்ரானிக்ஸ் , திரைப்படங்கள் , தொலைக்காட்சி , உணவு டெலிவரி , இணைய இசை என வணிகம் நீள்கிறது . இன்று அமேஸான் ரியல் எஸ்டேட் தவிர அனைத்திலும் சுறா போல உள்நுழைந்து ஆக்ரோஷமாக போட்டியிட்டு சக நிறுவனங்களுக்கு பீதியூட்டிவருகிறது . " இணையத்தில் நீங்கள் கிளிக் செய்ய யோசிக்கும் இடத்தை அமேஸான் கணித்து தன் தொழிலை மேம்படுத்துகிறத