இடுகைகள்

சுப்புராஜ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆக்சிஜன் தொழிற்சாலை- அரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை வளர்க்கும் மருத்துவர்

படம்
  விருதுநகரில் சுந்தரபாண்டியம் கிராமம் உள்ளது. இங்கு மருத்துவர் சுப்புராஜ், ஐம்பதிற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். இதன் மூலம் கார்பனை எளிதாக ஈர்க்க முடியும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் சுப்புராஜ். இவர் புராஜெக்ட் ஆக்சிஜன் ஃபேக்டரி என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். பொதுமுடக்க காலத்தில் இந்த பணியைத் தொடங்கியிருக்கிறார்.இதனால் அவருக்கு நிதானமாக யோசிக்கவும் நேரம் கிடைத்திருக்கிறது. இந்த ஐடியாவை தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் நிதியுதவி செய்ய தயாராகிவிட்டனர்.  சிறுவயதிலிருந்து விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர் சுப்புராஜ். இந்தியாவின் சுதந்திர தினம் 1997ஆம் ஆண்டு கொண்டாடியபோது, நாங்கள் பள்ளியில் நூறு தேக்கு மரங்களை ஊன்றி வைக்க நினைத்தோம். அப்படி தொடங்கிய முயற்சிதான்  இப்போது ஆக்சிஜன் ஃபேக்டரி செயல்பாடாக மாறியுள்ளது.  நாற்பது ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் கிடைந்த அரை ஏக்கர் நிலத்தை மரக்கன்றுகளை நட்டு வைக்க தேர்ந்தெடுத்திருக்கிறார் சுப்பு. முழுக்க கருவேலம் மரங்கள் சூழ்ந்து கிடந்த நி