இடுகைகள்

மறு காலனியாதிக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகை ஆள நினைக்கும் சீனா!

சீனாவுக்கு அமெரிக்காவும் நடந்த வல்லரசு சண்டை எப்படி வரிப்பிரச்னையில் முடிந்தது என்பதை பார்த்து வருகிறோம். அமெரிக்கா இன்றே தனக்கு எதிர்காலத்தில் போட்டியாக வரவிருக்கும் நாடுகளை வரித்தடைக்கு உள்ளே கொண்டு வந்து பொருளாதாரத்தை சிதைக்கத் தொடங்கியுள்ளது. சீனா தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைக்கிறது. பல நாடுகளை கடன் கொடுத்து மெல்ல தன் கையகப்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கூட பாருங்கள். எத்தனை இந்திய நிறுவனங்கள் இவற்றை வென்று வந்துள்ளன. மேற்கு வர்ஜீனியாவில் சீனா ஆற்றல்துறை சார்ந்த முதலீடுகளை செய்ய முன்வந்துள்ளது. இதன் மதிப்பு  84 பில்லியன் டாலர்கள். 2017 ஆம் ஆண்டு வர்ஜீனியாவின் மொத்த உற்பத்தி மதிப்பே 75 பில்லியன் டாலர்கள்தான் என்றால் இதன் பிரமாண்டம் உங்களுக்குப் புரியும். அமெரிக்கா தடை விதித்திருப்பது தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றைத்தான். ஆனால் சீன அரசின் ஆசிர்வாதத்தோடு ஏராளமான சீன நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் தொழில் செய்துகொண்டிருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த 49 நிறுவனங்கள் ஃபார்ச்சூன் லிஸ்டில் இடம்பிடித்தன. 2010 ஆம் ஆண்டு 120 நிறுவனங்கள் அதிக வர