இடுகைகள்

வௌவால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வௌவால்களை ஆராய்வது எளிதல்ல - குளோரியானா சாவேரி

படம்
  உயிரியலாளர் குளோரியானா சாவேரி, கோஸ்டாரிகா பல்கலைக்கழகம். மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு, கோஸ்டாரிகா. இங்குள்ள கோஸ்டாரிகா பல்கலையில்  உயிரியலாளராகப் பணியாற்றி வருபவர், குளோரியானா சாவேரி (Gloriana Chaverri). இவர் ஒற்றை இழை வலை (fine-corded monofilament net) மூலம் 20 இனத்தைச் சேர்ந்த 125 வௌவால்களை எளிதாகப் பிடித்து ஆராய்ந்துள்ளார்.  வௌவால்களை எப்படி பிடிக்கிறீர்கள்? கோஸ்டாரிகா பகுதியில் உள்ள காட்டில், வௌவால்களை இரவு நேரத்தில் தான் பிடித்தோம். இரவு 6முதல் 8 மணிக்குள் நிலத்திற்கு அருகில் வலைகளைக் கட்டி வைக்கிறோம். இரவு நேரத்தில் உணவு தேடுவதில் வௌவால்கள் வேகம் காட்டும். சூரியன் மறைந்தபிறகு, வலையை விரித்து நள்ளிரவு வரை காத்திருப்போம். எங்களது வலையில் மாட்டிக்கொண்ட வௌவால்கள் அதிலிருந்து விடுபட, இழைகளைத் தீவிரமாக கடிக்கும். அவை,எளிதில் துண்டிக்க முடியாதவை. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை வலையைச் சோதிப்போம்.  வௌவால்களைப் பிடிக்க பல்வேறு வலைகளை சோதித்திருப்பீர்கள். என்ன வேறுபாடுகளைப் பார்க்கிறீர்கள்?  கோஸ்டாரிகாவில் 2013ஆம் ஆண்டுதான் ஒற்றை இழை வலையை நான் பார்த்தேன். அதில் வௌவாலைப் பிடிக்க முடிந்தது.

அடுத்த பெருந்தொற்று எதன் மூலம் பரவ வாய்ப்புள்ளது? - ஆராய்ச்சி சொல்லும் உண்மை

படம்
                அடுத்த பெருந்தொற்றின் ஊடகம் ! அடுத்த பெருந்தொற்று எந்த பறவை அல்லது விலங்குகளிடமிருந்து பரவ வாய்ப்பிருக்கிறது என தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர் . . கோவிட் -19 பெருந்தொற்று பரவிய வேகத்தில் மக்களை பலிகொண்டதோடு உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது . வைரஸ் , பாக்டீரியாக்கள் இல்லாத இடமே கிடையாது . ஒரு குண்டூசி முனையில் நூறு கோடி நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நோயியல் வல்லுநர்கள் . அடுத்த பெருந்தொற்று எந்த உயிரினம் மூலம் பரவும் என்பதைக் கண்காணிக்கும் பணியை ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர் . இதன்மூலம் 2019/20 இல் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னமே கண்டறிந்து தடுக்க முடியும் . காடுகள் , மனிதர்களின் உடல்நலம் , சூழல் ஆகிய மூன்றுமே பின்னிப்பிணைந்தவை .. மக்கள்தொகை பெருக்கம் அதிகரிக்கும்போது காடுகளில் வாழும் விலங்குகளோடு மனிதர்கள் தொடர்புகொள்ள நேருகிறது . இதன்விளைவாக நோய்த்தொற்று எளிதாக பரவுகிறது . இதில் முழுக்க விலங்குகளை குற்றம்சாட்ட முடியாது . ஆனால் அவற்றின் தொடர்பு வழியாக நோய்த்தொற்று எளிதாக பரவும்

காடுகளை அழித்தால் இனி வரும் காலத்தில் நுண்ணுயிரிகளின் தாக்குதல் கூடும்!

படம்
மரங்களை அழித்தால் நோய் பரவும் ! சோனியா ஷா , எழுத்தாளர் . ஆங்கிலத்தில் : சோபிதா தர் நீங்கள் 2016 ஆம் ஆண்டு எழுதிய பான்டெமிக் என்ற நூலில் கொரோனா தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று முன்னரே கணித்து எழுதியுள்ளீர்கள் . எப்படி ? 2010 ஆம் ஆண்டு ஹைதியில் காலரா பாதிப்பு ஏற்பட்டது . பொதுவாக நாம் காலராவை ஏழைகளுக்கு வரும் நோய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் . ஆனால் காலரா பாதிப்பு நியூயார்க் , லண்டன் , பாரிஸ் ஆகிய பகுதிகளை பாதித்தது . இதனை நீங்கள் எப்படி புரிந்துகொள்வீர்கள் . நான் சீனாவில் இன்று நோய் பாதித்துள்ள பகுதிகளை முன்னரே சென்ற பார்வையிட்டுள்ளேன் . த வைரஸ் தாக்குதல்கள் பலமுறை ஒருவரைத் தாக்கும் என்பதை நோய்களின் வரலாறு பற்றி படித்தாலே அறிய முடியும் . நீங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் 300 வைரஸ் கிருமிகள் உருவாகியுள்ளதாக கூறுகிறீர்களே ? அது எப்படி ? நான் கூறியது உண்மைதான் . ஏறத்தாழ உலகில் பரவிய நோய்களில் 60 சதவீதம் விலங்குகள் மூலம் பரவியதுதான் . மிருகங்கள் இன்று வெப்பமயமாதல் மூலம் மனிதர்களின் வாழிடங்களுக்கு நெருக்கமாக வாழ்ந்த