வௌவால்களை ஆராய்வது எளிதல்ல - குளோரியானா சாவேரி
உயிரியலாளர் குளோரியானா சாவேரி, கோஸ்டாரிகா பல்கலைக்கழகம்.
மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு, கோஸ்டாரிகா. இங்குள்ள கோஸ்டாரிகா பல்கலையில் உயிரியலாளராகப் பணியாற்றி வருபவர், குளோரியானா சாவேரி (Gloriana Chaverri). இவர் ஒற்றை இழை வலை (fine-corded monofilament net) மூலம் 20 இனத்தைச் சேர்ந்த 125 வௌவால்களை எளிதாகப் பிடித்து ஆராய்ந்துள்ளார்.
வௌவால்களை எப்படி பிடிக்கிறீர்கள்?
கோஸ்டாரிகா பகுதியில் உள்ள காட்டில், வௌவால்களை இரவு நேரத்தில் தான் பிடித்தோம். இரவு 6முதல் 8 மணிக்குள் நிலத்திற்கு அருகில் வலைகளைக் கட்டி வைக்கிறோம். இரவு நேரத்தில் உணவு தேடுவதில் வௌவால்கள் வேகம் காட்டும். சூரியன் மறைந்தபிறகு, வலையை விரித்து நள்ளிரவு வரை காத்திருப்போம். எங்களது வலையில் மாட்டிக்கொண்ட வௌவால்கள் அதிலிருந்து விடுபட, இழைகளைத் தீவிரமாக கடிக்கும். அவை,எளிதில் துண்டிக்க முடியாதவை. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை வலையைச் சோதிப்போம்.
வௌவால்களைப் பிடிக்க பல்வேறு வலைகளை சோதித்திருப்பீர்கள். என்ன வேறுபாடுகளைப் பார்க்கிறீர்கள்?
கோஸ்டாரிகாவில் 2013ஆம் ஆண்டுதான் ஒற்றை இழை வலையை நான் பார்த்தேன். அதில் வௌவாலைப் பிடிக்க முடிந்தது. எனவே, நானும் மலிவான விலை கொண்ட ஒற்றை இழை வலையை வாங்கி பயன்படுத்தினேன். இதில் பிடிக்கவே முடியாது என கருதிய உயிரினங்களைப் பிடிக்க முடிந்தது. பின்னர், உருகுவேயில் திட்டம் ஒன்றுக்காக பணியாற்றியபோது, ஒற்றை இழை வலையைப் பயன்படுத்தினேன். அதில் கிடைத்த முடிவுகளை ஆராய்ச்சியாளர்களிடம் பகிர்ந்தேன். அவர்கள், ‘எப்படி உன்னால் இத்தனை வௌவால்களைப் பிடிக்க முடிந்தது’ என வியந்தனர். இந்த வலை பற்றி பலருக்கும் தெரியாது என்பதால், இதுபற்றிய செய்தியை வெளியிட நினைத்தேன்.
நுட்பமாக நெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தினால், உயிரினங்களைப் பிடிக்க முடியாது என ஆய்வு ஒன்று வெளியானது. இதைப்பற்றி தங்களது கருத்து?
வௌவால்கள் சாதாரண வலைகளை எளிதாக கடித்து, துண்டித்துவிட்டு பறந்துவிடும். இதைப்பற்றி ஆராய்ந்த குழுவினர் ஒற்றை இழை வலையை சரியாக சோதிக்கவில்லை. நிறைய ஆய்வுகள் நீங்கள் கூறியபடிதான் தகவலை வெளியிட்டுள்ளன என்பது உண்மை. ஆனால் நாங்கள் ஆய்வுக்கு ஒற்றை இழை வலையைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.
https://www.scientificamerican.com/article/ultrathin-nets-catch-overlooked-bats/
கருத்துகள்
கருத்துரையிடுக