ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்குமான நுழைவாயில்!

 













ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நுழைவாயில்! 

அண்மையில், தோராயமாக 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கண்டம் மறைந்துபோனதாக ஆராய்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இங்கு, ஆசிய உயிரினங்களும், தனித்துவமான தாவரங்களும் இருந்ததாக ஆராய்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. 

மறைந்துபோன கண்டத்தின் பெயர், பால்கனாடோலியா (Balkanatolia). இந்த கண்டம், ஆசியா, ஐரோப்பாவிற்கு பாலமாக இருந்துள்ளது. இதன் வழியாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவிற்கு செல்ல முடிந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்நீர் பரப்பு குறைவாக இருந்த காலம் அது. அப்போதுதான் இரு பகுதிகளுக்கும் இடையில் பாலம் உருவாக்கப்பட்டது. 

3.4 கோடி ஆண்டுகளுக்கு, முன்னர் ஐரோப்பாவில் உள்ள தாவர இனங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அழிந்துபோயின. இந்த நிகழ்ச்சிக்கு கிராண்டே கூப்பூர் (Grande Coupure)என்று பெயர். இச்சமயத்தில் ஆசிய தாவர, விலங்கு இனங்கள் மெல்ல ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றன. 

”தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆசிய விலங்குகள் எப்போது, எப்படி இடம்பெயர்ந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும் துல்லியமாக இல்லை” என்றார் ஆய்வாளரான அலெக்சிஸ் லிச்ட்.  ஐரோப்பாவின் பால்கன் (Balkans) பகுதியில், அகழ்வராய்ச்சியாளர்கள் படிம பொருட்களை ஆராய்ந்தனர். இதன் வழியாக, ஆசிய தாவரங்கள், விலங்குகள் ஐரோப்பாவுக்கு வந்த காலத்தைத் தோராயமாக மதிப்பிட்டனர். இதன்படி, இயற்கை பேரிடரால் ஐரோப்பாவில் தாவர, விலங்கினங்கள் அழிவதற்கு 50 லட்சம் அல்லது 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக, ஆசிய உயிரினங்கள் அங்கு சென்றுள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

பால்கன் பெனிசுலா, அனடோலியா என இரு பகுதிகளையும்  அலெக்சிஸ் லிச்ட், பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மைய ஆய்வாளர்களும் ஒன்றாக இணைந்து ஆராய்ந்து வருகின்றனர். இவர்கள், இதுவரை அங்கு கிடைத்த படிம பொருட்களை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.  தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய மறைந்த கண்டத்தை வரைபடமாக மறு உருவாக்கம் செய்தனர். நீரில் மூழ்கி அழிந்த இப்பகுதியை மீண்டும் உருவாக்கி தற்காலத்தில் எப்படியிருக்கும் என்பதையும் காட்டியுள்ளனர். 

தொடக்கத்தில் தனி கண்டமாகவே இருந்தது, பால்கனடோலியா. பிறகு, கடல்நீர்மட்டம் அதிகரித்ததால் ஆசியா, ஐரோப்பா கண்டங்கள் ஒன்றாக இணைந்துள்ளன. அன்டார்டிக் பனிப்பாறைகள், புவித்தட்டு நகர்வு ஆகியவையும் இந்த இணைவுக்கு பிற காரணங்களாகும்.    கண்டங்கள் ஒன்றாக இணைந்த காரணத்தால் எலிகள் (Rodent), குளம்பு கொண்ட விலங்கினங்கள்  ( Hooves) பால்கனாடோலியா  வழியாக ஐரோப்பாவிற்கு இடம்பெயர்ந்துள்ளன.  அந்த நிலப்பரப்புகளில் கிடைத்த விலங்குகளின் எலும்புகளை வைத்தே மேற்சொன்ன முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். 


Sciencealert

https://www.sciencealert.com/a-forgotten-continent-may-have-helped-asian-mammals-colonize-europe-34-million-years-ago?utm_source=ScienceAlert+-+Daily+Email+Updates&utm_campaign=d44c7d0a3d-MAILCHIMP_EMAIL_CAMPAIGN&utm_medium=email&utm_term=0_fe5632fb09-d44c7d0a3d-365477489

கருத்துகள்