தொன்மைக்கால மக்களை அழித்த எரிமலைக் குழம்பு!












தொல்குடியிருப்புகளை மூழ்கடித்த எரிமலைக் குழம்பு!



மெக்ஸிகோவின் உள்ள மெக்ஸிகோ சிட்டியில் அமைந்துள்ளது, போபோகாடெபெட்ல் (Popocatepetl) எரிமலை. உலகிலேயே ஆபத்தான எரிமலை என்று புவியியல் வல்லுநர்களால் கூறப்படும் எரிமலை இது. கடந்த 23 ஆயிரம் ஆண்டுகளாக லாவா குழம்பை வெளித்தள்ளி வருகிறது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளை அறியும்போது, எளிதாக எதிர்கால வெடிப்புகளைக் கணிக்க முடியும் என புவியியல் வல்லுநர்கள் நம்புகிறார்கள். இதற்காக, லாவா குழம்பு, இதனால் உருவான பாறைகளையும் ஆய்வு செய்து கனிமங்களை  அடையாளம் கண்டறிந்து வருகிறார்கள். 

”நாங்கள் இப்போது செய்யும் ஆராய்ச்சி மூலமாக எரிமலை வெடிப்பு நடந்தபோது உள்ள சூழ்நிலைகளை அறிய முடியும். ஒருவகையில் எரிமலையின் கடந்தகால வரலாற்றை மறு உருவாக்கம் செய்ய தகவல்களை சேகரித்து வருகிறோம்” என்றார் புவியியல் ஆய்வாளர் இஸ்ரேல் ராமிரெஸ் உரைப். 

ஹவாயில் உள்ள எரிமலைகளில் வெடிப்பு வேகமும், அடர்த்தியும் குறைவு. நிலப்பரப்பில் தினசரிக்கு 1 - 33 மீட்டர் நீளத்திற்கு பரவுகிறது. ஆனால்  மெக்சிகோவில் உள்ள போபோ எரிமலை வெடித்து வெளியேறும் லாவாவின் அடர்த்தி அதிகம். லாவா குழம்பில் ஏராளமான கனிமங்கள் உண்டு. எரிமலை வெடித்து நிலப்பரப்பில் லாவா பரவும்போது மனிதர்களுக்கு உடனே பாதிப்பு ஏதும் நேராது. ஆனால் நாளடைவில் லாவா குழம்பு பரவிய நிலப்பரப்பு, பயிர் விளையும் தன்மையை இழக்கும். 

இங்கு தொல்பொருள் அகழாய்வு செய்யும் இடமான டெடிம்பா உள்ளது. இந்த இடம் முழுக்க எரிமலைக்குழம்பின் படிவுகள், சாம்பல் நிறைந்திருந்தன. தொன்மையான மெக்சிக மக்கள் இங்கு வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 30 முதல் 100 மீட்டர் அளவில் தோண்டியெடுத்து அகழ்வராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 

டெடிம்பாவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். இது மக்கள் வாழும் குடியிருப்புக்கு வெளியே இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். மக்கள் வாழ்ந்த தொல் குடியிருப்பு பல மீட்டர் அளவில் தேங்கிய லாவா குழம்பால் மூடப்பட்டிருக்கிறது. இதனால்தான் துல்லியமான அந்த இடத்தை இன்னும் எங்களால் கண்டறிய முடியவில்லை என்றார் புவியியல் ஆய்வறிக்கையின் துணை எழுத்தாளரான கிளாஸ் சீபே.  


 

https://phys.org/news/2022-03-nealtican-lava-field-popocatpetl-volcano.html

கருத்துகள்