கண்களைக் கவரும் சாக்லெட் மலை!

 









கண்களைக் கவரும் சாக்லெட் மலை!

பிலிப்பைன்ஸ் நாட்டில் போஹோல் தீவு (Bohol island)உள்ளது. இங்கு சிறிய, வட்டமான, பழுப்பு நிறமான மலைகள்  உள்ளன. இவை பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சாக்லெட்டுகளைப் போல காட்சியளித்தன. இதன் காரணமாகவே, இம்மலைக்கு சாக்லெட் மலை என்று பெயர். இதனைச் சுற்றிலும் மழைக்காடுகள், அரிசி வயல்கள் காணப்படுகின்றன. 

இத்தீவில் டார்சியர் (Philippine tarsier)எனும் சிறு விலங்கு காணப்படுகிறது. இதனை உலகின் சிறிய விலங்கு என்று விலங்கியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த விலங்கு,  தனது கூர்மையாக பார்வைத்திறன் மூலம் இரவில் பூச்சிகளை வேட்டையாடுகிறது. இந்த சிறுவிலங்கை காப்பாற்ற இப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வருபவர்களுக்கு, டார்சியர் சரணாலயம் ஈர்ப்பூட்டும் இடமாக உள்ளது.  

சாக்லெட் மலை, முழுக்க சுண்ணாம்புகல் பாறையால் உருவாகியுள்ளது. இதனை சுற்றிலும் புற்கள் வளர்ந்துள்ளன. சுண்ணாம்புக்கல் என்பது பவளப்பாறையால் உருவாகிறது. இத்தீவில் காலப்போக்கில் பெய்த மழைப்பொழிவு, சுண்ணாம்புக்கல் பாறையின் வடிவத்தை மாற்றியிருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். 

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், சாக்லெட் பாறை பகுதி கடலுக்கு அடியில் இருந்தது. பவளப்பாறைகள் கடல் படுகைகளில் உருவாகியிருந்தன. கண்டத்திட்டு நகர்வால் பவளப்பாறைகள் நிலப்பகுதிக்கு வந்தன. இவற்றில் பலவும் உடைந்து மாறுதல்களை அடைந்து மலைகளாகின.  இவ்வாறு சாக்லெட் மலை உருவானதற்கான காரணத்தை புவியியலாளர்கள் கூறுகின்றனர். 

இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில்  மலைகள் அமைந்துள்ளன. இவை அனைத்துமே தோற்றத்தில் ஒன்றுபோலவே இருக்கின்றன. இதில் உயரமான மலை என்பது  120 மீட்டர் உயரம் கொண்டது. மழைபெய்யும்போது பச்சை நிறத்திலும், வெயில் காலத்தில்  புற்கள் காய்ந்துபோய், பழுப்பு நிறமாகவும் தெரியும். 


amazing earth the most incredible places from around the world



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்