தசை இயக்கம் பற்றிய அறிவை ஆய்வாளர்கள் பெற உதவியவர்! - ஜீன் ஹான்சன்
ஜீன் ஹான்சன் (Jean hanson 1919-1973)
இங்கிலாந்தின் டெர்பிஷையர் நகரில் பிறந்தவர். பெற்றோர் டாம், எமிலி ஹான்சன் 1951ஆம் ஆண்டு லண்டனில் உள்ள கிங் கல்லூரியில் படித்து முனைவர் பட்டம் பெற்றார். தான் வாழ்நாளின் இறுதிவரை, இதே கல்லூரியில்தான் உயிரி இயற்பியலில் ஆராய்ச்சி செய்தார் ஜீன் ஹான்சன்.
1953ஆம் ஆண்டு ஹியூ ஹக்ஸ்லே என்ற ஆராய்ச்சியாளரைச் சந்தித்தார். இவரின் ஆதரவுடன் எம்ஐடியில் ராக்ஃபெல்லர் உதவித்தொகையுடன் மின்னணு நுண்ணோக்கியில் தசைகளின் இயக்கம் பற்றி ஆராய்ச்சி செய்தார். தசை, அதிலுள்ள புரதம் சார்ந்த இயக்கம் பற்றிய ஆராய்ச்சியை செய்தார். இதற்குப் பிறகு முதுகெலும்பில்லாத உயிரினங்களின் தசைகளைப் பற்றி ஆராய்ந்தார்.
1966ஆம் ஆண்டு கிங் கல்லூரியில் உள்ள உயிரி இயற்பியல் துறையின் தலைவரானார். ஜீனின் தசை இயக்கம் பற்றிய ஆராய்ச்சி விளையாட்டு வீரர்கள் எப்படி வேகமாக ஓடுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்ள உதவியது. இதயத்தசைகளை அறுவை சிகிச்சை செய்வது, காயங்களிலிருந்து உடல் மீள்வது பற்றிய அறிவை அடுத்த தலைமுறை ஆராய்ச்சியாளர்கள் பெற ஜீன் உதவினார்.
https://kingscollections.org/exhibitions/archives/hanson/
https://www.jstor.org/stable/769685
கருத்துகள்
கருத்துரையிடுக