சீன வாத்து எப்படி வீட்டு விலங்காக மாறியது?
வீட்டு விலங்கான சீன வாத்து!
வீட்டு விலங்காக வளர்க்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் வாத்தும் இடம்பிடித்துள்ளது. இந்த வாத்து, சீனாவில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு வளர்க்கப்பட்ட சீன வாத்து (
), வீட்டு விலங்கு என ஜப்பான் சப்போரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இத்தகவலைக் கூறியுள்ளனர். இந்த வகையில் வாத்துகள் பண்ணையில் வளர்க்கப்பட்டது என்ற செய்தி உறுதியாகியுள்ளது.
சீனாவில் தியான்லுவோசன் எனும் அகழ்வராய்ச்சி இடம் உள்ளது. கற்காலகட்ட கிராமப் பகுதியான இதன் வயது 7000 - 5500 காலகட்டம் என அறியப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 232 வாத்துகளின் எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், வாத்துகள் பண்ணை விலங்காக வளர்க்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது என ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதில் நான்கு வாத்துகளின் எலும்புகள், முதிர்ச்சியடையாதவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் வயது 18 வாரங்கள் ஆகும். கார்பன் வயதுக் கணிப்பு மூலம், வாத்துகள் உள்ளூரைச் சேர்ந்தவை என மதிப்பிடப்பட்டுள்ளன.
”பண்ணை விலங்காக வாத்துகளை மனிதர்கள் வளர்த்திருப்பது இதன் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் இது முக்கியமான ஆய்வு” என பிரான்சின் மானுடவியல் மற்றும் மரபணுவியல் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆப்ஹெலி கூறினார். கதிர்வீச்சு கார்பன் கணிப்பு முறையில் வயதைக் கணிப்பது இன்னும் துல்லியமானது என சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுவிலங்காக வாத்துகள் வளர்க்கப்பட்டது எனில், முதலில் வீட்டு விலங்கானது என்ற பெருமையை வாத்து பெறும்.
2014ஆம் ஆண்டு வெளியான ஆய்வுப்படி, கோழிகள் 10 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே வீட்டுவிலங்காக்கப்பட்டது என ஆய்வுத்தகவல் வெளியானது. இதற்கு கோழியின் எலும்பில் உள்ள டிஎன்ஏ முக்கிய காரணமானது.
new scientist mar 12,2022
Geese may have been the first birds to be domesticated
michael marshall
கருத்துகள்
கருத்துரையிடுக