நிலப்பரப்பு சார்ந்த இயல்புகளைக் கண்டறிந்த ஆய்வாளர்! - ஃபிராங்க் மரியன் ஆண்டர்சன்













ஃபிராங்க் மரியன் ஆண்டர்சன் (Frank Marian Anderson
1863-1945)

ஃபிராங்க், அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஏழாவது பிள்ளை. பெற்றோர், சிறுவயதில் காலமாகிவிட மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார். தான் வாழ்ந்த ரோக் ரிவர் வேலி பகுதியில் உள்ள கனிமங்கள், படிமங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1889ஆம் ஆண்டு ஒரேகானின் சேலத்தில் இருந்த வில்லமெட்டெ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பள்ளியில் ஆசிரியராகி இலக்கணம் கற்பித்துக்கொண்டிருந்தபோதுதான் பேராசிரியர் தாமஸ் காண்டன் அறிமுகம் கிடைத்தது. போர்ட்லேண்டில் நடைபெற்ற டேவிட் ஸ்டார் ஜோர்டான் என்பவரின் உரையைக் கேட்டபிறகு, புவியியல் துறையை தொழிலாக ஏற்றார் ஃபிராங்க். 

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஜே.எஸ். டில்லரின் உதவியாளராக பணியாற்றினார். 1897இல் எம்.எஸ். பட்டத்தைப் பெற்றவர்,  கலிஃபோர்னியா மாகாண சுரங்க அமைப்பில் களப்பணி உதவியாளராக பணியாற்றினார். 1930ஆம் ஆண்டு, கிரிடாசியஸ் டெபாசிட்ஸ் ஆஃப் நார்த்தர்ன் ஆண்டிஸ் (Cretaceous deposits of northern andes) என்ற ஆய்வை செய்து முனைவர் பட்டம் பெற்றார். துலேர் (Tulare), சான்ஜோக்குயின் (San joaquin), எட்ச்கோயின் (Etchgoin), டெம்ப்ளோர் (Temblor), கிரெயென்ஹாஜென் (Kreyenhagen) ஆகிய நிலப்பரப்பு சார்ந்த இயல்புகளைக் கண்டறிந்தார். பட்டன்பெட் சாண்ட்ஸ்டோன் என்பதை வரையறுத்துக் கூறிய ஆய்வாளர் இவரே.

https://archives.datapages.com/data/bull_memorials/030/030004/pdfs/636.htm

http://www.sjvgeology.org/history/geologists.html


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்