தம்பிக்காக தியாக மெழுகுவத்தியாகும் அண்ணன்! - கிருஷ்ணபாபு - பாலைய்யா, மீனா, மந்த்ரா

 












கிருஷ்ணபாபு

பாலைய்யா, மந்த்ரா, அப்பாஸ் 

இயக்கம் - முத்தியாலா சுப்பையா

வசனம் - தொட்டபள்ளி மது 

கதை - சாந்தி அட்டாலா






பாலைய்யா பெரிய ஜமீன்தாரின் மகன், அவரின் அப்பா பெண்களின் சபலமான ஆள். இப்படி இருக்கும்போது அவர் இன்னொரு பெண்ணை மணந்துகொள்கிறார். அந்த பெண்ணின் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து ஜமீன்தாரின் அதிகாரப்பூர்வ முதல் மனைவியைக் கொல்ல நினைக்கிறார்கள். ஆனால் தவறுதலாக மனைவிக்கு கொடுத்த விஷப்பாலை ஜமீன்தார் எடுத்து குடித்துவிட அவர் ரத்தவாந்தி எடுத்து பரலோக பிரவேசமாகிறார். இந்தப்பழி சிறுவனின் மீது சித்தியும் அவரது உறவினர்களும் போட சிறுவன் கிருஷ்ணபாபு சிறைக்கு செல்கிறான். அவனது அம்மா இந்த சோகம் தாங்காமல் இறந்துபோகிறார். இந்த நேரத்தில் கிருஷ்ணபாபுவின் தாய்மாமா தான் அனைத்து விஷயங்களையும் பார்த்து சொத்துக்களைப் பராமரிக்கிறார். கிருஷ்ணபாபு சிறையில் இருந்து வந்து என்ன செய்கிறார், தந்தை, தாய் இறப்புக்கு காரணமான சித்தி வகையறாக்களை பழிவாங்கினாரா இல்லையா என்பதே கதை. 

படம் முழுக்க புத்திசாலித்தனமாக விஷயங்கள் என்பது கிளைமேக்ஸில் வரும் தம்பியைக் காப்பாற்றுவது மட்டுமே. வேறு எதுவும் கிடையாது. மற்றபடி தியாகம் செய்து தனது குடும்பத்தை சொத்துக்களை எப்படி பாதுகாக்கிறார் என்பதே படத்தின் முழுமையான கதை. 

பாலைய்யா படத்தின் இரண்டு முறை சிறைக்கு செல்லும்போது படத்தின் 75 சதவீதம் முடிந்துவிடுகிறது. மீதி 25 சதவீதத்தை அவரை சிறையில் பார்த்துக்கொண்டு வார்டன் வந்து முடித்து வைக்கிறார். அவர் வந்து தனது வாழ்க்கை பற்றி சொல்லும்போதே, மந்த்ரா யார் என்பது பார்வையாளர்களுக்கு தெளிவாகிவிடுகிறது., ஏனெனில் அப்போது கிருஷ்ணபாபு, ஆருயிர் காதலியை நுங்கு சீவுவது போல கழுத்தை சீவி கொன்றிருப்பார். ஐயையோ வேண்டுமென்று கிடையாது. தற்செயலாகத்தான் . 

பிறகு, வரும் ஒரே நாயகி மந்த்ராதான். அவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கிருஷ்ண பாபுவுக்கு வரும். அதனால் அவரை தன் வீட்டில் வைத்து பார்த்துக்கொள்வார். மெல்ல மக்களுக்காக உழைக்க தொடங்குவதற்கு அவர்தான் உதவுகிறார். மந்த்ரா தொடர்பான காட்சிகள், மீனாவின் காட்சிகளை விட சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. மீனா குடும்பத்தினரின் தொடக்க காமெடி காட்சிகள் நன்றாக உள்ளன. அதை தவிர படம் நெடுக வன்மமும், பழிக்குப்பழி வாங்கும் உணர்ச்சியும்தான்.... 

படத்தில் முக்கியமான விஷயங்கள் குற்றமும், குற்றவுணர்ச்சியும்தான். முதல் காட்சியை நாயகனுக்கு பில்ட் அப்பாக வைப்பார்கள் என்றால் படத்தில் அதுவும் வில்லனுக்கு சாதகமாகவே இருக்கிறது. இப்படி படம் முதல் காட்சி தொடங்கி இறுதிவரையில் பாலைய்யாவுக்கு பாதகமாகவே போகிற படம். இறுதியில் அவர் சிறைக்கு செல்லும் முடிவை எடுக்கும்போதும் பெரிய ஆச்சரியமில்லை. இதில் மீனா, மந்த்ரா ஆகியோருடன் வெளிநாடுகளில் ஆடும் பாடல்கள் படத்தில் அபரிமிதமாக பெருகும் சோகத்தை சற்றே மட்டுப்படுத்துகின்றன. ஐந்து நிமிடங்களுக்குத்தான். படம் நெடுக சோகமான தொனி தான் உள்ளது. 

பிறரது வாழ்வுக்காகவே தனது வாழ்க்கையை அழித்துக்கொண்ட மனிதனின் கதைதான் கிருஷ்ண பாபு. 

தியாக மெழுகுவத்தி

கோமாளிமேடை டீம் 











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்