சிக்கலான புரதங்கள் பற்றிய ஆராய்ச்சி செய்தவர்! - ஃபெலிக்ஸ் ஹாப்பே செய்லர்
ஃபெலிக்ஸ் ஹாப்பே செய்லர் (Felix hoppe-seyler
1825-1895)
ஃபெலிக்ஸ் உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆகிய துறைகளை தோற்றுவித்த ஆய்வாளர்களில் ஒருவர் என கருதுகின்றனர். இவர், ஜெர்மனியின் ஃபிரெபர்க் நகரில் பிறந்தார். ஒன்பது வயதில் பெற்றோரை இழந்தார். ஃபெலிக்ஸின் உறவினரான மருத்துவர் செய்லரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.
1850ஆம் ஆண்டு பெர்லின் நகரில் படித்து தேர்ச்சி பெற்று மருத்துவரானார். 1860ஆம் ஆண்டு பெர்லின் நகரில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். 1862ஆம் ஆண்டு, இவர் மனித உடலில் உள்ள ஹீமோகுளோபின் பற்றி ஆராய்ந்தார். இதன் வழியாக தாவரங்களில் உள்ள குளோரோபில் வேதிப்பொருள் மூலம் நடைபெறும் ஒளிச்சேர்க்கை பற்றிய முக்கியமான ஆய்வை செய்தார்.
புரோட்டெய்ட்ஸ் (Proteids) எனும் சிக்கலான புரதங்கள் பற்றிய ஃபெலிக்ஸின் ஆராய்ச்சி முக்கியமானது. 1877ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் பிசியாலஜிகல் கெமிஸ்ட்ரி என்ற இதழைத் தொடங்கி, 1895ஆம் ஆண்டு காலமாகும்வரை அதன் ஆசிரியராக செயல்பட்டார்.
https://www.encyclopedia.com/science/dictionaries-thesauruses-pictures-and-press-releases/hoppe-seyler-felix
கருத்துகள்
கருத்துரையிடுக